Tuesday, September 30, 2008

நவக்கிரக நாயகியர்.

சேலம் அருகே சுமார் 12 கி மீ . தொலைவில் உள்ள ' கந்தாஸ்ரமம்' என்னுமிடத்தில், நவக்கிரகங்களை அவர்களுடைய மனைவியருடன் வைத்திருக்கிறார்கள்.
ராகு ----------------ஸிமஹி.
சனி-----------------நீலா.
கேது---------------சித்ரலேகா.
புதன்--------------ஞானசக்தி தேவி.
குரு----------------தாரா.
சந்திரன்---------ரோகிணி.
சூரியன்---------உஷா,பிரத் உஷா.
சுக்கிரன்--------சுகீர்த்தி.
அங்காரகன்--சக்திதேவி.

Monday, September 29, 2008

ஆண்களின் பருவ நிலைகள் - 5.

1) சைசவம்-----------5 வயது வரையில்.
2) வாலிபம்-----------15 வயது வரையில்.
3) கௌமாரம்--------30 வயது வரையில்.
4) யௌவனம்--------40 வயது வரையில்.
5) வார்த்திகம் --------40 வயதுக்கு மேல்.
-முத்தாரம் ஏப்ரல் 24- 2 மார்ச் , 1989.

மகன், மைந்தன், பிள்ளை.

ஒரு குடும்பத்தை ஆதரிப்பவனுக்கு ' மகன்' என்றும், பல குடும்பங்களை ஆதரிப்பவனுக்கு ' மைந்தன்' என்றும் , பிரயோஜனமே இல்லாதவனுக்குப் ' பிள்ளை' என்றும் பெயர்.
-வாழும் வழி -வாரியார் சுவாமிகள்.

Sunday, September 28, 2008

'நுண்ணிய கால அளவுகள் '

பழந்தமிழர்கள் கண்ட நுண்ணிய கால அளவுகள்:
60 தற்பரை 1 வினாடி.
60 வினாடி 1 நாழிகை.
60 நாழிகை 1 நாள்.
3 3/4 நாழிகை 1 முழுத்தம்.
2 முழுத்தம் 1 யாமம்.
8 யாமம் 1 நாள்.
7 நாள் 1 கிழமை.
15 நாள் 1 பக்கம்.
2 பக்கம் 1 மாதம்.
2 மாதம் 1 பருவம்.
3 பருவம் 1 செலவு.
2 செலவு 1 ஆண்டு.
( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )
-முத்தாரம் ஜனவரி 27 - 2 பிப்ரவரி 1989.

Saturday, September 27, 2008

கல்வி.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.-ஜார்ஜ் ஸனவல்.
சிறந்த ஆசிரியர் மாணவன் நிலைக்கு இறங்கி வந்து, அவன் கண்களால் பார்த்து, அவன் காதுகளால் கேட்டு, அவனது அறிவாற்றலுக்கு ஏற்பப் புரிந்து கொண்டு உணர்த்தவும் செய்வான். -விவேகானந்தர்.
ஆசிரியர் ஆவதற்கு அறிவுத் திறன் மட்டும் போதது, நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்க வேண்டும்.-எமர்சன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது.எந்தப் பிரச்சனையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் பிறக்கிறது.-விவேகானந்தர்.
கல்வியின் நோக்கம் பொருள்களை அறிவது மட்டுமன்று : வேலைக்கு அடிப்படை அமைப்பதும் அல்ல: பெருந்தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதே.-ரஸ்கின்.
கல்வி ஏழைகளுக்கு மூலதனம். செல்வந்தனுக்கு வட்டி! -ஹேரேஸ்மன்.
ஒரு மாணவன் மோசமானவனாக மாறினால் அது அவனை மட்டுமே பாதிக்கிறது. ஒரு ஆசிரியர் தம் கடமையைச் சரியாகச் செய்யாது போனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிக்கப்படுகிறார்கள்.-சத்ய சாயி பாபா.
சிந்திக்காமல் படிப்பது வீண்: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து -கன்பூசியஸ்.
செய்யத் தெரிந்த மனிதன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.-கர்னல் கீல்.
தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்ப்பவரே குரு.
கல்வித் துறையின் மிகமுக்கியமான நோக்கம் தன்னம்பிக்கையை வளர்பதாகவே இருக்க வேண்டும்.-விவேகானந்தர்.
மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றியே அடங்கியுள்ளது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-எமர்சன்.

அட்டமா சித்திகள் !

1 ) அணிமா - உடலை அணுஅணுவாகப் பிரிப்பது. அணுவிலும் குறுகியதாக்கி யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தல்.
2 ) மஹிமா-இயற்கையாக அமைந்த உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக் கொள்வது.
3 ) லகிமா- உடலை லேசாக்கிக் கொள்வது.
4 ) கரிமா- உடலை கனமாக்கிக் கொள்வது.
5 ) ப்ராப்தி-விரும்பியதைப் பெறுவது.
6 ) ப்ராசாம்யம்-விருப்பம் தடைபெறாது நிறைவேறுதல்.
7 )ஈசித்வம்- அறிவுள்ளவைகளும் , இல்லாதவைகளும் ஆணைக்கு அடங்கி நடத்தல்.
8 ) வசித்வம்- பிறருக்கு வசப்படாமல் தன் விருப்பப் படி நடத்தல்.
-அழகிக்கு ஆயிரம் நாமம் ( சாவி . 27 11- 1988 ).

Friday, September 26, 2008

எண்களில் விந்தை

எண்களில் விந்தை ( 9 )
இரு கைகளையும் பக்கவாட்டில் இணைத்து விரல்களை விரியுங்கள் .இப்போது, இடக்கைப் பெருவிரலிலிருந்து வலக்கைப் பெருவிரல் வரை பத்து விரல்கள்...எந்த எண்ணை 9 ஆல் பெருக்கவேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ளுங்கள். மடக்கிய விரலுக்கு இடப்புறம் எத்தனை விரல்கள் ? வலப்புறம் எத்தனை விரல்க்ள் ? இரண்டையும் இணைத்தால் அதுதான் விடை.!

எண் ' 7 ' ( பிரமிக்க வைக்கும் ).
' 7 ' என்ற எண்ணை 10 முறை உபயோகித்து 10000 வரவழைக்க வேண்டும். முடியுமா ? ( கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் செய்யலாம் ).
77777-7777=70000=10000
----------------- ---------
7 7

Thursday, September 25, 2008

செய்திச் சுடர் !

மகாத்மா காந்தி தன் இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் உடையவர்.அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் தில்லையாடி கன்னியப்பச் செட்டியார்,
நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர்.மேலும் , மாவீரன் என்று புகழ்பெற்ற அவ்னுக்கு
பூனையைக் கண்டால் ஒரே பயம்.
டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 67.
சகோதரி நிவேதிதாவின் உண்மைப் பெயர் ' மார்க்கரெட் நோபிள் '.
முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றவர்- மகா கவி சங்கர குரூப்.
நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,ஹானிபால், பதினான் காம் லூயி .. இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்தாம்.
நெப்போலியனை ' விதியின் மைந்தன் ' என்று அழைத்தார்கள்.
மகா அலெக்ஸாண்டர் ஐரோப்பா மாசிடோனியாவில் பிறந்தார், ஆசியாவில் பாபிலோனில் இறந்தார், ஆப்பிரிக்காவில்
எகிப்தில் புதைக்கப்பட்டார்.

Wednesday, September 24, 2008

காரியங்கள்.

காரியங்கள் இரண்டு வகைப்படும்.
1) அகிருத்ய காரணம் , அதாவது செய்யாதன செய்தல்.
2) கிருத்ய காரணம், அதாவது செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல்.
இந்த இரண்டில் பெரியவர்கள், அகிருத்ய காரணம், அதாவது செய்யாதன செய்தலுக்குத்தான் முக்கியத்வம் கொடுக்கிறார்கள்.
ஏனெனில், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல் நம்மைத் தான் பாதிக்கும். பிறரைப் பாதிக்காது.
அதோடு செய்ய வேண்டிய காரியங்களை நாம் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
--ஆன்மிகம். 29-12-1990.

Tuesday, September 23, 2008

மார்கழி மாதம் !

மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதுகளில் வாசலில் -- நீர் தெளித்து -- கோலமிட்டு பூக்களை வைப்பர்.
பரங்கி, பூஷணி பூக்களை வைக்கும் காரணம், இவை காய்த்த பின் பூப்பவை. மற்றவை யெல்லாம் பூத்தபின் காய்ப்பவை.
--மங்கை மாத இதழ்.ஜனவரி, 1991.

பலா மரம் !

பலா மரம் பூக்காது காய்த்து கனி கொடுக்கும் என்பது.......
பலா மரத்தில் ஆண் பூக்கள் கிளைகளின் நுனியில் அமைந்திருக்கும். ஆனால் பெண் பூக்கள் தண்டின் அடிப்பகுதியிலும் மற்றும் தண்டின் மற்றப் பகுதிகளிலும் , தண்டின் மேலேயே காணப்படும். மற்ற தாவரங்களைப் போல்வே மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்னரே மலர் கருவுற்று கனியாகிறது.
--தினமணி சுடர். 18-12-1990.

Monday, September 22, 2008

நமது நாகரிகத்தின் எல்லை எது ?

இராவணனை இராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியாயிற்று. பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று..திருமுடி கட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஆனால் இராமன் நேராக அயோத்திக்கு வந்து விட வில்லை என்கிறார் வால்மீகி. நந்தியம்பதியில் காத்திருக்கிறானாம். ஏன் தெரியுமா ?.பரதனுடைய அனுமதியில்லாமல் தலை நகரத்திற்குள் நுழைவது முறையாகாது என்பதற்காக.
--அரசு பதில். குமுதம். 20-12-1990.

மரம்....வளர்ச்சி.

ஒரு மரத்தை தினமும் 30 வினாடிகள் அசைத்துக்கொண்டே வருவோமானால் அந்த மரம், தன் இயல்பான வளரும் தன்மையை விட்டு வேகமாகவும், உறுதியாகவும், பெரிதாகவும் வளர ஆரம்பித்துவிடும். ஐக்கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவரின் கண்டுபிடிப்பு இது,
--பாக்யா இதழ். 07-12-1990.

Sunday, September 21, 2008

உதடே, உதடே ஒட்டாதே !

நாம்.எதன் மீது பற்று அற்று இருக்கிறோமோ........அதனால் நமக்குத் துன்பம் கிடையாது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர் .....
' யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் '--என்று கூறினார்.
இப் பாடலைச் சொல்லும் போது நம் உத்டுகள் ஒட்டுவதில்லை
--புலவர் கீரன். 08-12-1990.

ஆண்டவன்.

ஓரு பொருளைச் சிருஷ்டிக்க, உபாதான காரணம், நியமித்த காரணம் என்று இரண்டு காரணங்கள் வேண்டும். குயவன் பானையைச் செய்கிறான் என்றால், மண் தான் உபாதான காரணம். குயவன் தான் நியமித்த காரணம்.
ஆண்டவன் வேறுஒரு பொருளைக் கொண்டு இந்த உலகத்தை சிருஷ்டித்தான் என்று சொன்னால் அது துவைதமாகிவிடும். ஆகவே ஆண்டவன் தன்னைக் கொண்டுதான் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் என்று சொல்லவேண்டும்.
--P. R. வைத்திய நா த சாஸ்திரி (ஆன்மிகம் )14-11-1990

Saturday, September 20, 2008

எறும்புகள்.

எறும்புகளில் பலவகை இருப்பினும் அவைகளில்' ஃபார்மிக்கா ஆன்ட் ' என்ற வகை எறும்புகளை ரஷ்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததில், அவைகளுக்கு 1 முதல் 60 வரை சுலபமாக எண்ணமுடியும் என்ற சோதனை முடிவைத் தெரிவித்துள்ளார்கள். இத்தனைக்கும் அவைகளுக்கு வாசனை திரவம் கிடையாது என்றும் அறுதியிட்டுள்ளார்கள்.
--இன்று ஒரு தகவல். வானொலியில் கேட்டது. 24-05-1990.

Friday, September 19, 2008

பழமொழிகள்.

நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம். ---பெர்சீன் பழ்மொழி.
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து
கொள்கிறோம்.

Thursday, September 18, 2008

சிந்தித்தலில் ஆண், பெண்.

ஆண்கள் யோசிக்கிற மாதிரி பெண்கள் சிந்திப்பதில்லை. பெண்களைப் போல சிந்தனை ஆண்களுக்கு இல்லை. பெண்கள் ஆரம்ப- நடு வயதுகளில் மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்திச் சிந்திக்கிறார்கள்.வயதாக வயதாக வலதுபுற மூளையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் அதற்கு நேர் மாறாக, தொடக்க-நடு வயதுகளில் வலது மூளையைப் பயன்படுத்திவிட்டு, வயதாக வயதாகத் தான் மூளையின் இருபுறங்களையும் உபயோகிக்கிறார்கள்.
-எலிகள் மத்தியில் ஆராய்ச்சி செய்த, கலிபோர்னியா பல்கலைக் கழகக் குழு.
--ஆனந்த விகடன். 13-05-1990.

Wednesday, September 17, 2008

P A K I S T A N -பாகிஸ்தான்

P-----------என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள முதல் எழுத்து.
A------------AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்.-
K------------காஷ்மீர் ( ! )
I ----------- INDUS RIVER.
S------------- SIND.
TAN----------BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று எழுத்துக்கள்.

நியாயமும், தருமமும்

நமக்குப் பிறர் என்ன செய்யக்கூடாது என்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது.இதுதான் 'நியாயம் '.
நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யவேண்டும். இது தான் 'தருமம்'.
--தினமணி கதிர். 02-12- 1990.

Tuesday, September 16, 2008

பிளாஸ்டிக்ஸ்.

ஒரு குறிப்புக்காக 'உலோகம்' என்று சொன்னாலும் பிளாஸ்டிக்ஸ் ( ஆங்கிலத்தில் PLASTICS என்று பன்மையில் குறிப்பிடுவதே தொழில் முறை வழக்கு) ஒரு ரசாயணக் கலவையே.நிலக்கரி, சுண்ணாம்புக்கல், பெட்ரோலியம்,உப்பு, தண்ணீர் போன்ற மூலப் பொருள்களில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக்ஸ் நுகர்பொருள் தயாரிப்புக்களில் மாயா ஜால இழுப்புக்களுக்கெல்லாம் ஒத்துவருகிறது.'பிளாஸ்டிக்ஸ்' பொருட்களின் மூலக்கூறு ' பாலிமர் ".காய்கறிகள், மிருகங்களின் கொழுப்பு போன்ற பொருட்களிலிருந்து இயற்கை வகை ' பிளாஸ்டிக்ஸ் ' தயாரிக்கும் முறை அமெரிக்காவில் 1845 - ல் தொடங்கியது.
--சாவித்திரி நடராஜன். தினமணி, வியாழன்- மர்ர்ச்-29, 1990.

Monday, September 15, 2008

ரத்தம் உறைவதை தடுக்க பாம்பு விஷம்.

பாம்பு விஷத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட இரண்டு பொருள்கள், மனிதரது ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டி தட்டிப் போவதை தடுக்கவும், கரைக்கவும் வல்லவை என கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் 'கிங் பிரவுன்' ( KING BROWN ) மற்றும் 'முல்கா' என்ற பாம்புகளின் விஷங்களிலிருந்து இப்பொருட்களை வேதியியல் முறைப்படி பிரித்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.' கிங் பிரவுன்' விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு கடி வாயிலிருந்து இரத்தம் கசிவது நிற்பதில்லை என்பதை இவர்கள் கவனித்தனர். ஆதலால் இரத்தம் உரையாமல் , கட்டி தட்டாமல் தடுக்கும் குணம் அவ்விஷத்துக்கு இருக்கிறது என்று அவர்கள் ஊகித்தனர்.
--தினமணி, பிப்ரவரி, 2 , 1990. வெள்ளிக்கிழமை.

Sunday, September 14, 2008

பத்தாம் பசலி.--அக்பர் !

பத்து வருடங்களுக்குண்டான் கணக்கைப் பார்க்கும் முறைக்கு பஸலி முறை என்று பெயர்.இந்த பஸலி முறையை அமுலுக்கு கொண்டு வந்தவர் அக்பர்.இதுவே பின்னால் பத்தாம் பஸலி என்று மருவியது.அதுவே பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நபர்களை பத்தாம் பஸலி என்று குறிப்பிடும் அளவுக்கு மருவியது.

சேக்கிழார் .

சேக்கிழார் இயற்றியப் பெரிய புராணத்தின் முதற்செய்யுள்:
"உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் ........." இதில் உள்ள மொத்த எழுத்துக்கள் 63. நாயன்மார்கள் மொத்தம் 63 என்பது தெளிவு. வேண்டும் என்று அவர் எழுதவில்லை.ஆராய்ச்சியில் புலப்பட்டது.
--- தொலைக் காட்சியில், கேட்டது.(24-04-1089 ).

Saturday, September 13, 2008

எண்களில் விந்தை

111,222,333,444,555,666,777,888,999 இந்த எண்கள் அனைத்தையும் மீதியின்றி வகுக்கக்கூடிய எண்ணைச் சொல்ல முடியுமா? ஆனால் எண் 1 என்றும் 111 என்றும் சொல்லக்கூடாது.
விடை:- 3 , 37 இந்த இரண்டு எண்களும் மீதியிறி வகுக்கும்.

Friday, September 12, 2008

சூரியன்--V I B G Y O R .

சூரிய வணக்கம் வேத காலத்திலிருந்தே உண்டு.
சூரியனும் - நட்சத்திரங்களும் சுயமாக ஒளிப் பிரகாசம் உடையவை. அசைவு இருக்கும் சந்திரன் இப்படி ஒளியுடன் தோன்றாது. மற்ற கிரகதங்களும் இப்படியே.
சூரியனுக்கு 'ஸப்தா சுவன் ' என்பது ஒரு பெயர். ஏழு குதிரைகள் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் ஓர் அசுவந்( குதிரை) தான். அதற்கு ஏழு பெயர்கள் இருக்கின்றன.!
அசுவம் என்பதற்கு கிரணம் என்பது அர்த்தம். சூரியனுக்கு ஏழு தினுசான கிரண்ங்கள் இருக்கின்றன என்பது தான் தாத்பர்யம். ஒரே கிரண்ம்தான் ஏழு தினுசாகப் பிரிகிறது. 'விப்ஜியார்' என்பது அது தான்.
( V I B G Y O R :- VIOLET-INDIGO- BLUE- GREEN - YELLOW - ORANGE- RED ).
--காஞ்சி ஜகத்குரு பெரியவர். ( மங்கை, ஜனவரி, 1987 ).

Thursday, September 11, 2008

விக்கல்.

விக்கல் என்பது அனிச்சை செயல். டயாஃப்ரம் சுருங்கும்போது மூச்சுக் குழலின் மீதுள்ள மூடியான ' க்ளோடிங்' அடைபடுகிறது. அதனால் விக்கல் ஏற்படுகிறது.
விக்கலுக்கு எந்த விதமான காரண காரியங்களுமே இல்லாமல் கூட இருக்கலாம். ஏதாவது வியாதியின் அறிகுறியாகக்கூட இந்த விக்கல் இருக்கலாம். மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாமை, மனக் குழப்பம், குடல் வாதம் , அஜீரணம் போன்றவை கூட விக்கல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இரத்ததில் யூரியா அதிகரிக்கும் போது அதைக் குறைக்கத் தண்ணீர் தேவைப் படுகிறது.அதன் அடையாளம் தான் இந்த விக்கல். தண்ணீர் குடிப்பது, அதிர்ச்சியான செய்திகளை கேட்பது எல்லாம் மான்சீகமாக ஏற்படும் விக்கல்களைத்தான் நிறுத்த உதவும்.
--டாக்டர். நிர்மலா செந்தில்நாதன். சாவி இதழ், 11-01-1987.

Wednesday, September 10, 2008

தாஜ்மஹால் -- ஷாஜஹான்

.
காதலிக்காகக் காதலன் தாஜ்மஹால் என்ன? எதையும் கட்டுவான். ஏனென்றால் அது ஒரு போதை உலகம். ஆனால் ஒரு கணவன் தன் மனைவியின் -- அதுவும் 14 பிள்ளைகளின் தாயின் நினைவாக இப்படியொரு அற்புதத்தைக் கட்டுவது சாதாரணமான செயலல்ல. இந்தப் பார்வையிலும் தாஜ் ஒரு உலக அதிசயந்தான்.
"சரணடையா விட்டால் தாஜ்மஹாலைத் தகர்த்துவிடுவேன்......" என்று மிரட்டிய மகனுக்கு அஞ்சி, அரசைத் துறந்தவன் ஷாஜஹான். காதலிக்காக மகுடத்தைத் துறந்த ஆங்கில நாட்டு அரசனைவிட, இறந்து விட்ட மனைவியின்
நேசத்திற்காக அரசைத் துறந்த ஷாஜஹான் எவ்வள்வு உயர்ந்து நிற்கிறான்.
-- அப்துல் ரகுமான். ( ஜூனியர் விகடன், 14-05-1986 ).

Tuesday, September 9, 2008

உணவு அடிப்படையில் மனிதர்களின் 12 வகையினர்:

1) விண் காந்த அலைகளை மட்டும் உண்பவர்கள் ----சூப்பர் மேன்.
2 ) காற்றை மட்டுமே உண்பவர்கள்,
3) தண்ணீர் மட்டுமே சாப்பிடுபவர்,
4) தனிக் கொட்டைப் பருப்பு உண்பவர்கள்-----தேங்காய் மட்டுமே உணவு,
5) கொட்டைப் பருப்பினர்-----தேங்காய்,முந்திரி, வாதாம், பிஸ்தா முத்லியன.( சிறப்பாக இருப்பர்,)
6) தனி கனி உண்பவர்---ஒரு வேளை ஒரே கனியை உண்பவர்.--(உடல், உள்ள நலம் சிறக்கும் )
7) பழங்களை மட்டுமே உண்பவர்---மிகத் தூய்மை உள்ளமும், உடலும் உள்ளவர்.( யோகி, முனிவர்),
8) பச்சைத்தாவர உணவினர் --நோயற்ற ஆரோக்கியமும், நல்ல பண்பும் உடையவர்,
9) பால் சேர்க்காத சைவ உண்வினர்.--பொறுமை, பண்பு, அமைதியுடையவர்கள், 1
10) பால் சேர்ந்த சைவ உணவினர்---போறுமை உள்ளவர்கள்--நோய் வரும்,
12) புலால் மட்டுஃமே உண்பவர்கள்--மிகவும் கடைத்தரமான் மக்கள்.
---தினமலர் (13-05-1986.

Monday, September 8, 2008

கடிகார நேரம் --லிங்கன் !

ஆபிரஹாம் லிங்கன் மரணம் அடைந்தது இரவு மணி 10:08. அப்போதைய அமெரிக்க அரசாங்கம், கடிகார கம்பெனிகள் அந்த நேரத்தைத் தங்கள் விளம்பரங்களில் காண்பித்தால் சலுகைகள் அளிப்பதாக அறிவித்தது. அதன்படி அனேக கடிகார விளம்பரங்கள் 10: 08 என்ற நேரத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தன. இந்த வழக்கம் மெதுவாக உலகம் முழுவதும் பரவியதுடன், இப்போதும் பெரும் பாலான விளம்பரங்களில் முட்கள் 10:08 என்றே காட்டிக்கொண்டிருக்கின்றன.

Sunday, September 7, 2008

ஸகாரா--ஸாகரம்--மார்வாடி !

இப்போது ஸகாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்திரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக் காரர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு இராமாயணக் கதை தெரிந்திருக்கலாம்.
ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள்தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்திரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது. ஸகர புத்திரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்திரத்திற்கு ' ஸாகரம்' என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.ஸாகரம் என்ற பெயர் மருவி ' ஸகாரா' என்றாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட பாலைவனமாகத்தான் இருக்கிறது. பாலைவனத்திற்கு ஸம்ஸ்கிருதத்தில் 'மருவாடிகா' என்று பெயர். இதனால் தான் ராஜஸ்தான் காரர்களை 'மார்வாடி' என்று நாம் சொல்கிறோம்.
--அருள் வாக்கு. ஜகத்குரு காஞ்சி காமகோடி.

Saturday, September 6, 2008

" நவாவரண பூஜை "

மேரு அல்லது ஸ்ரீ சக்கரத்தில் ஒன்பது (நவ ) ஆவரணங்கள் இருக்கின்றன. அவை:-
1) சதுரம் 2 ) 16 கமலம். 3) 8 கமலம். 4) 14 முக்கோண்ம் . 5) 10 முக்கோண்ம். 6 ) 10 முக்கோண்ம். 7 ) 8 முக்கோண்ம்.
8 ) 9 )நடு முக்கோண்ம் . இவைகளில் உள்ள தேவதைகளைப் பூஜித்து முடிவில் ராஜராஜேஸ்வரிக்கு பிந்துவில்
பூஜை செய்வார்கள்

" சாம தான பேத தண்டம் "

சாமம்-----------இன்சொல் கூறல்.
தானம்----------விரும்பிக் கொடுத்தல்.
பேதம்-----------மிரட்டுதல்.
தண்டம்--------த்ண்டித்தல்.

பாரதத்தில் காணப்படும் எண் பொருத்தங்கள் !

1) வியாச பாரத்த்தில் பருவங்கள் எண் ------------18
2) பகவத் கீதையில் அத்தியாயங்களின் எண்---18
3) பாரதப் போர் நடைபெற்ற நாட்களின் எண்---18/
4) பாரதப் போரில் போரிட்ட சேனைகளின் எண்-18.

Friday, September 5, 2008

"நியாயக் களஞ்சியம் "

அஜகள ஸ்தந நியாயம் :-ஆட்டின் கழுத்தில் முலை வடிவமாகத் தொங்கும் ஊன் பிண்டம் பயனற்றதாக இருப்பது போல உலோபி கையிலிருக்கும் பொருள் பயனற்றதாக இருக்கிறது.
அஸிதார விரத நியாயம்:- இளைஞன் ஒருவன் , இளமையுள்ள பெண்னொருத்தியுடன் ஒரே படுக்கையில் இருப்பினும் அவள் பால் சிந்தை செல்லாதவனாய் புலனை அடக்கியிருத்தல்.இதுவே 'அஸிதார விரதம்.' பரதன் 14 ஆண்டுகள் கோசல நாட்டுக்கு வெளியில் (அயோத்திக்கு வெளியில் ) இருந்து ஆட்சி செய்து வந்ததையும், பின்பு இராமனிடம் ஒப்புவித்ததையும் இதுசேரும்.
1)அசுணம் இபம் விட்டில் மீன் வண்டு நியாயம் :-( 5 - ம் புலன் நுகர்ச்சியால் அழிகின்றவை ).
அசுணத்தைக் கொல்ல விரும்புவோர், முதலில் இனிய யாழை ஒலிப்பர். அவ்வொலி கேட்டு அது இன்புற்றிருக்கையில் திடீரெனப் பறையை அடிக்கவே , வெறுக்கத்தக்க பறையோசைக் கேட்டு அது மாய்ந்து விடுமாம்.
2 )யானை, ஊறு ஆகிய புலனால் அழிவது.(ஸ்பரிசத்தால் அழிவது ). குளிர்ந்த ஸ்பரிசம் வேண்டிச் சேற்றில் இறங்கிக் கால் பதிந்து மீளமுடியாமல் மாளும்.
3) விட்டில் பூச்சி ஒளியால் அழிவது. விளக்கின் ஒளியில் மயங்கி அதில் விழுந்து எரிந்து அழியும்.
4) மீன் சுவையால் அழிவது.
5) வண்டு கந்தத்தால் (வாசனை) அழிவது. வாசவை மிகுதியால் தனக்குப் பகையாகிய சண்பகம், வேங்கை முதலிய மலர்களில் மொய்த்து உயிரிழக்கும். இவை எல்லாவற்றிற்குமே ஒவ்வொரு புலன் களே அழிவுக்குக் காரணம்.ஆயின் மக்களோ வெனில் ஐம்புல நுகர்ச்சிக்கும் ஒருங்கே இடமாகிய பெண்ணின்பால் ஆசை வைத்து அழிகின்றனர்.
"கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிவும ஐம்புலனும்
ஒந்தொடி கண்ணே உள " -- குறள்.

Thursday, September 4, 2008

துஷ்டன் செய்யும் நல்ல காரியம் !

குணங்களைப் பார்த்துத் தான் நாம் இரக்கம் காட்ட வேண்டும் .ஏகாதசி விரதம் நல்லதுதான். ஆனால் புலி ஏகாதசி விரதம் (பட்டினி ) இருந்தால் மறு நாள் துவாதசி பாரனைக்கு (விடியற்கால போஜனத்துக்கு ) பசு மாட்டை அடித்துத் தின்று விடும். துஷ்டன் நல்ல காரியம் செய்தாலும் அது தீமையாகத்தான் முடியும்.
--சாண்டில்யன். ( விஜயமகாதேவி ) 09-12- 1985.

ராமன் மார்பு காயம் !

தண்ட காரண்யத்தில் கரதூஷணர்களுடன் போரிட்டு , வெற்றி கொண்ட ராமன் மார்பில் பல காயங்களுடன் சீதையிடம் வந்தான். சீதை அவன் காயங்களுக்கு மருத்துவம் செய்தாள். எப்படியென்றால், "பர்த்தாரம் பரிவுஸ்வஜே" அதாவது "கணவனை இறுக அணைத்தாள் . அதுவே மருந்தாயிற்று. மருத்துவம் பார்க்கும் (கணவனுக்கு ) முறை அதுதான்.
--வால்மீகி. ( சாண்டில்யன் விஜயமகாதேவி ) குமுதம் 23-05-1985 )

Wednesday, September 3, 2008

பீமன் !

கண்ணன் தூது போக வேண்டிய நிலையில அவரிடம் பீமன், " ஐந்து அம்சங்களைக் கண்டு பயந்து துரியோதனன் எங்களுக்கு நாடு கொடுத்தாக வேண்டும்! ! " என்று கூறுகிறான்.அந்த ஐந்து அம்சங்கள் எவை என்றும் குறிப்பிடுகிறான்.....
" என்னுடைய சத்ருகாதினி என்ற கதையின் வலிமைக்கு அவன் அஞ்சியாக வேண்டும். இணையில்லாத வில் வீரனான அர்ஜுனனின் காண்டீபத்திற்கு அவன் பயப்பட்டாக வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து போருக்கு வருவோம் என்ற எங்களுடைய இணைந்த பலம் அவனுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். கண்னன் எங்களுக்குத் துணையாக இருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு கலக்கத்தை அளிக்கும். பாஞ்சாலி சபதமிட்டுத் தன் கூந்தலைக் கலைத்து நிற்கும் தோற்றம் அவனுடைய நெஞ்சில் அச்சத்தை எழுப்பும் ! ". என்றான்.
இதில் தன் பலம், துணை பலம், தன் பலமும் - துணை பலமும் சேர்ந்த கூட்டு வலிமை, தெய்வ பலம், கற்பின் பலம் ஆகியவை வரிசையாக இடம் பெருகின்றன.
-- புலவர். கீரன். (ஞான பூமி. மே, 1985 ).

Monday, September 1, 2008

நதி - நதம்!

மேற்கிலிருந்து கிழக்காக ஓடுவதற்கு நதி என்று பெயர். கிழக்கிலிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பெயர்.

உங்கள் வயதை சரிபார்க்க....

உன்கள் முகவரியின் நம்பரை (வீட்டு எண் ) எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டால் பெருக்கவும். ஐந்தைக் கூட்டுங்கள். அதை 50 ஆல் பெருக்கவும் .அதனுடன் உங்கள் வயதைக் கூட்டவும் .ஒரு வருடத்தின் மொத்த நாட்களான் 365 ஐ அந்த எண்ணுடன் கூட்டுங்கள். வரும் தொகையிலிருந்து 615 ஐக் கழிக்கவும்.
தற்போதைய விடையின் இறுதி இரு எண்கள் உங்கள்வ் வயதைக் குறிக்கும். மற்ற எண்கள் உங்கள் வீட்டு எண்ணைச் சொல்லும்.
-நன்றி:- இதயம் பேசுகிறது. ( 03-11-1991 )