Saturday, March 7, 2009

ஹிட்லர்

வீழ்ந்தது சாம்ராஜ்யம் ! ( ஹிட்லர் ) .
ஹிட்லர் தனது அறைக்கு ஈவா ப்ரானுடன் கைகோத்தவாறு மெள்ள நடந்து சென்றார் .அங்கே இருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தனர் . வழியில் தொங்கிய வெல்வெட் திரைச்சீலையை மெய்க்காப்பாளர் ஒருவர் மூடினார் .
ஏப்ரல் 30 , மணி , பிற்பகல் 3 - 30 .
முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார் . பிறகு ஹிட்லர் தன்னுடைய வால்த்தர் தயாரிப்பான கைத்துப்பாக்கியை ( 7 . 65 Caliber ) கையிலெடுத்துக்கொண்டார் .அரசியலில் குதித்த ஆரம்ப காலத்திலிருந்து அந்தக் கைத்துப்பாக்கி ஹிட்லரின் நெருங்கிய நண்பன் ! `சகாக்களிடம் ரொம்ப கோபம் வரும் போதெல்லாம் பலமுறை 'சுட்டுக்கொண்டு சாகப்போகிறேன் ' என்று ஆவேசத்துடன் ஹிட்லர் துப்பாக்கியை எடுத்து பயமுறுத்தியதுண்டு ! இந்த முறை நிஜம் !
வலது நெற்றிப்பொட்டில் கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தி தற்கொலை செய்து கொண்டார் ஹிட்லர் .
ஹிட்லர், சோபாவில் உட்கார்ந்த நிலையில் , நடுவில் இருந்த குட்டி டேபிள் மீது குப்புறக் கவிழ்ந்து கிடந்தார் . அவருக்குப் பக்கத்தில் ஈவா சரிந்த நிலையில் . ஈவாவின் உடை நனைந்திருந்தது . ரத்தத்தினால் அல்ல ! ஹிட்லர் குப்பற விழுந்தபோது தண்ணீர் ஜாடியை இடித்துக் கவிழ்த்திருக்கிறார் .!
டிரைவர் கெம்காவிடம் , மெய்க்காவல் படைத்தலைவர் கூன்ஷ் , ' தலைவரின் ஆணையை முதலில் நாம் செயல்படுத்த வேண்டும் . உடனே இருநூறு லிட்டர் பெட்ரோல் வேண்டும்...' என்று பரபரத்தார் .
மற்றவர்கள் , ஹிட்லர் -- ஈவா உடல்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள் .
தம்பதியின் உடல்களை அருகருகே சரியாகப் படுக்க வைத்தனர் .
கெம்கா, ஓரிரு நிமிடங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு , ஹிட்லரின் கைகளை மார்பின் மீது மடக்கி வைத்து , பிறகு.... ஒரு கிழிந்த துணியைப் பெட் ரோலால் ந்னைத்துக் கொண்டுவர , கூன்ஷ் தீக்குச்சியைக் கிழித்து அதைப் பற்ற வைக்க , கெம்கா ந்டுங்கிய கைகளால் துணியை வீசி உடல்கள் மீது போட்டார் .
மூன்று மணிநேரம் தொடர்ந்து பெட் ரோல் ஊற்றி உடல்களை முழுமையாக எரித்தார்கள் . பிறகு கொதித்துக்கொண்டிருந்த எலும்புத்துண்டுகளையும் , சாம்பலையும் ஒரு சிறு கோணிப்பையில் சேகரித்து ஆழமாகப் ப்ள்ளம் தோண்டிப் புதைத்துத் தரையைத் தேய்த்து மிதித்து சமனப்படுத்தினார்கள்....
ஹிட்லரோடு ஒரு சாம்ராஜ்யமாக ஜொலித்த நாஜி ஜெர்மனியும் வீழ்ந்து மண்ணுக்கடியில் போனது !
முன்பு ஒருமுறை ஹிட்லர் சில வார்த்தைகளை எடுத்துக்கொடுக்க , அவருடைய நண்பரான ஷிராக் என்னும் கவிஞர் அந்த வார்ர்த்தைகளுக்குக் கவிதை வடிவம் தந்தார் . அதன் கடைசி வரிகள்...
' ந ம்பிக்கையோடு நிற்பேன் ,
யார் என்னை விட்டு அகன்றாலும்...
என் புன்னகை உதடுகள் பைத்தியக்காரத்தனமாக
ஏதோ வார்த்தைகளை உச்சரிக்கும்...
நான் விழுந்த பிறகே
என் கையிலிருக்கும் கொடி கீழே விழும்....
இறந்து கிடக்கும் என் உடலுக்கு...
அந்தக் கொடி மெள்ளப் போர்வையாக மாறும் ...!
--- மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் ! என்ற நூலில்

No comments: