Monday, March 2, 2009

பிஸ்கெட்' ஜெ ' .செய்தித் துளிகள் .

பிஸ்கெட் என்றால்...
' பிஸ்கெட் என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து தான் பிறந்தது . பிஸ்கெட் என்றால் , இரண்டு முறை சமைக்கப்பட்டது என்பதாகும் . பிஸ்கெட்டுக்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்காக இரண்டு முறை வேக வைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே அதற்கு பிஸ்கெட் என்று பிரெஞ்சு மக்கள் பெயர் வைத்தனர் .
--குமுதம் சினேகிதி / செப்டம்பர் 16, 2008 .
மிஸ்ஸான ' ஜெ ' .
ஆங்கில எழுத்துக்கள் ஆரம்பத்தில் எத்தனை இருந்தன என்று தெரியுமா ? மொத்தமே இருபத்து நாலு எழுத்துக்கள் தானாம் ! இதில் ' J ' எழுத்து ஆரம்பத்தில் இல்லை . அதற்கும் அப்புறம் கடைசியாக வந்து சேர்ந்த
விருந்தாளி ' U '.
--- குமுதம் சினேகிதி / செப்டம்பர் 16 , 2008 .

செய்தித் துளிகள் .
--- தென்னாப்பிரிக்காவில் காந்திஜி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது , அங்கே கருப்பர் இனக் கைதிகளுக்கு
கொடுக்கப்படும் குல்லாய் காந்திஜிக்கும் வழங்கப்பட்டது . அதுதான் பின்னாளில் பிரசித்தமான காந்தி குல்லாயின் முன்னோடி .
---100 பூஜ்யங்களைக் கொண்ட எண்ணை ஆங்கிலத்தில் கூகால் ( GOOGOL ) என்கிறார்கள் .
--- நண்டு பக்கவாட்டில் தான் நடக்கும் .மீன் மிதந்தபடியேதான் தூங்கும் .குதிரை நின்றபடி ஓய்வு எடுத்துக் கொள்ளும் . வஞ்சகர் நெஞ்சில் வஞ்சகம் மட்டுமே குடி கொண்டிருக்கும்
--- பனிக்கட்டியில் கிருமிகள் உண்டாகாது , ஆகையால் தண்ணீரைவிட பனிக்கட்டி சுத்தமானது .
--- இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் பாதரசம் கிடைக்கிறது .
---- முதன் முதலில் 1300 -ம் ஆண்டு , ஹென்றிடிவிக் , என்பவர் கடிகாரத்தை உருவாக்கினார் .
--- மத்திய தரைக்கடலிலும், செங்கடலிலும் பவளங்கள் கிடைக்கின்றன .
--- எகிப்துதான் முதன் முதலில் காலண்டர் முறையை கண்டுபிடித்தது .
--- ' மே மாதம் 31-ம் தேதி , ' புகையிலை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கிறோம் .
--- பூக்காத பூ , அத்திப்பூ தான் .
--- எலும்புகளின் துணையின்றி தானே அசையும் இயங்கு தசை, நாக்கு .
--- குகைக்கோயில்களில் மிகப் பெரியது , எல்லோரா .
--- மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் கட்டுவதற்காக மண் தோண்டி எடுக்கப்பட்ட பள்ளம்தான் வண்டியூர் தெப்பக்குளம் .
--- பூஜை நாட்களில் அணிந்துகொள்ளும் நீளமான சட்டைக்கு வங்காளத்தில் ' பஞ்சாபி ' என்று பெயர் . அதே சட்டைக்கு பஞ்சாபில் ' பெங்காலி ' என்று பெயர் . என்ன ஒற்றுமை !

No comments: