Saturday, February 28, 2009

& -- என்பது .

& இது A N D என்பதைக் குறிக்கும் அடையாளம். இந்த அடையாளத்திற்குத் தனியாக ஒரு பெயருண்டு .
அது A M B E R S A N D .

குழந்தை !

குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. இதற்குக் காரணம் பத்து மாதம் விடாம தாயேட Heart Beat லப்-- டப்ங்கற ரிதத்தை கேட்டு, கேட்டு , அது கேட்காம போனதுனாலதான் அழுகிறது. நெஞ்சுல சாய்ந்து தாயோட இதயத்துடிப்பு கேட்டவுடனே அழுகை நின்று போகிறது .
-- திரைப்பட இசையமைப்பாளர் , தேவா . பாக்யா இதழில்

தீட்டு !

" தீண்டக் கூடாது ( தொடக் கூடாது ) என்று விலக்கி வைப்பதைத்தான் ' தீட்டு ' என்பர் . முற்காலத்தில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக , பாதிக்கப்பட்டவரை தொடக் கூடாது என்று சொன்னார்கள் . மனிதனின் பிறப்பு , இறப்பு இரண்டுமே தீட்டுதான் . அதனால்தான் குழந்தை ஜனனத்தின்போது 11 நாட்கள் குழந்தையைத் தொடக் கூடாது என்று சொல்வார்கள் .அந்த நாட்களில் குழந்தையின் உடம்பில் இருந்து கிருமி வெளிப்படும் என்பதால் விலகி இருக்க வேண்டும் . மரணம் நிகழ்ந்த வீட்டிலும் 11 நாட்களுக்கு அப்படித்தான் .
' தீட்டு ' என்பதை தள்ளி வைத்தல் என்று தவறாகப் புரிந்து கொள்வோர் பலர் , தீட்டு என்பது நம் உடல் பாதுகாப்புக்குப் போடப்பட்ட வேலியே தவிர வேறில்லை !"
--குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் , 06-06-2008 .

Friday, February 27, 2009

ராமர் -- குகன் !

ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல் சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம இணைஞ்சிட்டாங்க. அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு கொடுத்தான் .
அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .
அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .
" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி சமாளிக்கிறாருன்னு பாருங்க .
" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .
' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு '.

வெற்றியின் ரகசியம் !

ஒரு மாபெரும் வெற்றியாளரிடம் கேட்டார்கள், " உங்கள் இமாலய வெற்றியின் ரகசியம் என்ன ?" அவர் சொன்னார் , " நான் எடுக்கும் சரியான முடிவிகள் தான் என் வெற்றி ரகசியம் ." "ஓகோ ! அதுதான் ரகசியமா ?" அதுசரி, அதெப்படி நீங்கள் மட்டும் எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கிறீர்கள் ?" "அதற்கு, என்னுடைய சில அனுபவங்கள்தான் காரணம்" " அனுபவங்களா?" " அந்த அனுபவங்களை எப்படிப் பெற்றீர்கள் ?" " சில தவரான முடிவுகள் எடுத்ததன் மூலமாகத்தான் "
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோற்காதவர்கள் இல்லை . தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்கள் .Fear Of Failure தான்
பெரிய பிரச்சனை. தவறாவிட்டால் வெற்றி. தவறினால் அது பாடம் . அவ்வளவுதான் .
--சோம. வள்ளியப்பன். குமுதம். ( 06-08-2008 ).

Thursday, February 26, 2009

பிரதமர்களும், அதிபரும் !

இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் ஒரு ஹோட்டலில் உணவு வேளையில் சந்தித்தனர். தற்செயலாக அங்கே வந்த இங்கிலாந்து பிரதமர் ஆச்சர்யமானார் .
" அட , என்ன இங்கே மாநாடு ?"
"தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது குண்டு போட்டுப் பதினான்கு மில்லியன் பாகிஸ்தானியர்களையும், கூடவே முட்டைகள் விற்பனை செய்யும் ஒருவனையும் கொல்லத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம் " என்றார் இந்தியப் பிரதமர்.
இங்கிலாந்து பிரதமரின் நெற்றி குழப்பத்தில் சுருங்கியது.
" முட்டை விற்பவனா , என்ன சொல்கிறீர்கள்? " என்றார்.
இந்தியப் பிரதமர் மலர்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் பக்கம் திரும்பிச் சொன்னார்...." நான் சொல்லலே....பாகிஸ்தானியர்களைப்
பற்றி யாரும் பொருட்படுத்த மாட்டாங்கன்னு !"
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 02-04-2008 ).

Wednesday, February 25, 2009

வெற்றிலைப் பாக்கு போடும் முறை .

காலையில் ( களிப் ) பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும், பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பாக்கு சுண்ணாம்பு மிகுதியாகவும் வெற்றிலை குறைவாகவும், இரவில் பாக்கு சுண்ணாம்பு மிகக் குறைவாகவும் வெற்றிலை மிகவும் அதிகமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் எப்போதும் முதலில் ஊரும் நீரை உமிழ்ந்துவிட்டு, பிறகு ஊறும் நீரை உட்கொண்டு திப்பியை உமிழவேண்டும் .
--- வள்ளலாரின் நித்திய ஒழுக்க விதியிலிருந்து . ( 29 - 07 - 1978 , சனி ).

அறிஞர்கள் !

உலகில் தோன்றி மறைந்த அறிஞர்களின் டாப் - 10 வரிசை:
1 ) தாமஸ் ஆல்வா எடிசன் .
2 ) கிறிஸ்டோபர் கொலம்பஸ் .
3 ) மார்ட்டின் லூதர் கிங் .
4 ) கலிலியோ கலீலி .
5 ) லியனார்டோ டாவின்சி .
6 ) ஐசக் நியூட்டன் .
7 ) ஃபெர்டினன்ட் மெகல்லன் .
8 ) லூயி பாஸ்டர் .
9 ) சார்லஸ் டார்வின் .
10) தாமஸ் ஜெஃபர்ஸன் .
" ஆயிரம் ஆண்டுகளில் மக்களுக்குப் பெருந்தொண்டு செய்த அறிஞர்களின் பட்டியலை ' லைஃப் ' பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. { இந்த வரிசையில் ஐன்ஸ்டீனுக்கு 22 , மகாத்மா காந்திக்கு 23 -வது இடங்கள் ! }".
--நானே கேள்வி...நானே பதில் ! ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .

Tuesday, February 24, 2009

இரண்டு முடி சூட்டு விழாக்கள் !

ராம பட்டாபிஷேகத்திற்கும், மகாபாரத தர்மர் பட்டாபிஷேகத்திற்கும் உள்ள சிறப்பு :
ராமாயணத்தில் வசிஷ்ட முனிவரால் ( மனிதர் ) ஸ்ரீ ராமபிரானுக்கு ( கடவுள் ) பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது .
மகாபாரதத்தில் பார்த்தனுக்கு தேரோட்டியவரும், கீதோபதேசம் செய்தவருமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ( கடவுள் ) தர்ம புத்திரருக்கு ( மனிதர் ) , பட்டாபிஷேகம் செய்தார். இதுதான் மகாபாரதத்தின் சிறப்பு .
--- புலவர் கீரன் . ( 07 - 08 - 1978 ) .

மூன்று !

வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம் ; காதடித்து நின்று அசைந்தாடும் யானை ; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப்பாம்பு !
ஒரு மழைத் துளி மணிக்கு ஏழு மைல் வேகத்தில் தரையில் விழுகிறது !
இரண்டாம் உலகப் போரில் 57 நாடுகள் பங்கு பெற்றன !
தனது காதுகளைச் சுத்தம் செய்யுமளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு நீளம் !
ஜூலியஸ் சீசர் தன் வழுக்கைத் தலையை மறைக்க , இலைகளால் ஆன கிரீடத்தைப் பயன்படுத்தினார் !
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலில் தனது இடது காலைத்தான் பதித்தார் !
யானைக்கு 'அடி' சறுக்குமோ இல்லையோ , உலகத்திலேயே 'ஜம்ப்' பண்ண முடியாத ஒரே விலங்கினம் யானைதான் !
--ஆனந்தவிகடன் .{ 23-07-2008 .}

Monday, February 23, 2009

கஜ + அஜ + கோ கர்ணம் .

கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம் : பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
--- கிருபானந்த வாரியார் . ( 13 - 08 - 1978 ) .

விசுவாசம் !

அயர்லாந்துக்கு ஒருவன் சுற்றுலா சென்றிருந்தான் . மிகவும் தாகமெடுத்தது. ஒரு வீட்டில் அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டான் .
அந்த வீட்டுப் பெண்மணி அவன் நிலை பார்த்து , ஒரு கோப்பையில் சூடான சூப் கொடுத்தாள் .
வீட்டு நாய்க்குட்டி விருந்தாளியிடம் ஓடி வருவதும் அவன் கால்களுக்கு இடையில் புகுந்து செல்வதும் , செல்லமாகக் குரைத்து அவன் கவனத்தைக் கவர்வதுமாக இருந்தது .
"நாயைக்கூட மிக நட்புடன் இருக்கப் பழக்கியிருக்கிறீர்கள் " என்றான் , வந்தவன் பாராட்டும்விதமாக .
"அப்படியில்லை, நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பது அதனுடைய உணவுக் கோப்பை . அதனால் உங்களைவிட்டு நகர மாட்டேன் என்கிறது " என்றாள் . அந்தப் பெண்மணி .
-- சத்குரு ஜக்கி வசுதேவ் . ஆனந்தவிகடன். ( 22-10-2008 ) .

Sunday, February 22, 2009

" நர்ஸிங் ஹோம் "

நர்ஸிங் ஹோம் என்று வைத்திருக்கிரார்கள். ஏன் நர்ஸிங் ஹவுஸ் என்று வைக்கவில்லை .
" A house is made of brick and morter , but a home is made of love and affection
நோயாளிகளைப் பரிவுடனும், பாசத்துடனும் கவனிக்கவேண்டுமாகையால் தான் 'N ursing home ' என வைத்தனர் .
அரைக்கம்பத்தில் கொடி ஏற்ற !
கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட சற்றுக் கூடுதல் நேரம் ஆகும் . முதலில் கொடியை முழுவதும் உயர்த்தி , ஒரு கணத்திற்குப் பிறகு தான் அரைக்கம்பத்திற்குக் கொண்டு வர வேண்டும் .

கோடீஸ்வரர் !

இப்போது நம் நாட்டு கோடீஸ்வரர்களில் எளிமையானவர் , இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர் நாராயணமூர்த்தி. இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் , பெங்களூரில் முன்பு வசித்த அதே சாதாரண வீட்டில்தான் இப்போதும் ஜாகை . வேலைக்காரர்கள் , சமையல்காரர்கள் வைத்துக் கொள்ளாமல் வீட்டு வேலைகளை மனைவி சுதாமூர்த்தியுடன் பகிர்ந்துகொள்கிறார் . ' கார்ப்பரேட் காந்தி ' என்பது இவரது செல்லப்பெயர் . ' தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காகத்தான் பணம் சம்பாதிக்கிறாம் . ஆனால் , அந்தத் தேவைகள் பூர்த்தியான பிறகும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது !' என்பது அவரின் அனுபவ மொழி . கூடுதல் பணம் என்பது சக மனிதர்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வாய்ப்பு !' என்கிறார் !"
--ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .

Saturday, February 21, 2009

வராஹம் !

பெருமாள் கோயிலில் வழிபட்டது வராஹம் : 2 நாளாக கொடிமரத்தை வலம் வந்த அதிசயம் .
ஆந்திராவில் பக்தர்கள் பரவசம் .
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சித்தாந்தம் கிராமத்தில் ஸ்ரீ தேவி , பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. வராகத்தின்( பன்றி) அதிசய செயல் காரணமாக இந்த கோயில் ஆந்திரா முழுவதும் பிரபலமாகி உள்ளது. இக்கோயி
லுக்கு , டிசம்பர் மாதம் 14 -ம் தேதி கலையில் வந்த வராகம் ஒன்று கோயில் கொடி மரத்தை வலம் வரதுவங்கியது . 14 -ம் தேதி இரவு வரை உணவு , தண்ணீர் ஏதும் இல்லாமல் சுற்றி விட்டு, 15-ம் தேதி மதியம் திடீர் என்று மயங்கி விழுந்தது .பொது மக்கள் கால்நடை டாக்டர்களுக்குத் தகவல் கொடுத்து , அவர்கள் தந்த சிகிச்சையால் வராஹம் மீண்டும் நடமாடத் தொடங்கியது. மேலும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக அருகில் ஓடும் கோதாவரி நதிக்குச் சென்று குளித்த அது, கோயிலை சுற்ற துவங்கியது . இதற்கிடையே வராஹத்திற்கு பொட்டு வைத்து , பூஜை நடத்திய பொதுமக்கள் அதற்கு உணவும் கொடுத்தனர். பக்தி செலுத்துவதில் மனிதனையும் மிஞ்சி விட்டது வராஹம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்
-- தினமலர் . 17 - 12 - 2008 .

" P I N C O D E "

இந்தியாவிலேயே Pin Code எண்கள் அதிகம் கொண்ட நகரம் சென்னை தான் .
சென்னை ( 600001 --- 600098 ) .
பம்பாய் ( 400001 --- 400093 ) .
கல்கத்தா ( 700001 --- 700070 ) .
டெல்லி ( 110001 --- 110062 ) .
இந்தியாவிலுள்ள 1,17,000 தபால் நிலையங்களை 8 பெரும் பிரிவாகப் பிரித்துள்ளார்கள் .
பின் கோடின் முதல் எண் இந்த 8 பிரிவுகளில் எந்தப் பிரிவு எனக் காட்டுகிறது .
1 ) டெல்லி , ஹரியானா , ஹிமாசலப்பிரதேசம் , காஷ்மீர் , பஞ்சாப் .
2 ) உத்தரப் பிரதேசம் .
3 ) குஜராத் , இராஜஸ்தானம் .
4 ) கோவா , மத்தியப் பிரதேசம் , மகாராஷ்டிரா .
5 ) ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் .
6 ) கேரளா , தமிழ்நாடு , லட்சத் தீவுகள் .
7 ) அந்தமான் , அருணாச்சலப் பிரதேசம் , அஸ்ஸாம் , மணிப்பூர் , மேகாலயா , நாகாலந்து , ஒரிஸ்ஸா , சிக்கிம் , திரிபுரா , மேற்கு வங்காளம் .
8 ) பீகார் .
முதல் எண் : STATE .
இரண்டு , மூன்றாம் எண்கள் : தபால் பிரிவு ( SORTING UNIT
கடைசி மூன்று எண்கள் : POST OFFICE .
-- 12 - 10 - 1978 .

Friday, February 20, 2009

" டிஎன்ஏ "

ஆங்கிலத்தில் " டியோக்ஸிர்போ - நியூக்ளிக் - ஆசிட் " என்ற 3 வார்த்தைகளில் உள்ள முதல் 3 எழுத்துக்களைத்தான் " டிஎன்ஏ " என்று சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள் .
வளைந்து கிடக்கும் இரட்டை பட்டை ரிப்பன் போன்ற இந்த அமைப்பை வெளியில் எடுத்து நீட்டிப் பார்த்தால் அது 5 அடி நீளம் இருக்கும் .
இந்த அபாரமான கண்டுபிடிப்பு மூலம் , மனித உடலின் ரகசியங்கள் அனைத்தும் அம்பலம் ஆகப்போகின்றன .
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நோயால் அவதிப்படுவது ஏன் ? சிலர் குண்டாக , வேறு சிலர் ஒல்லியாக இருப்பது எதனால் ? பலர் சாந்தமாகவும் , சிலர் மூஞ்சியை உர்ரென்று வைத்துக்கொண்டும் இருப்பது என்ன காரணத்தினால் ? சிலர் மேதைகளாகவும் , அரசியல்வாதிகளாகவும் , அடிமுட்டாளாகவும் இருப்பது எதன் அடிப்படையில்.... இப்படி ஒவ்வொரு மனிதனின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ' டிஎன்ஏ 'என்பதில் உள்ள ரகசியங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .
ஒருவருக்கு தோன்றும் எந்தவிதமான நோயையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அதை ஆபரேஷன் இன்றி , மருந்து இன்றி குணப்படுத்தி விடலாம் . அவரது சந்ததிக்கே அந்த நோய் ஏற்படாமல் தடுத்துவிடலாம் .
ஒருவரின் உடல் வளர்ச்சியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் .
ஒருவரின் திறமையை மேம்படுத்தி அறிவாளியாக மாற்றலாம் .
எல்லாவற்றிறுக்கும் மேலாக , அந்தக் காலத்தில் அகத்தியர் , திருமூலர் போன்ற முனிவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்வார்களே ! அதுபோல மனிதனின் வாழ்வை 1,200 ஆண்டுகள் வரை நீடிக்க செய்யவும் முடியும் .
அமெரிக்கா , இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜெர்மனி , ஜப்பான் , சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் , " ஹியூமன் ஜினோம் புராஜக்ட் " என்ற திட்டத்தின் கீழ் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள் .
--- தினமலர் . வியாழன் -- 29 - 06 - 2000 .

எறும்பு.

உலர்ந்த வெள்ளரிக் காய் தோலைப் போட்டு வைத்தாலும், அடுப்புச் சாம்பலும் மஞ்சள் பொடியையும் கலந்து தூவி வைத்தாலும் அந்த இடத்தில் எறும்பு வராது.

எடிசன் !

தாமஸ் ஆல்வா எடிசன் !
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.
அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.
எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.
தந்தி தொழில் நுட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.
1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது, 'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.
மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
--தினமலர் ( 21-11-2008 ).

Thursday, February 19, 2009

நிலவில் மனிதன் .II ம் முறை.

நிலவில் மனிதன் இரண்டாவது முறை தரையிறங்கிய சாதனை நாள் : நவம்பர் 19.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆஸ்டிரினும் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்கள் என்ற சரித்திர சாதனையை 1969 ஜூலை 21-ல் படைத்தனர்.அவர்கள் அமெரிகாவின் அப்பல்லோ -11 விண்கலத்தில் சென்றனர்.
இந்த சாதனையை 'ஒன்ஸ்மோர்' செய்ய, சார்லஸ் கன்ராட், ஆலன் பீன், ரிச்சர்ட் கோர்டன் என் 3 வீரர்களுடன் அப்பல்லோ 12 விண்கலத்தை 1969 நவம்பர் 14-ல் அமெரிக்கா ஏவியது.இது நவம்பர் 19 -ல் நிலவை நெருங்க, அதில் இருந்து பிரிக்கப்பட்ட ' இன் ட்ரிபெட்' என்ற ஆய்வுக்கலனில் சார்லஸும், ஆலனும் நிலவுக்கு சென்றனர்.இன் ட்ரிபெட்டை ஆலன் இயக்கினார்.மேலே சுற்றிக்கொண்டிருந்த அப்பல்லோ -12 ஐ ரிச்சர்ட் இயக்கினார். நிலவின் 'புயல் கடல்'என்ற பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மிகத்துல்லியமாக இன் ட்ரிபெட் தரையிறக்கப்பட்டது. சார்லசும் ஆலனும் அடுத்தடுத்து நிலவில் இறங்க, அமெரிக்க கொடியை சார்லஸ் நாட்டினார்.
நிலவில் இறங்கியதும், ஆய்வுக்காட்சிகளை பூமிக்கு அனுப்ப கலர் டி.வி., கேமராவை சூரியனை நோக்கி திருப்பியதால்
அதன் லென்ஸ் பாதிக்கப்பட்டு இயங்காமல் போனது.
இன் ட்ரி பெட்டில் இருந்து நிலவில் இறங்கும் ஏணி நீளம் குறைவாக இருந்தது.இதனால், கடைசி படியில் இருந்து சார்லஸ் துள்ளிக்குதித்து நிலவில் கால்பதித்தார். அப்போது, "ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தபோது, அதை அவர் எடுத்து வைக்கும் சிறிய அடி என்று சொன்னார்...ஆனால், எனக்கு இது பெரிய அடி ( துள்ளிக்குதிப்பு ) " என்று 'ஜோக்' அடித்தார்.
--தினமலர். ( 19-11-2008 ).

Wednesday, February 18, 2009

எரிமலை !

பூகம்பம் வந்தால் சிறிது காலத்தில் எரிமலையும் வரக்கூடும் . பூமி வெடிப்பு ஏற்படும் போது அந்த வெடிப்பில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும் . பூமியின் அடியில் எப்போதும் வெப்பம் இருக்கிறது . இந்த குளிர்ந்த தண்ணீர் உள்ளே போகும் போது , அந்த உஷ்ணத்தினால் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கிறது . கொதித்த தண்ணீர் பூமிக்கு அடியில் சென்றவுடன் நிலத்தின் அடியில் உள்ள உலோகம் , கந்தகம் ஆகியவற்றுடன் உருகி நெருப்பாகி , வெளியே நெருப்பு குழம்பாக பயங்கர சீற்றத்துடன் வெளிவரும் . இதுதான் எரிமலை என்று கூறப்படுகிறது .
பூகம்பம் -- நிலநடுக்கம் !
நில நடுக்கம் வேறு பூகம்பம் வேறு ஆகும் . நிலம் அசைந்தால் அதற்கு பெயர் நில நடுக்கம் . இரண்டாகப் பிளந்தால் அதற்கு பெயர் பூகம்பம் .
--- புவியியல் நிபுணர் பாசில் . சுப்பிரமணியம் . --- தினமலர் . 20 - 09 - 1988 .

மரபணு

மரபணு கோழி, பருத்தி !
மரபணு மாற்றத்துக்கு மிகச் சரியான உதாரணம், கோழி. மரபணு மாற்றத்தால் பிராய்லர் கோழிகள் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வளரும். இதனாலேயே பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி மிகக் குறைவு. அவ்வப்போது உலகத்தையே மிரட்டும் பறவைக் காய்ச்சல் நோய்க்கு உடனடியாகப் பலியாவது இந்த பிராய்லர் கோழிகள்தான்.
பருத்திச் செடி, புழுத் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும்.அந்தப் புழுக்களுக்கு எதிரான ஒரு விஷயம் மண்ணிலிருக்கும் பி.டி. எனப்படும் பேசிலஸ் துரிஞ்சியான்சிஸ் என்கிற நுண்ணுயிரிகளிடம் இருக்கிறது. அந்த நுண்ணுயிரிகளின் ஜீன்களை எடுத்து பருத்தியின் மரபணுவில் செலுத்தினார்கள். புழு தாக்காத பருத்தி என்கிற அறிமுகத்தோடு பி.டி. காட்டன் என்ற புதுவகைப் பருத்தியை இதன்முலம் உருவாக்கினார்கள்.இந்தப் பருத்தியின் விதைக்கு அதிக விலை கொடுக்கவேண்டும்.அதிக செலவு பண்ணி குறைந்த மகசூல் எடுத்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம்தான் கிடைத்தது. கூடுதல் பிரச்னையாக பி.டி. காட்டனில் இருக்கும் விஷயத்தைச் சமாளிகும் திறன் அந்தப் பூச்சிகளுக்கு வந்து விட்டது.இதனால் சாதாரண பருத்திக்கு பூச்சிக் கொல்லி விஷம் அடித்தாலும் பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. கடன் தொல்லையால் மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் அர்பாட்புஷ்டாய் ( Dr.Arpad pusztai ) என்கிற விஞ்ஞானி ஒரு எலிக்கு மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்தார். கொஞ்ச நாளிலேயே சிறுநீரகமும்,நுரையீரலும் சுருங்கி கேன்ஸ்ர் கட்டிகள் வந்து இறந்துவிட்டது அந்த எலி. இந்தப் பரிசோதனை முடிவுகள் வெளியே வந்ததும், மரபணு மாற்று உணவுப் பொருட்களுக்கான எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டன. இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் பலவகையான அலர்ஜிகள்,
கேன்ஸர் கட்டிகள், அடுத்தடுத்த தலைமுறையோட குணநலன்களைப் பாதிக்கும் அம்சங்கள் வரும் என்று உறுதி செய்திருக்கிறார்கள்
அணுசக்தி ஒப்பந்தத்தோடு சேர்த்து, மொத்தம் மூணு ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் கையெழுத்தாக உள்ளன.அதில் முக்கியமானது Indo - Us Knowledge Initiative On agriculture. இதன்படி, இந்தியாவிம் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா திட்டம் போட்டுத் தருமாம்.இது நிறைவேறினால், இந்திய விவசாயிகள் எதைப் பயிர் செய்ய வேண்டும், இந்திய மக்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும்.
--வெற்றிச்செல்வன். ஆனந்தவிகடன். ( 16-07-2008 ).

Tuesday, February 17, 2009

அன்னை தெரசா .

அது 1946 செப்டெம்பர் 10 டார்ஜிலிங்கின் முகடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த்து ரயில் . ஒவ்வோர் ஆண்டிலும் இதுபோன்று மலைகளில் சென்று மௌனமாக ஆழ்ந்து பிரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சிஸ்டர்களுடன் மதர் தெரசாவும் சென்று கொண்டிருந்தார் .
அப்போதுதான் ஒரு மாயாஜாலம் போன்றோ , மயக்கம் தரும் அதிசயம் போன்றோ அல்லாமல் எளிமையாக , இயல்பாக ஒரு மாற்றம் தனக்குள் நிகழ்வதை அன்னை தெரசா உணர்ந்தார் .
உலகை உய்விக்க வருகிற மகான்கள் அனைவருக்கும் இந்தத் தருணம் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது . தெரசாவுக்கு அந்தத் தருணம் நிகழ்ந்தது அந்த ரயில்பயணத்தில் . அதை ' உள்ளிருந்து ஒரு குரல் ( Call within a Call ) ' என்று அவர் குறிப்பிட்டார் . அந்தத் தினத்தை ' ஞானம் பெற்ற தினம் ( Inspiration Day ) ' என்று குறிப்பிடுகிறார்கள் .
அந்த அழைப்பு தெரசாவின் பாதையை மாற்றிப்போட்டது . அவரது கால்கள் கல்கத்தாவின் சேரிகளிலும் வீதிகளிலும் நடக்கத் தொடங்கின . ஒரு தியாக சரித்திரம் துவங்கியது .
--- ஆனந்தவிகடன் . 14 - 09 - 1997 .

தக்காளி !

தவளைத் தக்காளி !
கைதவறிக் கீழே விழும் தக்காளி நசுங்கிப்போகுமே என நாம் இனி கவலைப்படத் தேவை இல்லை.வருங்காலத்தில் வரும் சில வகைத் தக்காளிகள் கீழே விழுந்தாலும் நசுங்காது ! பந்து மாதிரி எகிறும்.ஃப்ரிஜ்ஜில் பத்து நாட்கள் இருந்தாலும் அழுகாமல், தோல் சுருங்காமல் படு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.ஒரே ஒரு விஷயத்தை நாம் சகித்துக்கொள்ள வேண்டும்.அந்தத் தக்காளியில் தவளையின் தோல் திசு மரபணுக்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.எல்லாம் அமெரிக்க மயம் !
தக்காளி மட்டுமல்ல ...இன்று உலகம் முழுக்க இயற்கையில் இருக்கும் உணவுப் பொருட்களின் மரபணுக்களை மாற்றி, புதிய முறையில் உருவாக்கி உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒன்றின் இயல்புடன் இன்னொன்றை உருவாக்கும் இந்த இயற்கைக்கு எதிரான போக்குக்கு, உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.இந்தியாவில் மட்டும் அதிர்ச்சிகரமான ஆதரவுக் குரல் !
"மரபணு சம்பந்தமான ஆராய்ச்சி மட்டும்தான் நடப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் மக்களுக்கு அறிவிக்கப்படாமல் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை"..
"மனிதன், விலங்குகள்,தாவரங்கள் என அனைத்து உயிரினங்களின் உடம்பிலும் ஜீன் என்று சொல்லப்படும் மரபணுக்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றின் உடல் அமைப்புக்கும், குணநலன்
களுக்கும் இந்த மரபணுக்கள்தான் காரணம்.இயற்கையாகவே ஒரே இயல்புகொண்ட இரண்டு உயிரினங்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து, புதுவகை உயிரினத்தை உண்டாக்கும்.இப்படி இயல்பிலேயே கலப்பினங்கள் உருவாவதில் பிரச்னை இல்லை. ஆனால், இதைப் பன்னாட்டு கம்பெனிகள் கையில் எடுத்ததுதான் பிரச்னையின் துவக்கப் புள்ளி. ஒரு உயிரினத்தின் குண நலனை எடுத்துச் சம்பந்தமில்லாத இன்னொரு உயிரில் பொருத்தி, அதன் விளைவுகளைப் பரிசோதனை பண்ண ஆரம்பித்தார்கள்.அப்படி ஓர் ஆராய்ச்சியின் விளைவுதான் தவளை மரபணுத் தக்காளி.
இப்போது நாம் வீட்டில் வளர்க்கிற,பார்க்கிற கலர் மீன்கள் இந்த மாதிரி மரபணு மாற்ற முறையில் உருவக்கப்பட்ட முதல் உயிரினம். இந்த மீன்களை நாம் உணவாகப் பயன்படுத்துவது இல்லை என்பதால், அதன் பாதிப்புகள் தெரியவில்லை.
--ஆனந்தவிகடன். ( 16-07-2008 )

Monday, February 16, 2009

உலகம் --

உலகம் -- 2008 .
2008 - ஆம் வருடத்தை அலைக்கழிக்கும் பெரும்பாலான அரசியல் பிரச்னைகளின் ஆணிவேர் , அமெரிக்கா .
அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பிற தேசங்களில் தேக்க நிலை தொடங்கிவிட்டது . ஒரு நாள் அரிசிச் சாதம் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் ? ஆகவே , ஒருநாள்விட்டு ஒருநாள் அரிசி வாங்குகிறார்கள் பங்களாதேஷ் மக்கள் கடந்த 3 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை உலகம் எங்கும் 83 மடங்கு அதிகரித்து இருப்பதாக அறிவித்திருக்கிறது உலக வங்கி . இன்னும் 500 மில்லியன் டாலர் தேவையாம் .
ஹைத்தி தேசத்து மக்கள் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் . களிமண்ணை எடுத்து வந்து நீர் விட்டுப் பிசைந்து , தட்டித் தட்டி நெருப்பில் வாட்டிச் சாப்பிடுகிறார்கள் . ஹைத்தி குழந்தைகள் மண் கேக் சாப்பிடும் புகைப்படங்கள் , உலகத்தை அதிரச் செய்தன !
---ஆனந்தவிகடன் . 24 - 12 - 2008 .

Sunday, February 15, 2009

காசி !

சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு . காசிக்கு ஐந்து அதிசயங்களைச் சொல்வார்கள் . காசியில் கருடன் பறப்பதில்லை ; பல்லி ஒலிப்பதில்லை ; மாடு முட்டுவதில்லை ; பூக்கள் மணப்பதில்லை ; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை ..

' சுனாமி '

உலக வரலாற்றில் கண்ணீரால் பதிவு செய்யப்பட்ட ' சோக தினம் , இன்று 26 டிசம்பர். ஜப்பானில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ' சுனாமி' என்ற சொல் உலகம் முழுவதும் அழியாத வடுவை ஏற்படுத்திய நாள் .
2004 -ல் இதே நாளில், இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் கடலுக்குள் 9 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பம் 10 நிமிடம் நீடித்தது . இதனால் , சுனாமி அலைகள் அடுக்கடுக்காக எழும்பி 11 நாடுகளைப் பந்தாடியது. ரிக்டர் அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பதிவான 2 -வது பெரிய பூகம்பம் என்பதுடன் , அதிக நேரம் நீடித்த நிலநடுக்கத்தில் , இதற்கே முதல் இடம் .
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு போல 23 ஆயிரம் மடங்கு சக்தியை அந்த நிலநடுக்கம் வெளிப்படுத்தியது .
ஐ .நா .வின் தற்காலிகப் புள்ளிவிவரப்படி , சுனாமியால் மொத்த உயிர்ப்பலி 1.84 லட்சம் ; காயமடைந்தோர் 1.25 லட்சம் ; மாயமானோர் , 45 ஆயிரம் ; சொந்த இடங்களை இழந்தோர் 17 லட்சம் ; சர்வதேச நிவாரண உதவி 40 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது .
2004 - ன் சுனாமி ஒரே நாளில் ஓய்ந்துபோனாலும் அதன் பாதிப்பு , சோகங்களின் கண்ணீர் இன்னும் காய்ந்து போகவில்லை .
--- தினமலர் . 26 -12 -2008 .

Saturday, February 14, 2009

தமிழ் -- காலம் .

தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் 1956 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 - ம் தேதி நிறைவேற்றப்பட்டது .
சங்ககாலம் ( கி .மு . 300 --- கி .பி .300 ) .
சங்கம் மருவிய காலம் ( கி .பி . 300 -- கி . பி . 700 ) .
பக்தி இலக்கிய காலம் ( கி .பி . 700 -- கி . பி . 1200 ) .
மத்திய காலம் ( கி . பி . 1200 -- கி . பி .1800 ) .
இக்காலம் ( கி .1800 -- இன்று வரை ) . என தமிழ் மொழி வரலாறு பிரிக்கப்படுகிறது .
--- தினமலர் .27 - 12 - 2008 ) .

Friday, February 13, 2009

எஸ் . எம் . எஸ் .செய்திகள் !

' போட்டில் வந்தவர்களை நமது வீரர்கள் போராடி வென்றனர் . வோட்டில் வந்தவர்களை என்ன செய்வது .? ' -- இன்று இந்திய மக்கள் மனதில் இது முக்கியமான கேள்வி . இந்தக் கேள்வி பரந்து பெருகி வளர்வது நாட்டுக்கு நல்லது
!
செய்திகள் !
--- புத்த பகவானுக்குக் காவலாக இருந்ததாகக் கூறப்படும் லாஸா அப்ஸோ ( Lhasa apso ) திபெத்திய இன நாய் . முக்கியமான விருந்தாளிகளுக்கு தலாய் லாமா பரிசாகத் தரும் நாய் அது .
--- விமானம் 100 மீட்டருக்கும் தாழ்வாகப் பறந்தால் , ரேடார் சாதனத்தை ஏமாற்றலாம் .
--- உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ முழுமையாகப் படைத்ததே 14 சிற்பங்கள்தான் . மைக்கேல் ஏஞ்சலோவை ஜீனியஸ் என்று உலகம் கொண்டாடுகிறது . தங்களது திறமையில் 25 சதவீதத்தை வெளிப்படுத்துபவர்களை ஜீனியஸ் என்கிறார்கள் . வெறுமனே 10 சதவீதத்தை மட்டும் பயன்படுத்துபவர்கள் சராசரி .
--- உலகின் மிகப் பெரிய கப்பலான ' குயின் மேரி 'யின் கேப்டனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது . " நடுக் கடலில் முழு வேகத்தில் செல்லும் கப்பலை முழுவதுமாக நிறுத்த எவ்வளவு நேரம் ஆகும் ? " " அனைத்து இன்ஜின்களின் இயக்கத்தையும் நிறுத்தினால் சுமாராக ஒரு மைல் தூரத்துக்குள் கப்பலை நிறுத்திவிடலாம் ! " என்று சொன்ன கேப்டன் , " கேப்டன்களின் பார்வை எப்போதுமே ஒரு மைல் தாண்டித்தான் பதிந்திருக்கும் ' என்று முடிதார் .

Thursday, February 12, 2009

தாய் !

"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"
--ஆனந்தவிகடன். ( 19-11-2008 ).

Wednesday, February 11, 2009

சாதனை !

'விரல்கள்' சாதனை !
மேகாலயாவைச் சேர்ந்த தமிகி பஸாவுக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்ததும், அதிக விரல்கள் கொண்ட 3 நபர்கள் உள்ள நாடு என்று இந்தியாவுக்கு ஒரு தனிச்சிறப்பு கிடைத்துவிடும்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில், கை-கால்களில் அதிக விரல்கள் கொண்ட நபர்கள் என்று 2 இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இந்நிலையில் '25 விரல்' நபரான தமிகி பஸாவும் கின்னஸ் அங்கீகரிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் ஜெயின்ஷியா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கைகளில் 13 விரல்கள், கால்களில் 12 விரல்கள் இருந்ததால், 'ஜெயிக்க முடியாத அதிசயப்பிறவி' என்ற அர்த்தம் கொண்ட பினார் மொழி வார்த்தையான 'தமிகி' என்ற பெயரை பெற்றோர் சூட்டினர்.
"இந்த விரல்கள் தானே கேவலம் என்று, இந்த விரல்களைப் பார்த்துப்பார்த்து ஆத்திரப்படுவேன், கின்னஸ் விஷயம் தெரிந்தபிறகு, இந்த விரல்கள் மீது புது பாசம் வந்திருக்கிறது" என்று கை விரல்களுக்கு முத்தம் கொடுத்தபடியே தெரிவித்தார் தமிகி !.
--தினமலர். 15-11-2008.

Tuesday, February 10, 2009

கிரகம்.

புதிய கிரகம்.
சூரியகுடும்பத்துக்கு வெளியே முதல்முறையாக ஒரு கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஹப்பிள் என்ற தொலைநோக்கி ஆய்வு செய்துவருகிறது.
சூரியக் குடும்பத்துக்கு வெளியே பாமல்கட் என்ற மற்றொரு சூரியனை பாமல்கட் பி என்ற புதிய கிரகம் சுற்றுவதை ஹப்பிள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜூபிடர் கிரகத்தை விட புதிய கிரகம் 3 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சதர்ன் பிஷ் என்ற பகுதியில் இருந்து 25 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கிரகம் அமைந்துள்ளது .சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள மற்றொரு சூரியனை வேறொரு கிரகம் சுற்றி வருவது இப்போது நிரூபணமாகியுள்ளது. பாமல்கட் சூரியனில் இருந்து இப்போது தெரிய வந்துள்ள 'பாமல்கட் பி' கிரகம் 2 ஆயிரத்து 150 கோடி மைல் தொலைவில் அமைந்திருகிறது.பாமல்கட் குறித்த செய்திகள் கடந்த 28 ஆண்டுகளாக நிலவி வருகிறது.கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஒளிச்சிதறல் தெரிவதை ஹப்பிள் படம் பிடித்தது.
தினமலர். 15-11-2008.

Monday, February 9, 2009

சூயஸ் கால்வாய் .

ஐரோப்பாவை ஆசிய நாடுகளுடன் கடல் வழியாக இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு கடல் வழியாக வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி வரும் நிலை நீண்ட நெடுங்காலம் நீடித்தது. எகிப்து நாட்டின் சூயஸ் பகுதியில் மத்தியதரைக்கடலுக்கும், செங்கடலுக்கும் கால்வாய் ஏற்படுத்தினால் மிக எளிதாக ஆசியாவுக்கு சென்றுவிடலாம்.
இருகடல்களையும் இணைக்கும் முயற்சி பழங்காலத்தில் நடந்ததற்கான பல குறிப்புகள் கிடைத்துள்ளன. நைல் நதி வரை கால்வாய் வெட்டி பின்னர் அங்கிருந்து செங்கடலுக்கு கப்பல்கள் சென்றதாக பண்டைய பயண புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
192 கி.மீ,.தூர கால்வாய் மூலம் மத்தியத்தரைக்கடலுடன் செங்கடல் இணைந்தது.1869-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கப்பல் போக்குவரத்துக்கு கால்வாய் திறக்கப்பட்டது.
எகிப்தின் தேசியவருவாயில் சூயஸ் கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
--தினமலர். 17-11-2008.

Sunday, February 8, 2009

ஸ்ரீ அரவிந்தர் .

மகான் ஸ்ரீ அரவிந்தர், 1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ல்,கல்கத்தாவில் பிறந்தார். 1910-ல் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகத்தான் அவர் பாண்டிச்சேரியில் காலடி வைத்தார். அவர் புதுவையில் வந்து தங்க ஏற்பாடு செய்தவர்கள் பாரதியாரும், அவரது தோழர் மண்டபம் ஸ்ரீ நிவாஸாச்சாரியாரும் ஆவர். சிறைவாசம் செய்து, தேசத் தியாக வாழ்வை நடத்திக்கொண்டு இருக்கும் போதே, பாண்டிச்சேரி மண், அரவிந்த கோஷூக்கு அவருடைய உண்மையான பணியை உணர்த்தியது. அவருள் ஒரு மகான் பிறந்தார்.-
புதுச்சேரி மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக விளங்கியவர் பிரான்சு நாட்டை சேர்ந்த மீரா.அரவிந்தரின் மறைவிற்குப் பின்னர் ஆசிரமத்தை நடத்தி வந்த மீராவை அரவிந்தரின் சீடர்கள் 'ஸ்ரீ அன்னை' என அழைத்தனர்.1973-ம் நவம்பர் 17-ம் தேதி ஆசிரமத்தில் அன்னை சமாதியடைந்தார்.'
--ஆனந்தவிகடன். ( 20-08-2008 ).

Saturday, February 7, 2009

வாரியார்.

கிருபானந்த வாரியார்.
( 25-08-1906 -- 07-11-1993 )
பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார்.'வாரியார் வாழ்க்கை வரலாறு' என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்களில் ஒன்று:
அஜீரணம் என்பது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. காரணம், அரசர் வீட்டு விருந்தானாலும் அளவோடு உண்பவன்.ஒரு முஸ்லீம் அன்[அ)ர் என்னிடம், " பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் " என்று கூறினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
--ஆனந்த விகடன். 27-08-2008.

Friday, February 6, 2009

' கோபம் ' உணவு

புத்தர் பார்வையில் ' கோபம் '
புத்தரிடம் ஒருவர், ' கோபத்தை எதனுடன் ஒப்பிடலாம் ? ' என்று கேட்டார் . அதற்கு புத்தர் , ' கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை கையில் எடுத்து , அதனால் நமக்கு வேண்டாதவரை தாக்க முயற்சிப்பதைப் போன்றது . அதை கையில் பிடித்து சுட்டுக் கொள்வதின் மூலம் பாதிக்கப்படுவதும் நாமே ! ' என்றார் .
இனிமையான உணவு
இயேசுநாதரிடம் சீடர் ஒருவர், ' உலகிலேயே மிகவும் இனிமையான உணவு எது ? ' என்று கேட்டார் . அதற்கு இயேசுநாதர் , ' ஒருவன் தன் உழைப்பால் பெற்ற கூழ் அமிர்தத்திலும் மேலானது' என்று பதிலளித்தார் .
--- தினத்தந்தி . இலவச இணைப்பு .27 -05 -2008 .

வாரியார்.

கிருபானந்த வாரியார்.
( 25-08-1906 -- 07-11-1993 )
பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார்.'வாரியார் வாழ்க்கை வரலாறு' என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்களில் ஒன்று:
அஜீரணம் என்பது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. காரணம், அரசர் வீட்டு விருந்தானாலும் அளவோடு உண்பவன்.ஒரு முஸ்லீம் அன்[ப )வர் என்னிடம், " பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் " என்று கூறினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
--ஆனந்த விகடன். 27-08-2008.

Thursday, February 5, 2009

அன்னை தெரஸா.

( 27-08-1910-- 05-09-1997 ).
அன்னை தெரஸாவுக்கு இப்போது 98 வயது ஆகிறது. யூகோஸ்லேவியாவில்,வசதியான அல்பேனியக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ,18 வயதில் கன்னிமாடத்தில் சேர்ந்து கல்கத்தா வந்தார்.ஒன்பது ஆண்டு பயிற்சிக்குப் பின், புனித மேரிக் கல்லூரியில் ஆசிரியராகவும்,பின்பு பிரின்ஸ்பாலாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
"ஏழைகளையும், நோயாளிகளையும் வறுமை ஒரு பக்கம் தாக்கினாலும், அவர்களைச் சமூகம் ஒதுக்கும் அந்தப் புறக்கணிப்பு உணர்ச்சிதான் அவர்களை மிகவும் பாதிக்கிறது" என்கிறார் அன்னை.
அன்னை தெரஸா புது டில்லியில் குழந்தைகள் இல்லத்தை நிருவியபோது, அதைத் துவக்க நேரு வந்திருந்தார்.அன்னை தன்னுடைய பணிகளை விளக்க முன் வந்தபோது ," மதர்...நீங்கள் சொல்லவே வேண்டாம். நீங்கள் ஆற்றி வரும் அத்தனைப் பணிகளும் எனக்குத் தெரியும். உங்கள் பணியினால் கவரப்பட்டுத்தான் நானே இங்கு வந்திருக்கிறேன்" என்று புன்முறுவலோடு சொன்னார் நேரு.
"ஏழைகளுக்கான சேவையே கடவுள் சேவை" என்கிறார் அன்னை தெரஸா.

Wednesday, February 4, 2009

வானொலி !

உலகப் புகழ்பெற்ற வானொலி சேவை அமைப்பான பிபிசி, 1922--ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி தனது ஒலிபரப்பை தொடங்கியது. வானொலி ஒலிபரப்பு முயற்சிகள் முதலில் அமெரிக்காவில் தொடங்கியது.இங்கிலாந்தில் அரசு கெடுபிடி கடுமையாக இருந்ததால் வானொலி சேவை தொடங்க முடியாத நிலை இருந்தது.எனினும அமெரிக்காவில் வானொலிக்கு கிடைத்த வரவேற்பு இங்கிலாந்து மக்கள் ஆசையை தூண்டியது.இதன் பிறகு' பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்' (பிபிசி) சேவை படுவேகமாக வளர்ந்து ,உலகம் முழுவதும் பரவியது.
பிபிசி தமிழ்.
பிபிசி நிறுவன நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மட்டுமின்றி உலகின் 43 மொழிகளில் ஒலிபரப்பாகிறது.தமிழ் ஒலிபரப்பு இதில் முக்கியமானது.தெற்காசிய மொழிகளில் முதன்முறையாக தமிழ் ஒலிபரப்பு 1941-ம் ஆண்டு மே , 31-ம் தேதி தொடங்கியது.தினந்தோரும் இரவு 9.15 மணியில் இருந்து 9.45 மணி வரை (அரை மணி நேரம் ) தமிழ் செய்தியும், செய்தி அலசலுமிடம் பெறுகின்றன. 49 எம், 41 எம், 31 எம் என்ற மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் பிபிசி தமிழ் ஒலிபரப்பை வானொலியில் கேட்கலாம்.

Tuesday, February 3, 2009

நேரு-நிலா- கொடி !

நேருவின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நேருவின் தோற்றம்: கி.பி. 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 - ம் தேதி. மறைவு: 1964 - ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி.
இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்த ஒரே தலைவர்.மரணம் சம்பவிப்பதற்கு முன்பு,' நான் இறந்த பின்பு, மத சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ பின்பற்றக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தாராம். அதன்படியே அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்தது.
சந்திராயன் -- 1 ...
கவிஞனுக்கு கருப்பொருளாய்,ஓவியனுக்கு வரைபொருளாய், காதலருக்கு கனவுப்பொருளாய், குழந்தைக்கு கதைப்பொருளாய்,எட்ட மிதந்து களிப்பூட்டிய நிலவை ...நிஜத்தில் இந்தியா தீண்டிப் பார்க்கும் நாள் வந்தேவிட்டது !
நிலவுக்கு இந்தியாவின் முதல் விண்கலம் சந்திராயன் - 1 கடந்த மாதம் (2008 -ம் ஆண்டு ) 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அடுத்த கட்டமாக இன்று ' மூன் இம்பேக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) என்ற கருவி நிலவில் இறங்குகிறது.நான் கு புறமும் பெயிண்ட் அடிக்கப்பட்ட மினியேச்சர் போன்ற சிறிய அளவிலான 'தேசியக்கொடி'யையும் இந்த விண்கலத்தில் அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த கொடியை எம்.ஐ. பி. கருவி தன்னுடன் எடுத்து சென்று, நிலவின் மேற்பரப்பில் ஊன்றுகிறது. நிலவுக்கு இ தியா அனுப்பிய முதல் அங்கு சென்றதற்கான சரித்திர அடையாளத்தை அழுத்தமாக பதிக்கும் விதமாக நிலவின் மேற்பரப்பில் நமது தேசியக்கொடி ஊன்றப்படுகிறது.

Monday, February 2, 2009

லட்சுமி - பணம்.

திருமால், லட்சுமியை மார்பகத்தே வைத்திருக்கிறார் என்று புராணம் சொல்கிறது. இது தெரிந்தோ, தெரியாமலோ வெள்ளைக்காரர்கள் கூட சட்டையின் மார்புப் பகுதியில் பை வைத்து அதில் லட்சுமியை -- பணத்தை வைத்திருந்தார்கள். இப்போது கண்ட கண்ட இடங்களில் வைப்பதால்தான் பெரும்பாலும் பர்ஸில் பணம் தங்குவதில்லை.
--ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா ஹரிகதையில் கேட்டது.

அண்டார்டிகா.

வருஷத்தில் 4 மாதங்கள் இருட்டாகவே இருக்கும் பகுதி அண்டார்டிகா. அண்டார்டிகாவில் படிந்துள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகினால் அது உலகில் 60 ஆண்டுகளுக்குப் பெய்யும் மழைக்குச் சமமாக இருக்குமாம்.
-- கல்கண்டு. 16-12-1982.

Sunday, February 1, 2009

பாராட்டு.

"ஈஸ்வரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம். பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும். வேலையை முடித்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம். பிள்ளையை ஒரு போதும் புகழக் கூடாது.
--ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்.
"நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே புகழ்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -- வாச
மனையாளைப் பஞ்சனையின் மேல் மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில் "
-- S.கோதண்டராமன். P.G.T.கூறக்கேட்டது.