Friday, July 31, 2009

எவ்வளவு ?

இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் இராமர் அதிகமான தான தற்மங்களைச் செய்தாராம் . பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி , " ஸ்வாமி ! நான் நிறையத் தான , தர்மங்களைச் செய்தேன் . கோடிப் பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்குமா ? " -- என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் , " அப்பனே ! ஒரு சமயம் உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன் என்று உட்கார்ந்திருந்தவள் இடக் கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் . அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " --- என்றாராம் . இராமர் தலை குனிந்தாராம் .
--- ' தாயின் மகிமை ' பற்றி என். டி. ராஜகோபால் சர்மா அவர்கள் கூறியது .

Thursday, July 30, 2009

`அப்படியா...

தொலைபேசி ஒழுங்குமுறை { டிராய் } 2 முதல் 8 வரையிலான எண்களை லேண்ட் லைன்களுக்கும் , 0 -வை எஸ். டி . டி . க்கும் , சிறப்பு எண்களுக்கு 1 -ம் கொடுத்தது போக , மீதமுள்ள 9-ஐ செல்போன்களுக்கும் கொடுத்ததால் தான் , எல்லா செல்போன் எண்களும் 9-ல் ஆரம்பிக்கின்றன .
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தங்கும் மாளிகை வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது . இது 1800-ம் ஆண்டு கட்டப்பட்டது .இதில் 100 அறைகள் உள்ளன . மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகை , ஜரிஷ் நாட்டு கட்டிட நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது .
வானத்தில் சில நேரம் அதிசயமான வர்ண்ஜாலங்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியும் . இவற்றை ' அரோரா ' என்று குறிப்பிடுவர்கள் . சூரிய ஒளிக்கதிர் துருவப்பகுதியில் பட்டு அதன் பிரதிபலிப்பே வானத்தில் இந்த வர்ண ஜாலங்கள் உருவாகிறது
ஜோதிட விதிப்படி இந்திய நாட்டின் நட்சத்திரம் ' பூசம் ' ஆகும் .
சொந்தமாக தேசியகீதம் இல்லாத ஒரே நாடு சைப்ரஸ் ஆகும் . கிரீஸ் நாட்டு தேசியகீதத்தைத்தான் சைப்ரஸ் நாடும் தனது தேசியகீதமாக பயன்படுத்தி வருகிறது . ., .
வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காத ஜீவராசி எது தெரியுமா ? பல்லி . அப்படியென்றால் மூத்திரம் எப்படிப் போகிறதென்று நீங்கள் கேட்கலாம் . அது மூதிரமல்ல , ' யூரிக் ஆசிட் ' தான் மலமாக வெளியேறுகிறது . -- பாக்யா . ஏப்ரல் 3 -- 9 . 2009 .

Wednesday, July 29, 2009

' கோயம்பேடு "

தமிழ்.நாட்டின் தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள பஸ் நிலையம் , காய்கறி மார்க்கெட் பகுதியான் ' கோயம்பேடு ' முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .இன்று ' கோயம்பேடு ' ஒரு மாபெரும் நகரத்தின் குறியீடாக , பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள் , சந்தைகள் , கடைகள் , போக்குவரத்து நிலையங்கள் என்று உருமாறி இருந்தாலும் , இங்கே மகத்தான வரலாற்று மற்றும் புராணச் சிறப்புகள் புதைந்து கிடப்பதன் மவுன சாட்சியாக பல யுகங்களாய் நிமிர்ந்து நிற்கிறது குறுங்காலீஸ்வரர் கோயில் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் அற்புதமான 14 தமிழ் கல்வெட்டுக்கள் அதன் சரித்திரத்தை நமக்கு அழகாக உணர்த்துகின்றன . கல்வெட்டுக்கள் மட்டுமல்ல , அருணகிரிநாதரின் திருப்புகழ் வழியாகவும் ,வால்மீகி முனிவரின் ராமாயணம் வழியாகவும் இக்கோயிலின் புராண வரலாறு நமக்குத் தெரிய வருகிறது .அக்காலத்தில் கோயம்பேடு , கோசை நகர் ,குசலவரி , குசலவபுரம் , பிராயச்சித்தபுரம் , கோயட்டிபுரம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது .
ஒரு காலத்தில் அடர்ந்த கானகமும் , கொடிய விலங்குகளும் திரிந்த இந்தப் பகுதியைச் சீர் செய்து ஆசிரமம் அமைத்தார் மாமுனி வால்மீகி என்று சொல்கிறது புராண வரலாறு . கோயம்பேடு கானகத்தில் தனித்து விடப்பட்ட சீதாப்பிராட்டியாரை மீட்டு , பாதுகாப்பு அளித்த வால்மீகி முனிவர் , அங்கே சீதா பிராட்டியார் பெற்றெடுத்த லவ , குச சகோதரர்களுக்கு கல்வி அறிவையும் , வேறு பல வித்தைகளையும் கற்றுக்கொடுத்தார் .
அப்போது நிகழ்ந்த போரில் ராமபிரானுக்கே அவருடைய மகன்களை வால்மீகி அறிமுகம் செய்து வைத்தார் என்கிறது ராமாயண புராணம் . அப்படிப்பட்ட புராதன சிறப்புகள் நிகழ்ந்த பகுதிதான் இன்றைய கோயம்பேடு . இந்த கோயிலுக்கு குலோத்துங்க சோழன் , விஜயநகரப் பேரரசர் வீரபுக்கராயர் மற்றும் பல்லவர்கள் திருப்பணி செய்ததும் வரலாற்றுச் செய்திகள்தான் .
-- ஆர். சுரேஷ் , திருச்சி . தினமலர் . சிறுவர்மலர் . மார்ச் 27 . 2009 .

ஐ.எஸ்.ஐ

ஐ.எஸ்.ஐ .என்றால்...
.ஒரு பொருளுக்கு ஐ.எஸ்.ஐ . , முத்திரை வழங்கும் முன் , தயாரிப்பாளர்கள் ஏராளமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் . முதலில் , நிறுவனம் வெளியிடும் தர நியமங்கள்படி பொருள் தயாரிக்க முடியுமா என்று கண்டறிதல் அவசியம் .
பிறகு , இத்தர நியமத்தின் படி தங்கள் பொருள்களை தயாரித்து , சோதனைச் சாலையில் பரிசோதித்து , பின் ' இந்திய தர நிர்ணய அமைவன'த்தை அணுகினால் , அதன் தொழில் நுட்ப அதிகாரிகள் , அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்து தயாரிப்பாளர்கள் தரமான பொருள்களை தயாரிக்க முடியும் என்று கண்டறிந்த பின்பே ஐ.எஸ்.ஐ .முத்திரையை குறிப்பிட்ட பொருள்களில் உபயோகிக்க அனுமதி வழங்குவார்கள் .
இந்த உரிமம் கூட ஒரு வருட காலத்திற்கு மட்டுமே . இந்த ஒரு வருட காலத்திலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தொழில் நுட்பாளர்கள் முன்னறிவிப்புடனோ , முன்னறிவிப்பு கொடுக்காமலோ , தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் செய்து , பொருள்கள் , அவர்கள் சொன்ன வழிமுறைகள் படி தயாரிக்கப்படுகின்றனவா என்று கண்டறிவர் .
அதையும் தவிர தொழிற்சாலைகளிலிருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் பொருள்கள் , யார் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து அந்த கடைகளுக்கோ , கோடவுன்களுக்கோ சென்று மாதிரி பொருள்களை எடுத்து வந்து மறுபடி அவர்களது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பார்கள் .
எல்லாவற்றிற்கும் மேலாக நுகர்வோர்கள் , கடைகளில் ஐ.எஸ்.ஐ. , முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக அறிந்தால் , அவர்கள் அருகில் உள்ள ' இந்திய தர நிர்ணய அமைவன' த்துடன் தொடர்பு கொண்டால் , அவர்களது ' புகார் நீக்கும் அதிகாரி ' உடனே குறைகளை களைய ஏற்பாடு செய்வார் .
ஐ.எஸ்.ஐ ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ . 50 ஆயிரம் வரை அபராதமும் , ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்க பாராளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது.
--- டி.ஆர். ராஜகோபால். இயக்குனர் , ' இந்திய தர நிர்ணய அமைவனம் ' ஜனவரி . 09 , 1994 தினமலர் இதழில்

Tuesday, July 28, 2009

பன்னிரு ஆழ்வார்கள் .

பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள் :
1 . பொய்கையாழ்வார்--------------------- காஞ்சி.
2 . பூதத்தாழ்வார் ----------------------------- திருக்கடன் மலை .
3 . பேயாழ்வார் ---------------- ----------------மயிலை .
4 . திருமழிசையாழ்வார்------------------திருமழிசை .
5 . நம்மாழ்வார் --------------- ----------------திருக்குருகூர் .
6 . மதுரகவியாழ்வார் ----- ----------------திருக்கோளூர்.
7 . குலசேகராழ்வார் --------------------- ---திருவஞ்சிக்களம் .
8 . பெரியாழ்வார் ------------------------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
9 . ஸ்ரீஆண்டாள் -------------- -----------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
10.தொண்டரடிப் பொடியாழ்வார் -- -திருமண்டங்குடி .
11. திருப்பாணாழ்வார் ------------------- --உறையூர் .
12. திருமங்கையாழ்வார் --------------- ---திருவாலி திருநகரி .
--- ' இதுவே வைணவம் ' நூலிலிருந்து

Monday, July 27, 2009

ஜபத்தின் பலன் !

* வீட்டில் சுத்தமான இடத்தில் அமர்ந்து இறைவன் நாமாவை ஜபம் செய்தால் பலன் ஒன்றுக்கு ஒன்று .
* நதிக்கரையில் அல்லது நீரோடைக் கரையில் பலன் ஒன்றுக்கு இரண்டு
* பசு கட்டிய இடத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் .
* யாகம் செய்த இடத்தில் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் .
* சுத்தமான கோயில்களில் ஒன்றுக்குப் பத்தாயிரம் மடங்கு பலன் .
* புனிதத் தலங்களில் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன் .
* மகான்கள் சித்தி பெற்ற இடத்தில் ஒன்றுக்கு கோடி மடங்கு பலன் .
--- ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , நூலிலிருந்து .

Sunday, July 26, 2009

பிரணவ மந்திரம் .

' ஓம் ' என்ற மந்திரத்தில் ' அ ' ' உ ' ' ம் ' என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருக்கிறது . இதில் ' அ ' என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியிலிருந்து சக்தியுடன் எழுந்து வருகிறது . ' உ ' என்பது நம்முடைய கண்டத்தில்லிருந்து புறப்படுகிறது . நாம் முடிக்கும் ' ம் ' என்ற எழுத்து இந்த உச்சரிப்பை , உதடுகளை மூடி முடித்து வைக்கிறது . இந்த மூன்றும் மொழியை அமைக்கும் ஒலிகளை பிரதிபலிக்கும் செயல்களாக அமைகின்றன . ஆரம்பம் , இடை , முடிவு என்ற நிலைகளையும் அவை காட்டுகின்றன . நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைத்திருக்கிறார்கள் . ஒவ்வொரு ஜீவனும் விழிப்பு , கனவு , உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் இணைத்து , உடலின் மூன்று பகுதிகளையும் சேர்க்கும் ' ஓம் ' என்ற மந்திரம் காட்டுகிறது . நாம் உட்கார்ந்து 'ஓம் ' என்று சொல்லும்போது , இந்தத் தத்துவத்தை முழுமையாக உணர வேண்டும் .
--- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்

Saturday, July 25, 2009

'புஷ்ப விதி '

வில்வம் , துளசி இவைகளை பூஜைக்குப் பின் எடுத்து வைத்து நீரில் கழுவி விட்டு மீண்டும் , மீண்டும் உபயோகிக்கலாம் . இது நிர்மால்யம் ஆகாது . தினமும் புதிதாக கொண்டு வர வேண்டுமென்பது இல்லை . --- 'புஷ்ப விதி ' என்ற நூலிலிருந்து .
நல்ல காரியம் செய்ய ...
அமாவாசை என்பது சூரியனும் , சந்திரனும் ஒன்று கூடும் தினம் . அன்று பிதுர் தேவதைகளுக்கு நாம் தர்பணம் செய்கிறோம் . அவர்களுடைய ஆசிகளை நாம் வேண்டினால் , அவர்களுடைய பூர்ணமான கிருபை நமக்குக் கிடைக்கும் . ஆகையால் , அமாவாசையன்று பிதுர் தேவதைகளை வேண்டிக்கொண்டு , எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் , அவர்களுடைய நல்லாசியினால் நன்மையே விளையும் என்பது நம்பிக்கை . --- ' இந்து மதம் பதிலளிக்கிறது ' நூலிலிருந்து

Friday, July 24, 2009

அனுமன் -- வாலி .

சேலத்தில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வாலி , இராவணனைப் பற்றி கூறிய கவிதை வரிகள் :
" குரங்கு என அதன் வாலில் தீ வைத்தானே ,
அது கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத்தானே !"
சாப்பாடு .
ஒரு ஆள் ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றான் . தன் இரவு சாப்பாட்டிற்கு கோழி ஒன்றை கொண்டு வரும்படி சர்வரிடம் ஆர்டர் கொடுத்தான் . சர்வர் கொண்டுவந்து வைத்த மாமிசத்தை சாப்பிட்டுவிட்டு ,
" இதன் ருசி கோழி மாமிசம் போல் இல்லையே ..." என்று சர்வரிடம் கேட்டான் .
சர்வர் : " எங்களுக்குப் போதுமான கோழிக்கறி கிடைக்கவில்லை . அதனால் கோழிக்கறியுடன் குதிரைக் கறியையும் சேர்த்தோம் " .
வாடிக்கைக்காரர் : " கோழிக்கறியுடன் எவ்வளவு குதிரைக்கறி சேர்த்தீர்கள் ?"
சர்வர் : " இது பாதி ; அது பாதி சேர்த்தோம் !"
வாடிக்கைக்காரர் : " அது எப்படி பாதிக்குப் பாதி ... அப்படியும் ருசி இல்லையே ...?"
சர்வர் : " அதாவது , ஒரு குதிரைக்கு ஒரு கோழி வீதம் சேர்த்தோம் .." என்றான் .
--- ( பிரதமர் ராஜிவ் காந்தி , தேசிய தலைநகர பிரதேச திட்ட போர்டின் முதல் கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில் தங்கள் மாநிலங்களுக்கு உரியதற்கு மேல் அதிக தொகை மத்ய அரசிடம் கோரும் மாநிலங்கள் பற்றிக் குறிப்பிட்டது . நாள் : 04 - 06 - 1985 . இடம் : புது டில்லி .

Thursday, July 23, 2009

வாய்பாடு

ஒரு குடிகாரனின் மகனிடம் வாய்பாடு கேட்டபோது :
16..... டிராப்..... = 1 அவுன்ஸ் .
24.....அவுன்ஸ்... = 1 பாட்டில் .
2.....பாட்டில்..... .= 1 கலகம் .
1.....கலகம்......... = 2 கைகலப்பு .
2....கைகலப்பு.. = 4 போலீஸ் .
4 ...போலீஸ்.... .= 1 மாஜிஸ்ட்ரேட் .
1..மாஜிஸ் ட்ரேட் = 2 வருஷம் .
---- 24 - 06 - 1989 .

Wednesday, July 22, 2009

வின்ஸ்டன் சர்ச்சில்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது , பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் , இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார் . அதில் :
" 40 ஆண்டுகாலமாக எங்களின் நேரடி விரோதியாகா இருந்த காந்தியைக் கொல்ல நாங்கள் நினைத்ததில்லை , சுதந்திரம் பெற்ற 2 ஆண்டுகளில் உங்கள் நாட்டு மதவெறி கொன்றுவிட்டதே " -- 23 - 09 - 1988 .

Monday, July 20, 2009

பிஇஓஎஸ்.

மூளை பொய் சொல்லுமா ?
பிஇஓஎஸ்.
மூளையில் தகவல்களுக்கு ஏற்ப உருவாகும் எதிர்வினைகளை அவற்றின் பல்வேறு மட்டத்தில் கண்டறிவதுதான் Brain Electrical Oscillations Signature என்ற இந்த டெக்னிக் . ஈஈஜி பதிவுகள் மூலம் ஒரு நபர் ஒரு விஷயத்தைக் கேட்கும்போதோ பார்க்கும்போதோ உண்டாகும் மாறுதல்களை கவனிப்பர் . அந்தக் காட்சி , அந்த மனிதரின் மூளையில் ஏற்கனவே பதிந்துள்ள தகவல்களைத் தூண்டுவதாக இருந்தால்தான் மாறுதல்கள் பதிவாகும் .
நார்கோ அனாலிஸிஸ் .
சோடியம் பெண்டதால் அல்லது சோடியம் அமிதால் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தி நரம்பு மண்டலத்தில் செயல்படுவதன்மூலம் ஒருவருடைய உஷார் தன்மை குறைக்கப்படுகிறது . இந்த மருந்துகள் வேலைசெய்யும் போது ஒருவரால் பொய் சொல்வது கடினம் என்று கூறப்பட்டுகிறது . தூக்கம் போன்ற இந்நிலையில் ஒருவர் தன்னிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வார் .
பொய் கண்டறியும் கருவி .
ஒரு மனிதரின் மனரீதியிலான எதிர்வினைகளைக் கணக்கிடும் கருவிகள்தான் பாலிகிராப் அல்லது பொய் கண்டறியும் கருவி எனப்படும் இவை . தசைகளில் விரிவடைந்த மற்றும் விரிவடையாத நிலை .
இஷ்டப்படி கட்டுப்பட்டுத்த முடியாத உடல் செயல்களான தோலின் கடத்தும் திறன் , இதயத் துடிப்பு , உடலில் இருக்கும் சில வேதிப்பொருட்களின் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும் . ஒருவர் பொய்சொன்னால் இவற்றில் திடீர் மற்றும் கட்டுப்படுத்த முடியாத மாற்றங்கள் ஏற்படும் என்பது இதன் அடிப்படை .
பிரைன் மேப்பிங் .
தன்னையறியாமல் ஒருவர் பங்கேற்பதையும் அவரது மூளையில் பதிந்திருக்கும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டது இது . ஒருவர் பங்கு கொண்ட எந்தச் சம்பவமும் அவரது மூளையில் ஞாபகமாகப் பதிந்திருக்கும் . ஒருவரது மூளையில் இருக்கும் தகவல்களைப் பெற பல்வேறு தொழில்நுட்ப ங்களை இம்முறையில் பயன்படுத்துகிறார்கள் . மூளையின் பி - 300 எனப்படும் குறிப்பிட்ட எதிர்வினைகள் கணக்கிடப்படுகின்றன .
--- சசி சம்பள்ளி , பி.எஸ். நாராயணசாமி , கே.திவ்யதர்ஷினி . த சன்டே இந்தியன் . 22 மார்ச் 2009 .

Sunday, July 19, 2009

நிஜமாவா ?

* பிறந்த குழந்தை மூன்று மாதங்கள் சென்ற பிறகு அழும்போது தான் கண்களிலிருந்து கண்ணீர் வருமாம் .
* உடல் உறுப்புகளில் மிகவும் சூடானது கல்லீரலும் , சிறுநீரகமும் தான் , மிகவும் குளிர்ச்சியான உறுப்புகள் இதயமும் நுரையீரலும் தான் . மனித உடலில் இருந்து வெப்பம் மட்டும் வெளியேறா விட்டால் 24 மணி நேரத்தில் உடலில் வெப்பம் 185 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உயர்ந்துவிடும் .
* ஆங்கிலத்திலேயே நூல்கள் எழுதிய குஷ்வந்த் சிங் , தனது தாய்மொழியான பஞ்சாபி மொழியில் ஒரு நூல் கூட எழுதியதில்லை யாம் .
* மனித உடலில் ஏற்படும் வலியை ' டால்ஸ் ' என்கிற அளவால் குறிப்பிடுகிறார்கள் . வலியில் கடுமையானது பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ வலியே . அதன் அளவு 9.5 டால்ஸ் .
* அரிசி ரகங்களில் மிக நீளமான அரிசி ரகம் பஞ்சாப் மாநில பாசுமதி அரிசி . ( 8 மில்லி மீட்டர் ) .
* ஆங்கிலத்தில் புழுவிலிருந்து பட்டுப்பூச்சியாகும் மாற்றத்தை ' மெடமார்ஃபோஸிஸ் ' என்பார்கள் .

Saturday, July 18, 2009

அணை .

பக்ரா நங்கல் அணை .
இமாசல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் சட்லெஜ் ஆற்றின் மீது 169 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பக்ரா நங்கல் அணை பரவியுள்ளது . 225 மீட்டர் உயரமுள்ள இது இந்தியாவின் மிக முக்கிய அணைகளில் ஒன்றாகும் .
இங்கிருந்துதான் பஞ்சாப் , அரியானா , இமாசல பிரதேசம் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன . மேலும் இங்குள்ள நீர் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம்தான் மேற்கண்ட மாநிலங்களின் முக்கிய மின் ஆதாரமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் .23 - 03 -2009 .

Friday, July 17, 2009

' தலைக் காவிரி '

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பிரம்மகிரி மலை உச்சியில் காவிரி பிறக்கும் இடத்திற்குத் ' தலைக் காவிரி ' என்று பெயர் .
காவிரி தனது பாதையில் ஹாரங்கி , ஹேமாவதி , லட்சுமணதீர்த்தா ஆகிய உபநதிகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மைசூர் அருகே கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது . அங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடி வரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இரு கிளைகளாக பிரிந்து மீண்டும் கூடுக்கிறது . இது காவிரி நதி ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய தீவு .
தி. நரசிபுரம் அருகே கபினி நதி இணைந்த பிறகு காவிரி நீர் இரட்டிப்பாகி தலக்காடு வழியாக மண்டியா மாவட்டத்தை அடைகிறது . அங்கே சிவசமுத்திரம் என்னுமிடத்தில் காவிரி மீண்டும் கிளை பிரிந்து இரண்டாவது பெரிய தீவை ஏற்படுத்தியுள்ளது .
பல நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காவிரியின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி இருப்பது சிவசமுத்திரத்தில் தான் .
சிவசமுத்திரத்தில் காவிரி இருவேறு கிளைகளாகப் பிரிந்து கண்ணையும் , மனதையும் குளிர வைக்கும் இரண்டு உயரமான நீர் வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது .முதல் கிளையிலுள்ள நீர் வீச்சிக்கு ' சுகன சுக்கி ' என்றும் , அங்கிருந்து ஒரு மைல்தொலைவில் இரண்டாவது கிளையிலுள்ள நீர் வீழ்ச்சிக்கு ' பர சுக்கி ' என்றும் பெயர் .
சுமார் 350 அடி உயரமுள்ள இந்த நீர் வீழ்ச்சிகள் உலகிலேயே பதினேழாவது இடத்தை அலங்கரித்துள்ளது பெருமைக்குரியது . கனடாவிலுள்ள புகழ் பெற்ற ' நயாகரா ' நீர்வீழ்ச்சி கூட இதனை அடுத்ததுதான் . மைசூரிலிருந்து வடகிழக்கே 70 கி. மீ . தொலைவிலுள்ள சிவசமுத்திரம் கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் . நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் காணவரும் இந்த நீர்வீழ்ச்சிகளின் எழில் கொஞ்சும் அழகைக் கண்டுகளிக்க இரு கண்கள் போதாது .
--- ஐ . சேகநாதன் . தினமணி கதிர் . 23 - 08 - 1998 .

Thursday, July 16, 2009

எஸ்.பி.ஒய் .( SBY).

' ஐம்புலன்களில் உள்ள நரம்புகள் அனைத்தும் சேரும் இடம் காது . அதனால்தான் நம் முன்னோர்கள் காதுக்கு நிறைய முக்கியத்துவம் தந்தார்கள் . காது குத்துவது , காதுகளில் கடுக்கண் , தொங்கட்டான் அணிவது எல்லாம் இதற்காகத்தான் . கோயில்களில் தோப்புக்கரணம் போடுவதுகூட அப்படிதான் . தினமும் பதினோரு தோப்புக்கரணங்களைப் போட்டால் நிச்சயம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கும் ' என்கிறார் யோகாவில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் மூர்த்தி .
உலகப் பிரசித்தி பெற்ற யேல் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவில் , மூளையின் செயல் திறனை அதிகரிக்க ஒரு பயிற்சியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் . வலது கையால் இடது காது நுனியை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் . பிறகு இடது கையால் வலது காது நுனியை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் . இரண்டு காதுகளுக்கும் சமச்சீரான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் . காதுகளை நன்றாகப் பிடித்துக் கொண்டபிறகு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரிக்க வேண்டும் . தினமும் கால் மணி நேரம் இந்தப் பயிற்சியைச் செய்தால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது என்கிறார்கள் . இவர்கள் இப்படிச் சொன்னதும் அமெரிக்காவே இந்தப் பயிற்சியைச் செய்துகொண்டிருக்கிறது .
அட , இந்தப் பயிற்சி நம்ம தொப்புக்கரணம்தானே என்று தோன்றுகிறதா ? கரெக்ட் தோப்புக்கரணம் தான் . ஆனால் , இதற்கு யேல் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் எஸ,பி.ஒய்.
( SBY ) அதாவது 'சூப்பர் ப்ரைன் யோகா' .
' இப்படி காதுகளுக்கு அழுத்தம் கொடுத்து அமர்ந்து எழும்போது ரத்தம் ஓட்டம் சீரடைகிறது . காது நுனிகளில் மூளைக்குச் செல்லும் ரத்தத்தை அதிகரிக்கச் செய்யும் மெல்லிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன . அங்கே அழுத்தம் கொடுக்கும்போது , அவை புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை அதிகரிகச் செய்கிறது . வலது காது நுனி இடது மூளைக்கும் , இடது காது நுனி வலது மூளைக்கும் ரத்தத்தைச் செலுத்துகின்றன ' என்கிறார் யோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யுஜினியஸ் ஆங் .
ஆக , இனி எல்லோரும் தினமும் தோப்புக்கரணம் போடுவோம் . அமெரிக்கர்களே சொல்லிவிட்டார்கள் அல்லவா ? நாம்தான் நம் முன்னோர்கள் பேச்சைக் கேட்க மாட்டோமே .
--- குமுதம் . 25 - 03 - 2009 ..

Wednesday, July 15, 2009

மனோரா .

எழில் கோபுரம் மனோரா .
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம் .
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் . உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் . பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .
தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது .
மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன . முதல் 2 வாயில்கள் சிறிய அளவில் உள்ள கதவுகளைக் கொண்டது . இரண்டாம் முகப்பு வாயில் அகழிப் பாதையை தாண்டியுள்ளது . இரண்டாம் வாயில் தூண்களும் கல்லால் கட்டப்பட்டவை . இக்கோட்டையில் பழ்ங்கால் மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன . இவ்வாயில் தூண்களின் ஒருபுறம் ஆங்கில கம்பெனியரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் , இக்கோட்டை ஆங்கிலேயரின் அதிகாரத்தில் இருந்துள்ளது என தெரிய வருகிறது .
மனோராவின் மையத்தில் கட்டப்பட்ட உப்பரிகை என்ற நிலை மாடம் அருங்கோண வடிவத்தில் கட்டப்பட்ட 9 அடுக்குகளை கொண்டது .
சுமார் 75 அடி உயரமுள்ள மேல் மாடி திறந்த வெளியாக காட்சியளிக்கிறது . மராட்டியரின் ஆட்சிக் காலத்தில் மனோரா சிறப்புற்று துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது .
மனோரா என்னும் நினைவுச் சின்னம் தமிழகத்தின் தொழில்நுட்பம் , ஆங்கிலேயரின் கலை வடிவம் ஆகிய இரண்டும் இணைந்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் .
பெயர் பெற்ற மனோராவை அரசு தஞ்சை மாவட்டத்தில் ஒரு சுற்றுலா தலமாக ஆக்கியுள்ளது .
இப்பகுதியில் கலங்கரைவிளக்கம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர் . இந்த பிரச்சனைக்குத்தீர்வு காண மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதன்பேரில் , மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள மனோரா அருகில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டு வருகிறது . இந்த கலங்கரைவிளக்கம் மனோராவின் உயரமான 75 அடியைவிட இரு மடங்கு அதிகம் உள்ளதால் , 20 மைல் தூரம் வரை கலங்கரைவிளக்கம் தெரியும் . மேலும் இது ' சிலி பாம் டெக்னாலஜி ' முறையில் கட்டப்பட்டு வருகிறது .
--- தினமலர் . 22 & 23 - 03 - 2009 .

Tuesday, July 14, 2009

கீதாசாரம் .

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .
எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .
எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .
உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .
எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .
எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .
மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் .
" இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".

Monday, July 13, 2009

4 கோடி !

மதியாதார் முற்றம் மதித்தொரு
கால்சென்று மிதியாமை கோடி பெறும் .
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார்
தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் .
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும் .
கோடான கோடி கொடுப்பினும்
தன்னுடை நாக்கோடாமை கோடி பெறும் .
--- ஔவையார் .

Sunday, July 12, 2009

எறும்புகள் .

எறும்புல வேலைக்கார எறும்புனு ஒரு வகை இருக்கு . எங்கேயாவது உணவுப் பண்டம் இருக்குதானு அங்கே இங்கே தேடிப் பார்க்கிறதுதான் இந்த எறும்புகளுக்கு வேலையே . அப்படி எதையாவது பார்த்ததும் உடனே தன் குழு இருக்கிற இடத்துக்கு வேகமா திரும்பிவரும் . வர்றப்பவே மத்த எறும்புகளுக்கும் இந்த நியூஸை சொல்லனும் இல்லையா ... அதுக்காக , வயித்தைத் தரையோட அழுத்தி ஒருமாதிரியான வாசனையை உருவாக்கிட்டே வரும் . இந்த வாசனையை மோப்பம் பிடிச்சு மத்த எறும்புகளும் சுறுசுறுப்பா பண்டம் இருக்கிற இடத்துக்கு போய்ச் சேரும் .
அட... இத்தனூண்டு எறும்புக்கு எத்தாம் பெரிய அறிவு !
" துணிகளைக் காயவைக்க வெயில் தேவைப்படுது ஆனா , அதிக நேரம் வெயில்ல இருந்தா துணியோட கலர் வெளுத்துடுதே அது ஏன் ?"
"துணிகள்ல உள்ள சாயங்க்ள்ல கெமிக்கல் கலந்திருக்கு சூரிய ஒளியில் இருக்குற புற ஊதாக் கதிர்களோட சக்தி அந்த கெமிக்கல்களை போக்கிடுது . அதனாலதான் துணி வெளிறிப் போயிடுது ."
" வெயில்ல இருந்தா துணி வெளுத்துடுது... ஆனா , மனுஷங்க நாம மட்டும் ஏன் வெயில்ல இருந்தா கறுத்துப் போறோம் "
" தோலுக்கு சூரிய ஒளியால பாதிப்பு வரக்கூடாதுனுதான் நம்ப தோலோட கீழ்ப் பகுதியில மெலனின்னு ஒரு பொருள் தங்கியிருக்கு . நம்ப உடம்பை சூரிய ஒளி தாக்கினதும் அந்த மெலனின் வெளியே வருது . அதனாலதான் தோல் கறுப்பாயிடுது ."
" ஒட்டகத்தின் முதுகுல இருக்குற மேடான பகுதியில அது தண்ணியை சேமிச்சு வச்சுக்குதுனு சில பேரு தப்பா நினைச்சுக்கிறாங்க . உண்மையில அந்த இடத்துல கொழுப்பைத்தான் ஒட்டகம் சேமிச்சு வைக்குது . பாலைவனத்துல போகும்போது சரியா தீனி கிடைக்கலைன்னா , அந்த கொழுப்பைக் கரைச்சு உடம்புக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்குது . கொழுப்பு கரைஞ்சதும் ஒட்டகத்தோட திமில் அடங்கிடும் . அப்புறம் நல்ல தீனியும் ஓய்வும் கிடைச்சுட்டா , பழைய மாதிரி ஆகிடும் ."
--- ஜி.எஸ்.எஸ். தஞ்சம்மா.. மஞ்சம்மா ! அவள் விகடன் , .

Saturday, July 11, 2009

ஆஸ்கர் ஆடிட்டோரியம் ...

ஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .
* லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் இடம் 2-வது தளத்தில் அமைந்துள்ளது .
* ஆஸ்கர் விருது வழங்கும் இந்த அரங்கம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது . தியேட்டருக்கு மட்டும் ஆன செலவு 96 கோடி டாலர் . முழு அரங்கம் கட்டி முடிக்க 600 கோடி செலவு ஆயிற்று .
* 3400 இருக்கைகள் கொண்டது . A யில் ஆரம்பித்து Q வரை இருக்கைகள் உள்ளன . முதல் 4 வரிசை இருக்கைகள் வாத்தியக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .
* M இருக்கைவரை நடிகர் , நடிகைகளுக்கு மட்டும் . அதன் பின் வரிசைகள் மற்றவர்களுக்கு .
* விழா நடக்கும் போது எந்த ஒரு இருக்கையும் காலியாக இருக்கக் கூடாது . இதற்காக 120 இளம்பெண்கள் சீருடை அணிந்து தயாராக இருக்கிறார்கள் . இருக்கைகள் காலியானால் உடனுக்குடன் சென்று இவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .
* இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்கும் . வெள்ளி , சனிக்கிழமைகளில் கலைஞர்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் .
*இந்த ஸ்டுடியோவில்தான் எம்மி விருதுகள் , விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன . வருகின்ற 2010 -ம் ஆண்டிலிருந்து ஆஸ்கர் விருது வழங்கும் விழா மட்டுமே இங்கு நடைபெறுமாம் .
--- சாந்தா பத்மநாபன் . குமுதம் .18 - 03 - 2009 .

Friday, July 10, 2009

ஜோக் !

சர்தார்ஜி ஜோக் !
தேர்வு எழுதப் போயிருந்தார் சர்தார்ஜி . கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் தன் வாட்சைக் கழற்றினார் . சட்டையைக் கழற்றினார் . பேண்டையே கழற்றிவிட்டார் . வெறும் ஜட்டியுடன் அமர்ந்து ரொம்ப கூலாக ப்ரீட்சை எழுத ஆரம்பித்துவிட்டார் . எக்ஸாமினருக்கு ஒன்றும் புரியவில்லை . சர்தாரை நோக்கி ஓடி வந்து , " என்னையா அசிங்கம் இது . ஜட்டியோட உட்கார்ந்து எக்ஸாம் எழுதறே ? " என்று கேட்க , நம்ப ஆள் கேஷுவலாக கொஸ்டின் பேப்பரைக் காட்டினார் . அதில் ' answer the questions in brief ' என்று எழுதியிருந்தது .

Thursday, July 9, 2009

ராணுவத்தின் சரித்திரம் .

உலக சரித்திரத்தின் முதல்ராணுவப் படைகள் அசீரியா , எகிப்து , இந்தியா , சீனா போன்ற பேரரசுகளில்தான் உருவாக்கப்பட்டது . அந்த ராணுவங்களில் பொதுவாக சட்டத்தை மீறியவர்கள் , முரடர்கள் போன்றவர்களே ஒரு தண்டனை போல் , படை வீரர்களாக இருந்தார்கள் . கிரேக்கர்கள்தான் தங்கள் ராணுவத்தினருக்கு முறையான கட்டாயப் பயிற்சியை முதன் முதலாக அளித்தவர்கள் . நாட்டு மக்களை முறையாக ராணுவத்தில் சேர்த்ததும் அவர்கள்தான் . அதே நேரம் , மாதா மாதம் ஒழுங்காக சம்பளம் கொடுத்து ராணுவத்தையும் ஒரு முறையான தொழில் போல் ஆக்கியவர்கள் ரோமானியர்கள் .
--- எம் . கணேஷ் குமார் , வேலூர் . தினமலர் . சிறுவர்மலர் . அக்டோபர் 24 . 2008 .

Wednesday, July 8, 2009

கணக்கு !

கழித்தல் கணக்கு !
நம் குழந்தைகளுக்குக் கழித்தல் கணக்கைக் கற்பிக்கும்போது , ' பக்கத்து எண்ணிலிருந்து ஒன்றைக் கடன் வாங்கிக்கொள் ' என்கிறோம் . வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில்லை ! சீனாவில் அதே கணக்கைப் போதிக்கும் போது , ' மிகுதியாக இருக்கும் எண்ணில் இருந்து ஒன்று என்ற எண்ணை எடுத்து பற்றாக்குறை உள்ள எண்ணுக்குக் கொடு ' என்கிறார்கள் . இதனால் , ' வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டியதில்லை ' என்ற கருத்து நம் குழந்தைகள் மனதிலும் , இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தருவதுதான் நியாயம் ' என்ற கருத்து அவர்கள் குழந்தைகளின் மனதிலும் விதைக்கப்படுகிறது .
--- ' ஒன்றே சொல் , நன்றே சொல் ' நிகழ்ச்சியில் சுப .வீரபாண்டியன் .( கலைஞர் தொலைக் காட்சி ) --- எஸ் .சரோஜினி , பெங்களூரு . அவள் விகடன் . 24 - 10 - 2008 ..

Tuesday, July 7, 2009

புதிய கோள்

புதிய கோள் கண்டுபிடிப்பு .
லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜூலை 31---
சூரியக் குடும்பத்தின் 10 -வது கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
சூரிய குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளன என்பதுதான் அறிவியல் பாடத்தில் இதுவரை உள்ள தகவல் . ஒன்பதாவது கோளான புளூட்டோ கடந்த 1930 -ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் , 10 -வது கோளை அமெரிக்க விஞ்ஞானி மைக் பிரவுன் தலைமையிலான குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர் . மைக் பிரவுன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கால்டெக் என்ற ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார் .
புதிய கோள் சூரிய்னின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து வெகு தொலைவில் உள்ளதாம் . பூமியிலிருந்து 15 பில்லியன் கி. மீ . தூரத்தில் உள்ளது . புளூட்டோ கிரகத்தை விட ஒன்றரை மடங்கு பெரிதாக உள்ளதாம் புதிய கோள் . சூரிய குடும்பத்தின் கோள்களில் இருந்து 45 டிகிரி கோணத்தில் இருந்ததால் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது . புதிய கிரகத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை .
இதை , எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டபின் புதுப் பெயர் வைக்கப்பட்டு சூரிய குடும்பத்தில் 10 கோளாக சேர்க்கப்படும் . சூரிய குடும்பத்திற்கு வெளியே மூன்று சூரியன்கள் தெரியும் புதிய கோள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 31 - 07 - 2005 .

Monday, July 6, 2009

3 சூரியனுடன் கிரகம் !

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு .
வாஷிங்டன் , ஜூலை 16 . 2005 .
மூன்று சூரியன்களுடன் தெரியும் புதிய கிரகம் விண்வெளியில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் .
விண்வெளியில் இருக்கும் அதிசயங்கள் பலப்பல . இதுவரை சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிரகங்கள் பற்றித்தான் நமக்கு தெரியும் . ஆனால் , அதற்கு அப்பால் மூன்று சூரியன்களுடன் கிரகம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துளனர் . இந்த புதிய கிரகத்தின் பெயர் ' டடூன் '.
இது பூமியை விட ஆயிரத்து 500 மடங்கு பெரியது . இதில் இருந்து பார்த்தால் மூன்று சூரியன்கள் அருகருகே இருப்பது தெரியுமாம் . ஒரு சூரியன் மஞ்சள் நிறத்திலும் , மற்ற இரண்டு சூரியன்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் உள்ளதாம் . டடூன் கிரகம் பூமியிலிருந்து 149 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளது . ஒரு ஒளி ஆண்டு என்பது 10 டிரில்லயன் கி. மீ . வாயுக்கள் இல்லாமல் உருவானதுதான் கிரகங்கள் என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர் . ஆனால் இந்த கருத்தை மாற்றியுள்ளது டடூன் . இது முழுவதும் வாயுக்களால் ஆனது . இது பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரும் . இதே போல் இன்னும் பல கிரகங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
---தினமலர் . 16 - 07 -2005 .

Sunday, July 5, 2009

விவேகானந்தர்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஒரு கோவில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் . அந்த கோவில் சுவற்றில் ஒருவர் , ' கடவுள் எங்கும் இல்லை ' என்று பொருள்படும்படி ' GOD IS NO WHERE ' என்று எழுதி இருந்தார் . இதைப் பார்த்த மாத்திரத்தில் சற்று சிரித்த விவேகானந்தர் , அந்த வாக்கியம் எழுதப்பட்ட கோவில் சுவற்றின் அருகே சென்றார் . அந்த ஆங்கில வாசகத்தில் இருந்த டபிள்யூவில் கொஞ்சம் திருத்தம் செய்தார் . அதாவது , ' NO ' என்பதை ' NOW ' என்று ,' WHERE ' இல் இருந்த ' W ' வை மட்டும் எடுத்து ,' NO ' க்கு பின்னால் வருமாறு மாற்றினார் . இப்போது அந்த வாசகத்தை படித்துப் பார்த்தார் . ' கடவுள் இப்போது இங்கே இருக்கிற்றார் ' என்று பொருள் தந்தது . அதாவது , ' GOD IS NOW HERE ' என்று அந்த ஆங்கில வாசகம் மாறி இருந்தது .
விவேகானந்தருடன் வந்தவர்கள் , அவரது இந்த அறிவுக் கூர்மையை கண்டு வியந்தே போனார்கள் .

Saturday, July 4, 2009

18 படி வரலாறு .

சபரிமலை அய்யப்பன் கோவில் பதினேட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார் என்கிறார்கள் . அந்த பெயர்கள் :
குளத்தூர் பாலன் , ஆரியங்காவு ஆனந்தரூபன் , எருமேலி ஏழைப் பங்காளன் , ஐந்து மலைத்தவன் , ஐங்கார சகோதரன் , கலியுக வரதன் , கருணாகரத் தேவன் , சத்திரியபரிபாலகர் , சற்குணசீலன் , சபரிமலைவாசன் , வீரமணிகண்டன் , விண்ணவர்தேவன் , விஷ்ணு மோகினிபாலன் , சாந்தசொரூபன் , சற்குணநாதன் , நற்குணஜாலந்தன் , உள்ளத்தமர்வான் , அய்யப்பன் .
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள் . அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள் .
2 வழிகள் : சபரிமலைக்குச் செல்ல 2 பாதைகள் உள்ளன . பெருவழிப்பாதை , சிறுவழிப்பாதை என்று இதை அழைகிறார்கள் .
48 மைல் தூரம் காடு , மலை கடந்து , நடந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது பெருவழிப்பாதையாகும் . 41 நாட்கள் கடும் விரதம் இருந்தால் தான் இந்த பாதையில் செல்ல முடியும் . அவ்வாறு இல்லாமல் , 3 நாட்கள் விரதம் இருந்து செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் சென்று , அங்கிருந்து சபரிமலைக்கு 5 மைல் தூரம் நடந்து செல்வார்கள் . இது சிறுவழிப்பாதையாகும் .
பெரும்பாலானபேர் சிறுவழிப்பாதையில் தான் செல்கிறார்கள் . மகரஜோதி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் பெருவழிப்பாதையில் செல்கிறார்கள் .
இருமுடி பொருட்கள் என்ன?
சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள் . அவ்வாறு இருமுடி கட்டி செல்லும் பக்தர்களே சபரிமலை அய்யப்பன் கோவிலின் 18 படிகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் . அந்த இருமுடியில் உள்ள முன்முடியில் சுவாமி அய்யப்பனுக்கு உரிய பூஜை பொருட்களும் , பின்முடியில் அந்த பக்தருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்படும் .
அதாவது , முன்முடியில் மஞ்சள் , சந்தனம் , குங்குமம் , வெற்றிலை , பாக்கு , கற்பூரம் , பச்சரிசி , அவல் , பொரி , விபூதி , புதிய துணி , தேங்காய் , ஊதுவத்தி , பசுநெய் , மெழுகுவர்த்தி , முந்திரி , திராட்சை , பன்னீர் , அரக்கு , வெல்லம் , பேரிச்சம்பழம் மற்றும் நெய் தேங்காய் ஆகியவை இருக்கும் .
பின்முடியில் அவல் , வெல்லம் , அரிசி , படியில் உடைக்க 2 தேங்காய் மற்றும் 6 தேங்காய்கள் இருக்கும் . மற்றும் தோள் பை , பிளாஸ்டிக் குவளை , தண்ணீர் கேன் , போர்வை , துண்டு , சிறு கத்தி , டார்ச் லைட் ஆகியவையும் உண்டு .
--- தினத்தந்தி . 11 - 11 - 2008

Friday, July 3, 2009

பெரிய கோவில் .

' பெரிய கோவில் ' என்று சொன்னதும் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ( சிவன் ) கோவில்தான் நம் நினைவுக்கு சட்டென்று வரும் . இந்த கோவில் அந்த அளவுக்கு சிறப்பு பெற முக்கிய காரணம் , அதை கட்டிய முதலாம் ராஜராஜசோழன் .
தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்களுள் மிகச் சிறப்பானவர் இவர் . இவரது காலத்தில் ( கி.பி. 985 -- 1012 ) தான் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படக்கூடிய பிரகதீஸ்வரர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது .
கோபுரத்தின் சிறப்பு : சோழர்கள் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த கோவிலின் கோபுரம் தனிச் சிறப்பு கொண்டது . அடிப்பகுதி அகலமாகவும் , மேலே செல்லச்செல்ல குறுகும் வகையிலும் ஒரு பிரமிட் போன்று இது அமைக்கப்பட்டுள்ளது . 64.8 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் 29 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரமான பீடத்தின் மீது அமைந்துள்ளது .
கோபுரத்தின் உச்சியில் ஒரே கல்லால் ஆன பிரமாண்ட விமானம் ஒன்று உள்ளது . இதன் எடை மட்டும் 80 டன்கள் ( 80 ஆயிரம் கிலோ ) . எந்த நவீன வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கல்லை எப்படி மேலே கொண்டு சென்றிருப்பார்கள் என்ற வியப்பு , கோபுரத்தைக் காணும் அனைவருக்கும் நிச்சயம் எழும் .
இந்த கல்லை மேலே கொண்டுசெல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது . முதலில் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு சாய்தளம் ஒன்றை ஏற்படுத்தினார்கள் . இந்த 6 கிலோமீட்டர் தூரமும் படிப்படியாக உருட்டி , உருட்டியே கோபுரத்தின் உச்சிக்கு கல்லை கொண்டு சென்றார்கள் .
கல்லின் எடை 80 டன்கள் என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் . அவர்களது ஒட்டுமொத்த உழைப்பின் பயனாக கோபுரத்தின் உச்சியை இந்த கல் அடைந்தது . அங்கு அழகாக , எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நிறுவப்பட்டது .
விழாத நிழல் : இந்த அற்புத கோபுரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு . சூரிய ஒளியில் இதன் நிழல் தரைப்பகுதியில் விழாது என்பது தான் அது . அந்த அளவிற்கு கோவிலின் அமைப்பு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது .
பெரிய கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது இங்குள்ள பிரமாண்ட நந்தி . பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் நந்தி சிறிய அளவில்தான் காணப்படும் . ஆனால் , இங்கு பிரம்மாண்ட தோற்றத்தில் அது காட்சி தருகிறது . இதுவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது தான் . இதன் எடை சுமார் 25 டன் . சிலையின் உயரம் 12 அடி, நீளம் 19.5 அடி , அகலம் 18.25 அடி .
இது போன்ற சிறப்புகளால் மிக முக்கிய தென்னிந்திய கோவில்கள் பட்டியலில் இந்த தஞ்சை பெரிய கோவிலும் இடம் பெற்றுள்ளது . அத்துடன் , யுனஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது . ' சோழர்கள் ஏற்படுத்திய கோவில்களுள் மாபெரும் சிறப்புபெற்றது இந்த கோவில் ' என்று யுனஸ்கோ புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .
--- தினத்தந்தி , 05 - 08 - 2008 .

Thursday, July 2, 2009

பழமொழியின் பின்னணி .

' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் . வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .
குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் . அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .
இங்கே கர்ணன் கூறியதுதான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள் .
--- குமாரி சீனிவாசன் , தாராபுரம் . தினத்தந்தி . 05 - 08 - 2008 .

Wednesday, July 1, 2009

யூரிககார்.

சோவியத் ரஷ்யா அனுப்பிய வஸ்கோக் 1 விண்கலத்தில் பயணித்த யூரி ககாரின் என்ற விண்வெளி வீரர் விண்ணில் பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி பெற்றார் .
மாஸ்கோ நகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ எனும் இடத்தில் 1934 ம் ஆண்டு மார்ச் 9 ம் தேதி யூரி ககாரின் பிறந்தார் . இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது . இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினர் . 1955 ம் ஆண்டில் ஒரென்பூர்க் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார் . இந்த பயிற்சி மையத்தில் மிக் - 15 ரக போர் விமானங்களை ஓட்ட பயிற்சி பெற்றார் . இந்த பயிற்சியின் போது வலென்டினா கொர்யசேவா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
1960 ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை சோவியத் அரசு தொடங்கியது . இந்த விண்வெளித் திட்டத்தின் கீழ் 20 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . அவர்களில் யூரியும் ஒருவர் .
யூரி ககாரினுக்கு உடல் ரீதியாகவும் , மன ரீதியிலும் மிகவும் கடுமையான் பயிற்சிகள் தரப்பட்டன . பயிற்சிக்குப் பின்னர் ககாரின் , கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர் . இவர்களில் ககாரின் மட்டும் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி வஸ்தோக் 1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார் . விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்த முதல் மனிதரும் இவரே . விண்கலம் 1 மணி நேரம் 48 நிமிடம் பறந்தது .
இத்தாலி , இங்கிலாந்து , ஜெர்மனி , கனடா , ஜப்பான் ஆகிய நாடுகள் அவரின் சாதனையை வாழ்த்தின . ரஷ்யாவில் உள்ள ஸ்டார் சிட்டியில் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார் . பின்னர் சோவியத் விமானப்படையில் லெப்டினண்ட் கர்னலாக பணியாற்றினார் .
அதன் பின்னர் அவரை வேறு எந்த விண்வெளிப் பயணத்துக்கும் ரஷ்யா அனுப்பவில்லை . ரஷ்ய விண்வெளி ஹீரோ ஒருவர் விண்வெளி விபத்தில் இறந்து விடக் கூடாது என்று ரஷ்யா கருதியது இதற்கிடையே போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 1968 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி விமானம் விபத்துக்குள்ளானது . அதில் அவரும் அவருடன் சென்ற வால்டிமர்செர்யோகின் என்பவரும் இறந்தனர் .
--- தினமலர் . 12 - 04 - 2009 ..