Thursday, June 26, 2008

கற்பூரம் / கற்பூர வீடிகா

கற்பூரத்திற்கு அக்காலத்தில் 'பளிதம்' என்ற சொல் வழக்கத்தில் இருந்தது. புத்த பிக்குகளும் உணவுக்குப் பிறகு வெற்றிலையுடன் அதைச் சேர்த்து அருந்தியுள்ளனர் என்பதை மணிமேகலை தெரிவிக்கிறது. பளிதத்தில் பலவகை இருந்ததாகவும், அதை சந்தனத்துடன் கலந்து உடலில் பூசிக் கொண்டனர் என்றும் பரிபாடல் கூறுகிறது. ஐவகை நறுமணப் பொருள்களில் கற்பூரமும் ஒன்று என சிலப்பதிகாரம் கூறுகிறது

நன்றி: வணிகமணி (௦06-10-1997).

தாம்பூலத்திற்கு மணமூட்ட, பச்சைக்கற்பூரம், ஏலரிசி, கிராம்பு, கஸ்தூரி, குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு, வால்மிளகு, சுக்கு, சுண்ணாம்பு இவைகளைத் தக்க அளவில் வெற்றிலைகளில் வைத்து "வீடிகா"(சிறு சிறு பீடா) வாகத் தயாரித்தால் அது 'கற்பூர வீடிகா'. தேவி (அம்பாள்) கற்பூர வீடிகாவைச் சுவைக்க அதன் நறுமணம் வெளியாகிறது.

லலிதா சகஸ்ர நாமம் ஸ்தோத்திரத்தில் வரும் சில வரிகள்.
நன்றி: சாவி இதழ் (02-03-1986).

2 comments:

கோவி.கண்ணன் said...

ஆசிரியர்கள் மாணவர்களை,

கற்பூர புத்தி, கரி புத்தி என்பார்கள்.

தற்பொழுது உள்ள (கலப்பட) கற்பூரத்தில் கரியும் இருக்கிறது.

க. சந்தானம் said...

தற்போது உள்ள கற்பூரத்தில் கரியும் இருக்கிறது என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் .