Tuesday, December 9, 2008

சூரிய பகவான் !

வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய அம்சங்களை பலனாகத் தருகிற சக்தியை நவநாயகர்கள் தங்கள் வசம் வைத்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன . நவக்கிரகங்கள் என்று சொல்லப்படுகிற அந்த ஒன்பது பேரில் முதலாவதாக மட்டுமல்ல...நம் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருப்பவர் சூரிய பகவான் ! ' சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு ' என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன .பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து தனது ஒளிக்கற்றைகளை மருந்தாக அனுப்பி நம்மைக் காக்கும் வல்லமை பெற்றவர் சூரிய பகவான் .காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில் , சிறிது நல்லெண்ணெய உடல் முழுவதும் தடவிக் கொண்டு , ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக ந்ம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும் . உடலும் மனமும் புத்துணர்வு பெறுவதுடன் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும் . இதைத்தான் ' சூரியக் குளியல் ' என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள் .நம் சிக வாழ்வுக்காக சூரியனை வணங்கி ஆராதிப்பதால் பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறுகிறோம் .
நமது இந்த சூரிய வழிபாட்டைப் போன்றே ' சௌரம் ' என்ற வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் , ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் க்ப்ள்கின்றனர் .
நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல் , நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும் , பூப்படையாத பெண்களும் , முக்கியமாக கண் பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது .
--குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் . (05-12-2008 ) .

No comments: