Tuesday, February 17, 2009

தக்காளி !

தவளைத் தக்காளி !
கைதவறிக் கீழே விழும் தக்காளி நசுங்கிப்போகுமே என நாம் இனி கவலைப்படத் தேவை இல்லை.வருங்காலத்தில் வரும் சில வகைத் தக்காளிகள் கீழே விழுந்தாலும் நசுங்காது ! பந்து மாதிரி எகிறும்.ஃப்ரிஜ்ஜில் பத்து நாட்கள் இருந்தாலும் அழுகாமல், தோல் சுருங்காமல் படு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.ஒரே ஒரு விஷயத்தை நாம் சகித்துக்கொள்ள வேண்டும்.அந்தத் தக்காளியில் தவளையின் தோல் திசு மரபணுக்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.எல்லாம் அமெரிக்க மயம் !
தக்காளி மட்டுமல்ல ...இன்று உலகம் முழுக்க இயற்கையில் இருக்கும் உணவுப் பொருட்களின் மரபணுக்களை மாற்றி, புதிய முறையில் உருவாக்கி உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒன்றின் இயல்புடன் இன்னொன்றை உருவாக்கும் இந்த இயற்கைக்கு எதிரான போக்குக்கு, உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.இந்தியாவில் மட்டும் அதிர்ச்சிகரமான ஆதரவுக் குரல் !
"மரபணு சம்பந்தமான ஆராய்ச்சி மட்டும்தான் நடப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் மக்களுக்கு அறிவிக்கப்படாமல் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை"..
"மனிதன், விலங்குகள்,தாவரங்கள் என அனைத்து உயிரினங்களின் உடம்பிலும் ஜீன் என்று சொல்லப்படும் மரபணுக்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றின் உடல் அமைப்புக்கும், குணநலன்
களுக்கும் இந்த மரபணுக்கள்தான் காரணம்.இயற்கையாகவே ஒரே இயல்புகொண்ட இரண்டு உயிரினங்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து, புதுவகை உயிரினத்தை உண்டாக்கும்.இப்படி இயல்பிலேயே கலப்பினங்கள் உருவாவதில் பிரச்னை இல்லை. ஆனால், இதைப் பன்னாட்டு கம்பெனிகள் கையில் எடுத்ததுதான் பிரச்னையின் துவக்கப் புள்ளி. ஒரு உயிரினத்தின் குண நலனை எடுத்துச் சம்பந்தமில்லாத இன்னொரு உயிரில் பொருத்தி, அதன் விளைவுகளைப் பரிசோதனை பண்ண ஆரம்பித்தார்கள்.அப்படி ஓர் ஆராய்ச்சியின் விளைவுதான் தவளை மரபணுத் தக்காளி.
இப்போது நாம் வீட்டில் வளர்க்கிற,பார்க்கிற கலர் மீன்கள் இந்த மாதிரி மரபணு மாற்ற முறையில் உருவக்கப்பட்ட முதல் உயிரினம். இந்த மீன்களை நாம் உணவாகப் பயன்படுத்துவது இல்லை என்பதால், அதன் பாதிப்புகள் தெரியவில்லை.
--ஆனந்தவிகடன். ( 16-07-2008 )

No comments: