Wednesday, September 3, 2008

பீமன் !

கண்ணன் தூது போக வேண்டிய நிலையில அவரிடம் பீமன், " ஐந்து அம்சங்களைக் கண்டு பயந்து துரியோதனன் எங்களுக்கு நாடு கொடுத்தாக வேண்டும்! ! " என்று கூறுகிறான்.அந்த ஐந்து அம்சங்கள் எவை என்றும் குறிப்பிடுகிறான்.....
" என்னுடைய சத்ருகாதினி என்ற கதையின் வலிமைக்கு அவன் அஞ்சியாக வேண்டும். இணையில்லாத வில் வீரனான அர்ஜுனனின் காண்டீபத்திற்கு அவன் பயப்பட்டாக வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து போருக்கு வருவோம் என்ற எங்களுடைய இணைந்த பலம் அவனுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். கண்னன் எங்களுக்குத் துணையாக இருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு கலக்கத்தை அளிக்கும். பாஞ்சாலி சபதமிட்டுத் தன் கூந்தலைக் கலைத்து நிற்கும் தோற்றம் அவனுடைய நெஞ்சில் அச்சத்தை எழுப்பும் ! ". என்றான்.
இதில் தன் பலம், துணை பலம், தன் பலமும் - துணை பலமும் சேர்ந்த கூட்டு வலிமை, தெய்வ பலம், கற்பின் பலம் ஆகியவை வரிசையாக இடம் பெருகின்றன.
-- புலவர். கீரன். (ஞான பூமி. மே, 1985 ).

No comments: