Tuesday, April 7, 2009

செல்வம் .

'செல்வம் ' என்கிற சொல் , ' செல்வோம் ' என்ற சொல்லினுடைய திரிபு என்று சிலர் வேடிக்கையாகச் சொல்வதுண்டு .அதாவது , யாரிடமும் நிலைத்து நிற்கமாட்டோம் , சென்று கொண்டே இருப்போம் என்கிற அர்த்தத்தில்தான் செல்வோம் என்று அது அழைக்கப்பட்டுப் பிறகு மறுவியதாகச் சொல்வார்கள் .
உழைக்கிறவர்களிடம் செல்வோம் , முயற்சிக்கிறவர்களிடம் செல்வோம் என்றுதான் இதை அர்த்தப்படுத்திப் பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது .
கைக்கண்ட வழி !
எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ , அவ்வளவு சேர்க்க வேண்டும் . எவ்வளவு முறையாகச் செலவழிக்க முடியுமோ , அவ்வளவு செலவழிக்க வேண்டும் . எவ்வளவு மிச்சம் வைக்க முடியுமோ , அவ்வளவு மிச்சம் பிடித்துச் சேமிக்க வேண்டும் . எவ்வளவு கொடுக்க முடியுமோ , அவ்வளவு கொடுக்க வேண்டும் . பெறுவது , செலவிடுவது , சேமிப்பது , கொடுப்பது என்ற நான்கு செயல்களும் பணம் சேர்த்தவர்கள் கைக்கண்ட வழிகள் . இந்த நான்கையும் கைக்கொண்டால் பணம் நிறையக் குவியும் .
--அமரர் எஸ். ஏ. பி. நினைவாக... குமுதம் . இலவச இணைப்பு . ( 27-04-1995 )

No comments: