Saturday, April 4, 2009

பெண்

பெண் - வேலை !
ஒரு பெண் ஒரு பெரிய கம்பெனியில் வேலை தேடினாள் .
"ஆரம்பத்திலேயே உன்னைப் பெரிய கம்பெனிகளில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் , சிறிய கம்பெனிகளில் முயற்சி செய் .அனுபவம் பெற்ற பிறகு பெரிய கம்பெனிகளைப் பார் ," என்று பல பேர் அவளுக்குப் புத்தி சொன்னார்கள் .
அவள் கேட்கவில்லை . பெரிய கம்பெனிகளுக்குத்தான் விண்ணப்பித்திருந்தாள் . பேட்டியின்போது , " முன் அனுபவமே உனக்கு இல்லையே ?" என்றார்கள் .
"அதற்காகத்தான் உங்களிடம் வந்தேன் .அனுபவம் பெற உங்கள் கம்பெனியே சிறந்தது . நீங்கள் தரும் உயர்ந்த பயிற்சி வேறெங்கும் கிடைக்காது . அங்கெல்லாம் போய் என் திறமையைப் பாழடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை . உங்கள் கம்பெனியில் சம்பளம் இல்லாமல் கூடப் பயிற்சி பெற நான் தயார் . உங்கள் பயிற்சி வேறெங்கும் கிடைக்காது...." என்று கனிவாகவும் , பணிவாகவும் சொன்னாள் அவள் .
அவளுக்கு அந்தப் பெரிய கம்பெனியிலேயே வேலை கிடைத்துவிட்டது --சம்பளத்துடன்
தடைகள்- படைகள் !
வாழ்க்கையில் தடைகளை அடைத்து முன்னேறுங்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள் . நான் உங்களுக்குச் சொல்கிறேன் , தடைகளை உடைக்க வேண்டா . படைகளாக்கிக் கொள்ளுங்கள் . தடைகளே வெற்றிக்கு விடைகள் .பழையதை உடைக்க வேண்டா . புதியதைப் படைக்க முயலுங்கள் .
--அமரர் எஸ். ஏ. பி.நினைவாக...குமுதம். இலவச இணைப்பு . ( 27-04-1995 )..

No comments: