Wednesday, December 31, 2008

எப்படிப் பட்ட மழை !

இருபத்து நான்கு மணி நேரத்தில்,
2.5 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தால் :அது மிகச் சாதாரண மழை.
7.4மில்லி மீட்டர் வரை பெய்தால்................ :சாதாரண மழை.
7.4--34.9.மி.மீ வரை பெய்தால் .........................:சுமாரான மழை.
35--56.5 மி .மீ வரை எய்தால்.......................... ..:சற்றே கனத்த மழை.
56.6--120 மி.மீ வரை பெய்தால்....................... .:கனத்த மழை.
இதற்கு மேல் பெய்தால்.................................. ...:மிகக் கனத்த மழை என்று சொல்லப்படுகிறது
--கல்கி. 15-10-1978..

Tuesday, December 30, 2008

"C A N C E R "

"Cancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. இந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர்.!

Monday, December 29, 2008

மன்னரும் - ராஜ்யமும்.

மன்னர்களுக்கு மன்னனான பேரரசனைக் குறிக்க: கீழ்த் திசை அரசர் சாம்ராட் என்றும், தெற்குத் திசை அரசர் போஜர் என்றும், மேற்குத் திசை அரசர் ஸ்வராட் என்றும், வடக்குத் திசை அரசர் விராட் என்றும், மத்திய அரசர் ராஜா என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்து.
அரச அதிகாரத்தின் பல படிகள்: ராஜ்யம், சாம் ராஜ்யம், பெளஜ்யம், ஸ்வாராஜ்யம், வைராஜ்யம், பாரமஸ்த்யம், மஹாராஜ்யம், ஆதிபத்யம், ஸ்ராவசியம் என்பவை.
-மஞ்சரி . நவம்பர், 1979.

Sunday, December 28, 2008

சூரியன்.

சதபத ப்ராஹ்மணம் என்ற நூலில் 12 மாதங்களுக்குப் பன்னிரு சூரியர்கள் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அவர்களாவன :
விவஸ்வான்-, அர்யமா-, பூஷா-, த்வஷ்டா- ஸவிதா- பக- தாதா- விதாதா- வருண - சக்ர - உருக்ரமா - ஸூர்ய.
சூரியனுக்கு உரித்தான அர்க்கபத்ரம் (எருக்க இலை ) விசேஷம் நிரம்பியது. குஷ்டம் போன்ற நோயைத் தீர்க்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. ரத சப்தமி அன்று இதை உடலில் வைத்து நீராடுவது ஒரு வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. ஆதியில் ஏழே கிரகங்கள்தான் . பிற்பாடுதான் ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒன்பதாயின.
-அமுதசுரபி. ஜனவரி, பொங்கல் இதழ். 1979.

Saturday, December 27, 2008

'அதமன்-மத்திமன்-உத்தமன்'

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"
-ஆனந்தவிகடன். 07-01-1979.

Friday, December 26, 2008

பரிவாரத் தலங்கள் !

பரிவாரத் தலங்கள் !
மகாலிங்கம் எனப்படும் திருவிடைமருதூரைச் சுற்றிலும் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அவை:
வினாயகர் - திருவலஞ்சுழி.
முருகன் - சுவாமிமலை.
நடராஜர் - தில்லை (சிதம்பரம் ).
தெட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
நவக்கிரகம் - சூரியனார்கோயில்.
பைரவர் - சீர்காழி.
நந்தி - திருவாவடுதுறை.
சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

Thursday, December 25, 2008

எண் விந்தை !

1,2,3,4,5,.....என்று 1000 வரை கூட்டினால் என்ன வரும்?
ஒன்று முதல் ஆயிரம் வரை கூட்டவேண்டும் இல்லையா? ஆயிரத்தில் பாதி எவ்வளவு? 500. சரி இப்போ 1000+1=1001,
999+2=1001, 998+3=1001 என்று யோசிச்சுப் பார்க்கலாம்.இந்த 1001 -ல் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது. இருக்கட்டும் !
இத்துடன் 500 -ஐ பெருக்குங்கள். அதாவது 1001X500=5005,,00.
-வாசுதேவன், 5-ம் நிலை .மாண்வன்,பெரம்பூர். (தினமணிக்கதிர்.08-07-1990.

Wednesday, December 24, 2008

பரிகார தோஷம் !

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு அதிகாரம் இருக்கிறது . சூரியன் உங்கள் உடல் நலத்துக்கும் , சந்திரன் புகழ் மற்றும் பதவிக்கும் , செவ்வாய் வீட்டுக் கடன் நீக்கத்துக்கும் , புதன் உயர் படிப்பு , கௌரவத்துக்கும் , குரு உயர்ந்த அந்தஸ்த்து , அறிவுத் தன்மைக்கும் , சுக்கிரன் கணவன் - மனைவி நல்லுறவு மற்றும் திடீர் பொருள் வரவுக்கும் , சனி ஆயுள் நிலைப்பாட்டுக்கும் , நாம் செய்யும் சாதனைகளுக்கும் , ராகு சந்ததி விருத்திக்கும் , கேது அறிவு மற்றும் நற்சந்ததிகளுக்கும் உரியவர்களாவர் .அதனால் இவர்களுக்குத் தனித்தனியாக பரிகாரம் செய்வதுதான் நல்லது .
கொடுக்க...
மன்னிப்பை எதிரிக்குக் கொடுங்கள்
பொறுமையை போட்டியாளர்களுக்குக் கொடுங்கள்
மரியாதையை பெரியவர்களுக்குக் கொடுங்கள்
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்குக் கொடுங்கள்
சுய மரியாதையை உங்களுக்குக் கொடுங்கள் !
--அவள் விகடன் . 26-09-2008 .

Tuesday, December 23, 2008

இமயமலை !

இமயமலையின் பனிச் சரிவுகளில் அந்தத் துறவியைச் சந்தித்தான் மலையேறும் வீரன் ஒருவன். ' எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குப் போவதற்கான வழி எது ? ' என்று துறவியிடம் கேட்டான். ' நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்குவதாக இருக்கட்டும். வெகு விரைவில் சிகரம் உன் காலடியில்! ' என்றார் துறவி.
இதுதான் வாழ்கைக்கான எளிய மந்திரம். உங்களின் ஒவ்வொரு சிந்தனையும் செயலும் உங்கள் லட்சியத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் ராபின் ஷ்ர்மா. ' தி மான்க் ஹு ஸோல்ட் ஹிஸ் ஃபெராரி ' புத்தகத்தின் மூலம்.
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 20-08-2008 ) .

Monday, December 22, 2008

அரிசி .

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான் . பிரெஞ்சு மொழியில் ரைஸ் ( Riz ) , இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் ( Ris ) ஆங்கிலத்தில் Rice, தமிழிலும் அதே ஒலியோடு அரிசி ! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் -- ரையி !
--ஹாய் மதன். ( 20-08-2008 ) .
' பிறக்கும்போது நான் இந்துவாக பிறந்தது என் குற்றமில்லை; ஆனால்,
நான் இறக்கும்போது ஒருக்காலும் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் !
--அம்பேத்கர் .

Sunday, December 21, 2008

' டார்வின் '

மனிதனின் பரிணாமவளர்ச்சியை ஆய்வு செய்த ' டார்வின் ' 1859 -ம் ஆண்டு இதே நாளில் ( நவம்பர் , 24 ) ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற அறிவியல் ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார். இங்கிலாந்தில் உள்ள ஷெர்வ்ஸ்பரி என்ற இடத்தில் 1809 -ம் ஆண்டு பிப்ரவரி 9 -ம் தேதி சார்லஸ் ராபர்ட் டார்வின் பிர்ரந்தார். சிறுவயதில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார். 1958 -ம் ஆண்டு ஜூலை 20 -ம் தேதி முதல் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொகுத்து புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற பெயரில் 1859 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இது இயற்கை அறிவியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. மனித இனம் குரங்குடன் தொடர்புடையது என்று அவர் கூறிய கருத்து அப்போது மதரீதியாக பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் வந்தஆராய்ச்சியாளர்கள் குரங்கில் இருந்துதான் மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றது என்று உறுதிசெய்தனர்.
-தினமலர் . ( 24-11-2008 ) .

மரணத்துக்குப் பிறகு !

மரணத்துக்குப் பிறகு மனிதனின் கதியை, அவனிடம் இருந்த சத்வ ( சாந்தம் ), ரஜோ ( மூர்க்கம் ), தமோ ( சோம்பல் ) என்ற மூன்று குணங்களின் செயல்பாடுகளே நிர்ணயிக்கின்றன !
-- குணத்ரய வியாக யோகம் ( கீதை
--ஆனந்தவிகடன். (17-09-2008 )

Saturday, December 20, 2008

எய்ட்ஸ் !

எந்த ஒரு திருப்புமுனையையும் யாருமே கவனிக்காத மிகச் சின்னதொரு சம்பவம்தான் துவக்கிவைக்கும். இதற்கு மிகச் சிறந்த ( ! ) உதாரணம் எய்ட்ஸ் !
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஆதிவாசி உடலில் தொற்றிய எய்ட்ஸ் கிருமி , இன்று உலகையே ஆட்டிப் படைக்க எடுத்துக்கொண்ட காலம் மிக மிகச் சொற்பம். ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாண மருத்துவமனைகளுக்கு வித்தியாசமான பாலின நோயுடன் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அது எய்ட்ஸ் என்று தெரியவர, 'அமெரிக்காவில் எய்ட்ஸ் கிருமி நுழைந்தது எப்படி?' என்று ஆராய்ந்தார்கள். சில நூறு நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆப்பிரிக்காவில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு கை நிறைய பணத்தையும், உடல் நிறையக் கிருமிகளையும் சுமந்து வந்ததுதான் காரணம் என்று கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது அந்த நூறு ஊழியர்கள் , ஆயிரம் டன் சர்க்கரையின் ஒரு துகள் !.
--கி.கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 17-09-2008 ).

Friday, December 19, 2008

நஷ்டம் !

போதும் என்று திருப்தியடையாத அந்தணர்கள் நஷ்டத்தை அடைவார்கள்.
போதும் என்ற மனப்பான்மையுடைய அரசன் கஷ்டத்தை அடைவான்.
நாணத்துடன் கூடிய விலைமகள் நஷ்டத்தை அடைவாள்.
நாணமில்லாத குலமகள் நஷ்டம் அடைவாள்.
பொறாமையுள்ளவன் வளர்ச்சியடைய மாட்டான்.
பொறுமையுள்ள படை வீரன் பெருமையடைய மாட்டான்.

-வாரியார் சுவாமிகள்.

Thursday, December 18, 2008

மூவகை மனிதர்கள் !

1) விளாம்பழ மனிதன்:_ விளாம் பழத்தில் முக்கால் பகுதி ஓடும், கால் பகுதி பழமும் இருக்கும் முக்கால் பகுதி தனக்கும் கால் பகுதி பிறருக்கும் வாழ்வான் மனிதன்.
2) வாழைப் பழ மனிதன்:_ இம்மனிதன் தனக்கென்று கால் பகுதியும் (தோல் 1/4 பகுதி ) மீதி 3/4 பகுதி ( பழம் ) பிறருக்கும் பயன்படுவான்.
3) கொய்யாப் பழ மனிதன்:_இப்பழம் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதது போல் இவ்வகை மனிதனும் அப்படியே. !
_குமரி அனந்தன். சாவி 15-04-1984.

நம்பிக்கை !

நம்பிக்கை !
ஏகாதசியில் மரணம் அடைந்து, துவாதசியில் தகனம் நடந்தால் மோக்ஷம் அடையலாம் என்று கூறப்படுகிறது .காரணம் ஏகாதசியின்
தேவதை_ யமன், துவாதசியின் தேவதை _விஷ்ணு .எனவேதான் இந்துக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது.
_தினமணி கதிர். 17- 06-1984.

Wednesday, December 17, 2008

பிள்ளையார்

"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது !"
சாதாரணமாக ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும், ஆவணி மாதம் வரும் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜையைத் துவக்கி ,அந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீ ராம நவமிக்குப் பின் வரும் ஹனுமந்த ஜெயந்தி வரை,நமது சாஸ்திரங்களும், புராணங்களும் எடுத்துக் காட்டும் தெய்வங்களெல்லாம் ,அந்தந்தத் தினத்தில் பூஜை செய்து வழிபடுகிறோம்.ஹனுமந்த ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் ரெஸ்ட் ! இதைத் தான் 'பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

Tuesday, December 16, 2008

'குரான்'

இஸ்லாமியர்களின் வேதப்புத்தகமான 'குரானில்' முதல் அத்தியாயம் 'மாடு' என்று தொடங்குகிறது. கடைசி அத்தியாயம் 'மனிதன்' என்று முடிகிறது.
_கல்கண்டு (21-06-1984 ) .

Monday, December 15, 2008

கிராமம்_மணி நேரம்.

கிராமங்களில் உள்ள தொழிலாள்ர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ளபறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்
கரிச்சான் குருவி சப்திக்கும் நேரம் _3 மணி.
செம்போத்து ............................................._3-30 மணி
குயில்..........................................................._4-00 மணி.
சேவல்.........................................................._4-30 மணி.
காகம்............................................................_5-00 மணி.
மீன் கொத்தி..............................................._6-00 மணி.
_தினமணிகதிர் ( 17-06-1984 ).

Sunday, December 14, 2008

பிராதக் காலம்.

ஸூர்யோதயத்துக்கு முந்தைய 3 3/4 நாழிகைக்குப் (ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம் ) பிராதக் காலம் என்று பேர்.அருணோதயம் என்றும் சொல்வதுண்டு. அந்தக் காலத்தில் பச்சை ஜலத்தில் குளிப்பதற்கு பிராதஸ்னானம் எனறு பெயர்.
'பெய்_பாய்_காய்'
கேரளம்_'பெய்து விளையும் பூமி'
தஞ்சாவூர்_'பாய்ந்து விளையும் மண்'
இராமநாதபுரம்_'காய்ந்து விளையும் நிலம்'
பிடிபடுதல் !
மான் சப்தத்தினாலும், யானை ஸ்பரிசத்தினாலும், வெட்டுக் கிளி ரூபத்தாலும், மீன் ருசியாலும், வண்டு வாசனையாலும் பிடி படுகிறது.
_விவேக சூடாம்ணி. (ஞானபூமி. ஆகஸ்ட். 1984.

டிசம்பர் -- 14 .

-- 1799 அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தனது 67 வது வயதில் இறந்தார் .

Saturday, December 13, 2008

சிரிப்போ சிரிப்பு !

சிரிப்போ சிரிப்பு !
கணவன்: "உங்க அப்பா சரியான முட்டாள்னு இப்பத்தான் புரியுது...! "
மனைவி: "Too Late....என்னிக்கு உங்களை எனக்கு நிச்சயம் பண்ணினாரோ அன்னிக்கே எனக்குப் புரிஞ்சுப் போச்சு...!"
துணிக்கடையில்: "என்ன துணி காட்ட..? டு பை டு காட்டவா...?"
"வேண்டாம் ! ஒன் பை ஒன்னா காட்டுங்க !"
"உங்க பெண் ரொம்ப வெட்கப் படராளே....அவ பேரு என்ன...?"
"அவ பேரு'ஷை'லஜா !"
ஒரு ரோடில் போய்க் கொண்டிருந்த ஒரு மாட்டைப் பிடித்து அதன் கொம்புகளை அறுத்துவிட்டார் ஒரு போலீஸ்காரர் .ஏன் தெரியுமா?
அது 'NO HORN AREA '.
"நீ சரியான நாலப்பர்..."
"அப்படீன்னா...?
"எட்டப்பரில் பாதி ..."
"ஏண்டா A..B...C...D...எழுதச் சொன்னா, Q விற்குப் பிறகு ஏன் எழுதாமல் நிறுத்திட்டே?"
"அதுதான் Qஆச்சே...! நகர்ந்த அப்புறம் தானே எழுத முடியும் !"

டிசம்பர் -- 13 .

-- 1764 ம் ஆண்டு ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் இறந்தார் .

ராஜ நீதி !

'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று,ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'
மஹாபாரதத்தில் பிரஜாசுர பர்வத்தில் விதுர நீதியில், ராஜனீதீயோடு பரிபாலனம் செய்ய வேண்டிய ஓர் அரசனுக்குப் பொருந்துமாறு சொல்லப்பட்ட சுலோகத்தின் கருத்து இது.
1) புத்தி- 2) சரி,தவறு -3) நண்பன், விரோதி, நடுனிலையாள்ர் 4) சாம, தான, பேத, தண்டம் 5) ஐம்புலன், 6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்- 7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான தண்டனை, பண விரயம்.
_ஆனந்த விகடன். 14-10-1984.

Friday, December 12, 2008

'கம்' என்று இரு '

வினாயகரின் மகிமையை உலகில் வழங்கும் ஒரு பழமொழியிலிருந்தே உணரலாம்.
நீ 'கம்' என்று பேசாமல் இருந்தாலே எல்லாம் சரியாக நடைபெறும் என்று சொல்வது வழக்கம். அதற்குப் பொருள் 'கம்' என்ற பீஜாக்ஷ்ரத்தை ஜபித்தால் அவர் எல்லாக் காரியத்தையும் நடத்திக் கொடுப்பார் என்பதாகும்..
-ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம். ஆகஸ்ட் 1984.

Thursday, December 11, 2008

டிசம்பர் --11 .

-- கி.பி. 375 வது ரோமாபுரி அரசரான நீரோ மன்னர் பிறந்தார் .
-- 1847 ம் ஆண்டு 1200 க்கும் மேலான கண்டுபிடிப்புகான மனித் இனத்திற்குத் தந்த அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் பிறந்தார் .
-- 1832 ம் ஆண்டு பாரீஸ் நகரத்தின் புகழ் பெற்ற ஈபில் கோபுரத்தை உருவாக்கியவரும் , அமெரிக்காவில் உள்ள சுதந்திர சிலையை உருவாக்கியவருமான அலெக்ஸாண்டர் குஸ்டன் ஈபில் பிறந்தார் .
-- இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் விஸ்வனாதன் ஆனந்த் 1969 ம் ஆண்டு பிறந்தார் .

" 40 நாள் விரதம் "

40 நாள் விரதம் ( ஒரு மண்டலம் ) என்பது முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் நமது சித்தர்களால் தோற்றுவிக்கப் பட்டது. அதாவது வளர் பிறையில் 15 திதிகளும் ,தேய் பிறையில் 15 திதிகளும் சேர்ந்து திதிகள் 30. நட்சத்திரங்கள் 27 -ம் இந்த திதிகளில் அடங்கும். மேலும் மனிதனை ஆட்கொள்ளும் நவக் கிரகங்களையும் கணடனர். ஆக்வே திதிகள் -30 , கிரகங்கள் -9, ஆரம்ப நாள் -1 , முடிக்கும் நாள்-1 என 41 நாட்களாக அமைத்தனர்.

Wednesday, December 10, 2008

நோபல் பரிசு !

அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .
அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .

டிசம்பர் -- 10 .

-- 1896 -ம் ஆண்டு இதே நாளில் புகழ் பெற்ற நோபல் பரிசை நிறுவியவரான ஆல்பிரட் நோபல் தனது 63-வது வயதில் காலமானார் .
-- நோபல் பரிசு பெற்ற மிக இளையவர் எனும் பெருமையை டாக்டர் மார்டின் லூதர் கிங் 1964-ம் ஆண்டு பெற்றார் .

முசோலினி !

உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்றவர் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி .
போரில் முசோலினி தோற்ற பிறகு , முசோலினி ஒரு வேனில் ஏறிக்கொண்டு எல்லையைக் கடந்து தப்பிக்க முயன்றார் . அவரோடு இணைபிரியாத காதலி க்ளாரா பெட்டாசி !
1945-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அதிகாலையில் முசோலினியின் வேன் ஊர் எல்லையைத்தாண்ட முயன்றபோது அவருக்கு எதிரான புரட்சிப் படையினரால் வேன் தடுத்து நிறுத்தப்பட்டது . புரட்சிப் படையின் இளம் வீரர்கள் நுசோலினியைத் திகைப்போடு அடையாளம் கண்டு கொண்டார்கள் .
இருவர் வேனுக்குள் ஏறி முடங்கி , நடுங்கி அமர்ந்திருந்த முசோலினியைக் காதலியோடு கீழே இழுத்துக்கொண்டு வந்தனர் . ' இவனைக் கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்துவிடலாம் ' என்று சிலர் சொன்னார்கள் . ' நோ !' இங்கேயே தீர்த்துக் கட்ட வேண்டும் ' என்றார்கள் பலர் .
முடிவு நெருங்கிவிட்டதைப் புரிந்து கொண்ட முசோலினி மண்டியிட்டு , ' என்னைக் கொல்லாதீர்கள் ...' என்று கெஞ்சிக் கதற ஆரம்பித்தார் . அவருடைய கால்சராய் சிறுனீரால் ஈரமானதாகத் தகவல்.....
எதிரே நின்ற இளைஞர்களின் கைத் துப்பாக்கிகள் நிமிர்ந்தன . மண்டியிட்டிருந்த முசோலினி , அவருடைய காதலி இருவருடைய உடல்களும் சல்லடையாக்கப்பட்டு மல்லாக்க விழுந்தன .
பிற்பாடு அவர்களுடைய உடல்களைக் கொண்டு சென்று , மிலான் நகரின் பிரதான வீதியில் நட்ட நடுவே போட்டார்கள் . பல்லாயிரக்கணக்கான இத்தாலிய மக்கள் மௌனமாக உடல்களை வெறித்துப் பார்க்க....
திடீரென்று ஒரு சாமான்யப் பெண் , முசோலினியின் உடலருகே வந்து ' தூ ' என்று துப்பினாள் . பிறகு , பல பெண்கள் நெருங்கிச் சென்று துப்பிவிட்டு , முசோலினியின் உடலை எட்டி உதைத்தனர் . சில இளைஞர்கள் உடல்மீது சிறுநீர் கழித்தார்கள் .
இருவருடைய உடல்களும் இழுத்துச் செல்லப்பட்டு , ஒரு பெற்றோல் பங்க் வாயிலில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன . கிளாரா பெட்டாசியின் பாவாடை கீழ்னோக்கித் தொங்கியதால் , அவளுடைய தொடைப்பகுதியும் உள்ளாடையும் தெரிய.... பரிதாபப்பட்ட ஒரு இளைஞர் , கம்பத்தின்மீது ஏறி பாவாடையைச் சரிபடுத்தி , ' பின் ' ஒன்றைப் பொருத்திவிட்டு இறங்கினார் .
லேட்டாகத்தான் முசோலினியின் இந்தக் கொடூரமான முடிவு ஹிட்லருக்குத் தெரியவந்தது . ஹிட்லர் உடல் நடுங்கியது .
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் ! என்ற நூலில்

டிசம்பர் -- 9 .

டிசம்பர் -- 9 .
-- 1608 -ல் பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் பிறந்தார் .

Tuesday, December 9, 2008

பெரியம்மை நோய் !

பெரியம்மை நோய் !
பெரியம்மை நோயை முற்றிலும் ஒழித்துவிட்டதாக 1979 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது .
பெரியம்மை நோய் 15-ம் நூற்றாண்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது . ' வைரோலா ' என்ற வைரஸ் கிருமியால் பெரியம்மை பரவுகிறது . இந்த நோய் தாக்குவதால் மனிதர்கள் தோல் மற்றும் வாய் , தொண்டை பகுதியில் சிறிய கட்டிகள் தோன்றுகின்றன .ஒரு மனிதருக்கு இருக்கும் பெரியம்மை கிருமிகள் அவர் அருகில் இருக்கும் பலருக்கும் தொற்றுகிறது .
-- தினமலர் . ( 09-12-2008 ) .

சூரிய பகவான் !

வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய அம்சங்களை பலனாகத் தருகிற சக்தியை நவநாயகர்கள் தங்கள் வசம் வைத்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன . நவக்கிரகங்கள் என்று சொல்லப்படுகிற அந்த ஒன்பது பேரில் முதலாவதாக மட்டுமல்ல...நம் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருப்பவர் சூரிய பகவான் ! ' சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு ' என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன .பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து தனது ஒளிக்கற்றைகளை மருந்தாக அனுப்பி நம்மைக் காக்கும் வல்லமை பெற்றவர் சூரிய பகவான் .காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில் , சிறிது நல்லெண்ணெய உடல் முழுவதும் தடவிக் கொண்டு , ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக ந்ம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும் . உடலும் மனமும் புத்துணர்வு பெறுவதுடன் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும் . இதைத்தான் ' சூரியக் குளியல் ' என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள் .நம் சிக வாழ்வுக்காக சூரியனை வணங்கி ஆராதிப்பதால் பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறுகிறோம் .
நமது இந்த சூரிய வழிபாட்டைப் போன்றே ' சௌரம் ' என்ற வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் , ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் க்ப்ள்கின்றனர் .
நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல் , நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும் , பூப்படையாத பெண்களும் , முக்கியமாக கண் பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது .
--குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் . (05-12-2008 ) .

யார் எப்படி பேசுவார்கள்..

கிரிக்கெட் வீரர் --ஓவரா பேசுவார் .
போட்டோகிராபர் -- டெவலப் பண்னி பேசுவார் .
ரவுடி -- அடிச்சுப் பேசுவார் .
ஹோட்ட்ல் சர்வர் --' சூப்'பரா பேசுவார் .
வக்கீல் -- ' மெய் ' மறந்து பேசுவார் .
ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் -- காரசாரமா பேசுவார் .
பூக்கடைக்காரர் -- வார்த்தையை அளந்து பேசுவார் .
டயட்டீஷியன் -- உப்பு சப்பில்லாமல் பேசுவார் .
--அவள் விகடன் . ( 05-12-2008 ) .

Monday, December 8, 2008

கொடி நாள் !

டிசம்பர் . -- 7 .
நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .
அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .
அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .
--தினமலர் . ( 07-12-2008 ) .

விலங்குகள் - சங்கீதம் !

விலங்குகள் - சங்கீதம் !
விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கும் நமது சங்கீதத்துக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள்...
ஏழு ஸ்வரங்கள் விலங்குகளின் ஒலி
சட்ஜமம் -- மயில்
ரிஷபம் -- மாடு
கந்தாரம் -- ஆடு
மத்திமம் -- அன்றில் பறவை
பஞ்சமம் -- குயில்
தய்வதம் -- குதிரை
நிசாதம் -- யானை .
--அவள் விகடன் . ( 05-12-2008 ) .

டிசம்பர் -- 7 .

-- இந்திய கொடி தினம் .
-- 1782 -ம் ஆண்டு இதே தினத்தில்தான் இந்திய வரலாற்றில் புகழ் பெற்ற மன்னரான ஹைதர் அலி காலமானார் .
-- 1941 அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின்மீது ஜப்பான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தினர் .
-- 1995 இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 1 சி பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது .

Sunday, December 7, 2008

'கலைக்களஞ்சியம் '

( 06 -12 - 1768 )
அறிவு புரட்சிக்கு வித்திட்ட என்சைக்கிளோபிடியா என்ற கலைகளஞ்சிய தொகுப்பின் முதல் பதிப்பு 1768 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது .ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவை சேர்ந்த ஆதம் மற்றும் சார்லஸ் பிளாக் என்பவர்கள் இணைந்து , பொது அறிவை இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான ' கலைகளஞ்சியம் ' ( என்சைக்கிளோபிடியா ) வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டனர் .
ஒரு வார்த்தையை பற்றி அல்லது ஒரு பொருள் பற்றி , மாநிலம் , நாடு பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக்கித் தருவதுதான் இதன் நோக்கமாக இருந்தது .இதற்காக பிரிட்டானிக்கா என்சைக்கிளோபிடியா என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது .
சுவிஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் மற்றும் நடிகர் ஜேக்கியூ சாப்ரா என்பவர்தான் என்சைக்கிளோபிடியா வெளியிடும் , என்சைக்கிளோபிடியா பிரிடானிக்கா நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளராவார் .
2004-ம் ஆண்டு என்சைக்கிளோபிடியா 4.4 கோடி சொற்களை கொண்டதாக வெளியானது .இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கட்டுரைகள் இருந்தன . புத்தகவடிவிலும் , இன்டெர்நெட்டிலும் வெளியிடப்பட்டது . எனினும் , இணையதளத்தில் ஒரு சில பகுதிகளை மட்டுமே பார்க்கக்கூடிய அளவில் மட்டுமே வெளியிட்டது .
--தினமலர் . ( 06-12-2008 ) .

Saturday, December 6, 2008

' விலைவாசி பஞ்ச் '

விலைவாசி ஏறுது ராக்கெட்ல...
ஷேர் இறங்குது மார்கெட்ல...
பணம் இல்ல பாக்கெட்ல...
துண்டு விழுது பட்ஜெட்ல !
அன்று சுகவாசி...
இன்று சன்யாசி...
காரணம் விலைவாசி !
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி விலைவாசி !
ஆக முடியுமா ?
இந்தியாவின் பெருமை
சந்திராயன் ராக்கெட் !
இந்தியாவின் சிறுமை
விலைவாசி ராக்கெட் !
கல்யாணம் , காது குத்துக்கு
லோன் போட்டோம்
அந்தக் காலம் !
காய்கறி வாங்க லோன்
கேக்கறோம் இந்தக் காலம் !
--அவள் விகடன் . ( 05-12-2008 )

Friday, December 5, 2008

எட்டுவகையான திருமணங்கள் !

எட்டுவகையான திருமணங்கள் !
1) பிராம்மம்: தாய் தந்தையர் சாலங்கிருத கன்னிகாதானம் செய்து கொடுப்பது.
2) தைவம் : யாகத்தின் முடிவில் யாகம் செய்யும் ஆச்சாரியனுக்குக் கன்னியை தானம் செய்வது.
3) ஆரிஷம்: வரனிடமிருந்து 2 பசுக்களை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
4) பிரஜாபத்யம்: இருவரும் சேர்ந்து தருமம் செய்யட்டும் என்று மனத்தால் தானம் செய்து விட்டு விடுவது.
5) ஆசுரம்: மிகுந்த பொருளை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
6) காந்தர்வம்: கன்னிகையும் வரனும் தனியே மனம் இசைந்து கலந்து கொள்வது.
7) இராக்கதம்: வலிமையால் போரிட்டுக் கன்னிகையைக் கொண்டு போவது.
8) பைசாசம்:.
-கிருபானந்தவாரியார், ( பாரதப்பெருங்காவியம் )

Thursday, December 4, 2008

மும்பை...

26-11-2008 .மும்பையில் கடந்த 26 முதல் 29-ம் தேதிவரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் .
மும்பைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் தவராமல் பார்ப்பது சில இடங்களை.....
அதில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் மூன்று....
ஒன்று கேட்வே ஆப் இந்தியா , நரிமன் பாயிண்ட் , வி . டி .ரயில்வே நிலையம் .
இந்த முன்று இடங்களையும் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம்
சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் , தவறாமல் பார்ப்பது இந்தியாவின் நுழைவு வாயிலில் கேட்வே ஆப் இந்தியாவை .அதை ரசிக்கும் பலர் கடலுக்குள் படகு மூலம் ஒரு ரவுண்ட் சென்று வருவர் . அப்படிச் செல்லும்போது கடலுக்குள் இருந்து பார்க்கும் போது தெரியும் தாஜ் ஓட்டலின் அழகே தனி . மும்பைக்கு அதுதான் தாஜ்மஹால் . 100 வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ள ஓட்டல் . உலகிலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட ஓட்டல்களில் இது முதலிடம் வகித்தாலும் ஆச்சர்யமில்லை . அவ்வளவு பேர் அதை புகைப்படம் எடுத்திருப்பார்கள் . இந்தியாவில் உள்ள தாஜ் ஓட்டல்கள் அனைத்தும் டாடாவிற்கு சொந்தமானவை . ஒரு முறை ஜாம்ஜெட்ஜி டாடா வெளினாட்டில் வாட்சன் ஓட்டலில் சென்று ரூம் கேட்டபோது அவருடைய தோலின் நிறத்தை ( கருப்பர் ) பார்த்து ரூம் இல்லை என்று சொல்லப்பட்டது . ( வள்ளல் அழகப்ப செட்டியார் மும்பை வந்திருந்தபோது , ரிட்ஜ் ஓட்டலில் ரூம் இல்லை என்று மறுக்கப்பட்டபோது , ' உங்களது ஓட்டல் என்ன விலை ?, ஒரே செக்கில் கொடுத்துவிடுகிறேன் ' என்று சொன்னார் என்பது வரலாறு ).
அந்த வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் மும்பையில் ஒரு ஓட்டல் கட்டவேண்டும் என்று எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் ' தாஜ் ஓட்டல் ' . அந்த தாஜில் தங்குவதற்கு கட்டணங்கள் அதிகம் . ஒரு இரவுக்கு ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் .
அந்த புராதன தாஜ் ஓட்டலின் மேல் பகுதியில் ஒரு டோம் உள்ளது .( கோயிலின் கோபுரம் போன்று உள்ள பகுதி ) அங்கு உள்ள பிரசிடன்சியல் சூட் தான் உலகத்திலேயே அதிக கட்டணங்கள் உள்ள ரூம்களில் ஒன்று . நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் கட்டணம் . அந்த டோம் தீவிரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்தபோது பலரின் மனதும் பதறிதுடித்தது என்னவோ உண்மைதான்
--தினமலர் . ( 03-12-2008 ).

Wednesday, December 3, 2008

'பதினெட்டு ஸித்திகள் !'

1) அணிமா சித்தி.
2) லகிமா .
3) மகிமா.
4) ஈசக்தவ.
5) ரசித்வ.
6) ப்ராகாம்ய.
7) புத்தி.
8) இச்சா.
9) ப்ராப்தி.
10)ஸர்வகாம.
11) ஸர்வஸம்பத்ப்ரத.
12) ஸர்வ ப்ரியம்கர.
13) ஸர்வ மங்கள காரண.
14) ஸர்வ துக்கவிமோசன.
15) ஸர்வ ம் ருக்யுப்ரசமண.
16) ஸர்வ விக்னனிவாரண.
17) ஸர்வாங்க ஸுந்தர.
18) ஸர்வ லெளபாக்ய தாயக.

Tuesday, December 2, 2008

உங்கள் வயதை அறிய வேண்டுமா ?

பெரும் பாலான இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் கைகொண்டுள்ள முறை இது. தற்போது உங்களுக்குள்ள வயதை 80- லிருந்து கழியுங்கள்,அந்த மிச்சத்தை 7-ஆல் பெருக்குங்கள், அந்தத் தொகையை 10-ஆல் வகுங்கள். கிடைக்கும் விடைதான் உங்கள் மீதி வயதின் உத்தேச மதிப்பு.
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது !"
சாதாரணமாக ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும், ஆவணி மாதம் வரும் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜையைத் துவக்கி ,அந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீ ராம நவமிக்குப் பின் வரும் ஹனுமந்த ஜெயந்தி வரை,நமது சாஸ்திரங்களும், புராணங்களும் எடுத்துக் காட்டும் தெய்வங்களெல்லாம் ,அந்தந்தத் தினத்தில் பூஜை செய்து வழிபடுகிறோம்.ஹனுமந்த ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் ரெஸ்ட் ! இதைத் தான் 'பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

Monday, December 1, 2008

ஹிட்லரின் உயில் !

வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த ஹிட்லர் திடீரென்று " கோய பெல்ஸ் ....என் உயிலை டிக்டேட் பண்ணப் போகிறேன்....எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார் . கலங்கியவாறு நின்ற கோயபெல்ஸ் அதற்குத் தயாரானார். ஹிட்லர் சொல்ல ஆரம்பித்தார்:
" இத்தனை காலப் போராட்டத்தின் இடையில் திருமணம் என்கிற பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாமல் போனது. எனக்காகவே வாழ்ந்து , கடைசிவரை என்னைப் பிரியாமல் துணைநிற்கும் ஈவாவை -- இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்வதற்கு முன்பு -- திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். ஈவா அவளாகவே என்னிடம் வந்தாள் . என் சுக துக்கங்களில் பங்கு கொண்டாள். என்மீது அவள் வைத்திருந்த காத்ல் ஆச்சரியமானது. என்னோடு தானும் இறக்கவேண்டும் என்பது அவள் விருப்பம். மக்களுக்காகவே என்னை அர்பணித்துக்கொண்ட நான் அவளுக்கு என்று எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. மரணத்தையாவது நாங்கள் கைகோத்து ஒன்றாக சந்திக்கிறோம் ." என்று முடித்தார்.
பெருமிதத்துடனும், வேதனையுடனும், விம்ம ஆரம்பித்தார் ஈவா ப்ரான்.!.
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் . என்ற நூலில்.

Sunday, November 30, 2008

ஹிட்லர் !

நேசநாடுகளின் படைகள் பெர்லின் நகரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் , ' தோல்வி நிச்சயம் ' என்கிற காலகட்டத்தில் ஹிட்லர் தான் செய்த தவறுகளை, கொடூரங்களை, கொலைகளை உணர்ந்தாரா ?! இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது....
அந்தக் கடைசி நாட்கள்....மார்ஷல் ஷுகோவ் தலைமையில் ரஷ்ய ராணுவ டாங்கிகள் பெர்லின் தெருக்களில் நுழைந்து விட்டன. இன்னொருபுறம் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் நூற்றுக்கணக்கான டாங்கிகளுடன் பெர்லின் நகரில் ஓடும் புகழ்பெற்ற ரைன் நதியைக் கடந்தார்.
பாதி பாலத்தில் டாங்கியிலிருந்து கீழே குதித்த பேட்டன் ஓரமாக நின்று பாண்ட் 'ஜிப் 'பை கழற்றியது கண்டு மற்ற ராணுவ வீரர்கள் சற்றுத் திகைத்தனர். பாலத்தின் மேலேயிருந்து பேட்டன் , ரைன் நதியின் மீது சிறுநீர் கழித்தார் ! பிறகு திரும்பிப்பார்த்து புன்னகையுடன் ' இது என் நீண்ட நாள் கனவு !' என்று அவர் சொல்ல , அமெரிக்க வீரர்கள் பலமாகச் சிரித்தனர்.
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில்.

Saturday, November 29, 2008

ரத்தம் !

ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம் ! உயிரிருக்கும் வரை உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும் , இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு.
மனித உடலிலுள்ள ரத்தம் ( மற்றுமுள்ளப் ) பற்றிய ஆராய்ச்சிக்கு ' ஸராலஜி ' என்று பெயர். 'ஸர ' என்கிற சமஸ்கிருத வார்த்தயிலிருந்து வந்தது இது. ' ஸர ' என்றால் ஓடுவது, -- to flow என்று அர்த்தம்.
ரத்தத்துக்கு இரு ' முகங்கள் ' உண்டு ! ஒன்று -- அது மருத்துவர்களுக்குக் காட்டும் ( நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த )முகம். மற்றது -- போலீஸுக்குக் காட்டும் முகம் !
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில் .

Friday, November 28, 2008

பற்களைப் பேணுதல் !

பற்களைப் பேணுதல் ஒரு விஞ்ஞானக்கலை. பல் துலக்கும்போது பற்குச்சி நார்களில் ஐம்பது சதம் ஈறுகளில் இருக்கவேண்டும் . ஐம்பது சத்ம்தான் பல்லில் படவேண்டும். ஒரே இடத்தில் முன்னும் பின்னுமாய் உருட்டி அழுத்தித் தேய்க்க வேண்டும். மேற்பல்லை மேலிருந்து கீழாய்; கீழ்ப்பல்லை கீழிருந்து மேலாய்.
வெளிப்புறம் துலக்குவதோடு பலபேர் முடித்துக் கொள்கிறார்கள். உட்புறமும் துலக்கவேண்டும். நித்தம் இருமுறை பல் துலக்கவேண்டும். ஓரம் தேய்ந்த பற்குச்சிகளை எறிந்துவிட வேண்டும். " பற்களையும் பாதங்களையும் தூய்மை செய்யாமல் படுக்கைக்குச் செல்லாதே " என்பது நல்ல தத்துவம்.
பாம்பு !
பாம்பிற்குத்தான் காலில்லையே பிறகென்ன பாம்பின் கால் பாம்பறியும் ?
' கால் ' என்ற சொல்லுக்கு ' வளை ' என்றோர் பொருள் உண்டு. எத்தனை தூரம் இரைதேடி மீண்டாலும் பாம்பு தன்வளையைத் தான் அறியும். என்பது அதன் பொருள்.
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

Thursday, November 27, 2008

தேனீக்கள் !

சொகுசாயிருக்கும் ராணித்தேனீயைவிட ,பறந்து பற்ந்து தேன் சேகரிக்கும் வேலைக்காரத் தேனீக்கள் தான் இரக்கத்திற்குரியவை .ஆனால் , ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான் . பல ஈக்கள் போட்டியிட்டு ஒரே ஓர் ஆண் தேனீதான் ராணித்தேனீயைக் கூடுகிறது . உறவு முடிந்ததும் ஆண் தேனீயின் ஆண் குறி உடைந்து ராணித்தேனீயின் பெண் புழையை முற்றிலுமாய் மூடிவிடுகிறது . அதன்பிறகு எந்தத் தேனீயும் ராணித்தேனீயை புணர முடியாது .
அது ஒரு முறை உள்வாங்கிய இந்திரியத்தில்தான் காலந்தோறும் கருத்தரித்து முட்டையிட்டுக் கொண்டேயிருக்கிரது .தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் உடலுறவுக்கு அனுமதிக்கப்பட்ட ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான். அதைவிட அனுதாபத்திற்குரியது அதைப் புணர்ந்து முடித்ததும் ஆண்குறி உடைந்து அப்போதே செத்துப் போகிற ஆண்தேனீ ,
இயற்கையில்தான் எத்தனை விசித்திரங்கள் .
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

Wednesday, November 26, 2008

இடி - மின்னல் !

மழை பெய்யுமா , வெயில் அடிக்குமா எனக் கணிக்க இயலாத நிச்சயமற்ற வானிலை சில சமயம் நிலவும் . குளிர்ச்சியான காற்று உங்கள் உடம்பைத் தழுவிச் செல்கிற அந்த க்ளைமேட்டில் , பூமியிலிருந்து காற்று மேலே எழும்பும் . நல்ல ஈரப்பதம் உள்ள காற்று மேலெழும்ப அதற்கு ஒரு சக்தி வேண்டும் . அந்த சக்தி வெளியில் கிடைக்காதபோது , உள்ளுக்குள் இருந்தே எடுத்துக்கொள்ளும் . அப்போது ஈரப்பதமான காற்று குளிர்ச்சி அடைந்து திரள் மேகங்கள் ( நீர்த் துளிகள் ) உருவாகும் .
அவை மேலே போகும்போது ஏற்கனவே அங்குள்ள திரள் மேகங்களுடன் உராயும் . அப்போது , ஒருவித மின்புலம் உண்டாகும் . அந்தச் சமயத்தில் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெப்பம் உருவாகும் . இந்த அளவுக்கான அதிக வெப்பத்தினால் அப்பகுதி திடீரென விரிவடையும்போது உண்டாகும் சத்தத்தைத்தான் இடி என்கிறோம் .
அப்போது ஏற்படும் வெளிச்சம்தான் மின்னல் .ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் , இடி முதலில் தோன்றினாலும் மின்னல்தான் நம்மை முதலில் வந்தடைகிறது .
இடிதாங்கி !
இடிதாங்கி ஒன்றே பெரிய கட்டடங்களையும் , வீடுகளையும் இடியிலிருந்து காப்பதற்கான வழி என்ற நிலையில் எங்கு கிடைக்கின்றன இடிதாங்கிக் கருவிகள் ?
சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் கிடைக்கிறது . அங்கு , " பைப் , ராடு டைப் என இரண்டு வகையான இடிதாங்கிகள் விற்பனைக்கு உள்ளன .பைப் வகை 950 -- 1,000 ரூபாய் வரையிலும் , ராடு வகை 2,750 --4,250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது .முழுவதும் காப்பரால் ஆன இந்த இடிதாங்கிகள் , எந்தக் கோணத்தில் இடி விழுந்தாலும் கிரகித்துக்கொள்ளக் கூடியவை .
இடியிலிருந்து வரும் மின்சாரத்தைக் கிரகித்து பூமிக்குள் அனுப்புவதற்காக இடிதாங்கியுடன் காப்பர் ஒயர்கள் இணைக்கப்பட்டு , அவை பூமிக்குள் புதைக்கப்படுகின்றன .
--சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ரமணன் .ஆனந்தவிகடன் .( 05-11-2008 ) .

Tuesday, November 25, 2008

--தெர்மாமீட்டர் '

கி.பி. 1561 -ல் இத்தாலியில் மருத்துவ மேதை ஸாங்ட்டோரியஸ் பிறந்தார் . 1564 -ல் பிறந்த இன்னொருவர் , மருத்துவம் படித்துவிட்டு விஞ்ஞானத்துக்கு தாவினார் . அவர் , கலிலீயோ !
இருவரும் பலவிதமான தெர்மா மீட்டர்களை ஒரே சமயத்தில் ...ஒரே நாட்டில் கண்டுபிடித்தார்கள் .
' SLEAZY '
குடும்ப நாவல் , க்ரைம் நாவல் , போல ' S L E A Z Y '- ம் ஒரு நாவல்தான் .
இதன் உச்சரிப்பு மென்மையாக இருந்தாலும் , அர்த்தம் என்னவோ கடுமையானது . ' கீழ்த்தரமான , நேர்மையற்ற , சாக்கடைத்தனமான ' என்பது பொருள் .அமெரிக்க மீடியா 80 - களில் உருவாக்கிய புது வார்த்தை இது --ஹாய் மதன் . ஆனந்தவிகடன் .( 19-11-2008 ) .

Monday, November 24, 2008

கூவம் ஆறு !

கூவம் நதி சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் துவங்குகிறது .
புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன்பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன .
கூவத்தின் துணை வடினிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 எக்டேர் ஆயக்கட்டு கொண்டது . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது .
அங்கிருந்து சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேறுகிறது .
அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .
கூவம் நதியின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து ஏராளமான குடிசைப் பகுதிகள் அமைந்து உள்ளதால் கூவத்தின் உண்மையான அகலம் மூன்றில் இரண்டு மடங்காக குறைந்துள்ள்து .இதன் காரணமாக , கூவம் நிரம்பி வழிந்து பக்கிங்காம் கால்வாய் , ஒட்டேரி போன்ற சிறு நீர்வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன .
இதனால் சாக்கடை தண்ணீரின் தொடர்புகளும் அடைபடுகின்றன . இது தவிர , கடலில் கலக்கும் நுழைவாயிலில் மன் அடைப்பு அதிகரிப்பதால் , தண்ணீர் செல்வது தடைபடுகிறது .
இந்த நிலையில் தேம்ஸ் நதி போல் கூவம் மாறுமா ? அல்லது தொடர்ந்து நாறுமா ?.
-- தினமலர் .சென்னை பதிப்பு . ( 06-10-2008 ) .

Sunday, November 23, 2008

காந்தியின் அரண்மனை !

இன்று குண்டுவெடிப்புக்களால் குதறப்பட்டுக்கிடக்கும் அதே அகமதாபாத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதிய அந்த எளிய மனிதர் வசித்த அரண்மனை இருக்கிறது.
சலசலத்துச் செல்லும் சபர்மதி நதிக்கரையோரம், பல சரித்திர நினைவுகளைத் தன்னுள்ளே பதித்து, மிக எளிய குடில்களுடன் அசோக மரங்கள் தலையாட்டி அழைக்கின்றன.காந்தியின் சத்திய சேதிகளை எடுத்துச் செல்வது போல் அணில்கள் ஓடுகின்றன.கிலிகள், குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என்று பறவைகள் சந்தோஷமாக திரிகின்றன.
முதலில் கவர்வது காந்தியைப்பற்றி பற்றிய கண்காட்சி புகைபடங்கள், ஓவியங்கள்,மகாத்மா கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் எல்லாம் தேசத்தின் கறைபடாத நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
அடுத்து மகாத்மாவும், அன்னை கஸ்தூரிபாவும் வாழ்ந்த ஹிருதயகுஞ் குடில்.ஆசிரமத்துக்கே இதயமாக விளங்கிய குடில் என்பதால், இதற்கு இந்தப் பெயர்.
வாயிலில் ஒரு முதியவர் கை ராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருக்கிறார்.
குடிலில் நுழைந்தவுடன் அதன் எளிமை தாக்குகிறது. காந்தியின் அறை பட்சிகளின் இன்னிசைக்கிடையே மோனத்தவம் புரிகிறது. மெல்லிய மெத்தை, திண்டு, குட்டையான எழுது மேஜை, ராட்டை, ஊன்றுகோல்,
தேசியத் தலைவர்கள், வெளினாட்டுத் தலைவர்கள் காந்தியை இங்கே வந்துதான் சந்தித்தார்கள். இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் இங்கேதான் கருத்தரித்தன காந்தியின் அறையை ஒட்டி, அன்னை கஸ்தூரிபாவின் அறை.இரு ஜன்னல்களைத் தவிர வேரு எதுவும் இல்லை.ஒரு திறந்தவெளி முற்றம்.சமையல் சதுரம்.
அடுத்து, காந்தியால் கவரப்பட்ட வினோபா பாவே வாழ்ந்த 'மீரா' குடில், அதையடுத்து இருப்பது, ராஜேந்திர பிரசாத், நேரு, ராஜாஜி, கான் அப்துல் கபார்கான் போன்ற பெரும் தலைவர்கள் வாழ்ந்த 'நந்தினி'எளிமையான குடில்.
சபர்மதி நதிக்கரை ஓரம் திறந்தவெளி , பிரார்த்தனை பூமி. காந்தி வாழ்ந்த பூமியைத் தொட்டுத் தழுவிச் செல்கிற பெருனையோடு, சபர்மதி நதி ஆசிரமத்தின் அஸ்திவாரத்தை ஈரம் பண்ணிக்கொண்டு ஓடுகிறது. .
--ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Saturday, November 22, 2008

தாமஸ் ஆல்வா எடிசன் !

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.
அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.
எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.
தந்தி தொழில் ட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.
1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது,'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.
மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
--தினமலர் ( 21-11-2008 ). .

Friday, November 21, 2008

'விரல்கள்' சாதனை !

மேகாலயாவைச் சேர்ந்த தமிகி பஸாவுக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்ததும், அதிக விரல்கள் கொண்ட 3 நபர்கள் உள்ள நாடு என்று இந்தியாவுக்கு ஒரு தனிச்சிறப்பு கிடைத்துவிடும்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில், கை-கால்களில் அதிக விரல்கள் கொண்ட நபர்கள் என்று 2 இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இந்நிலையில் '25 விரல்' நபரான தமிகி பஸாவும் கின்னஸ் அங்கீகரிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.இவர் ஜெயின்ஷியா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.கைகளில் 13 விரல்கள், கால்களில் 12 விரல்கள் இருந்ததால், 'ஜெயிக்க முடியாத அதிசயப்பிறவி'என்ற அர்த்தம் கொண்ட பினார் மொழி வார்த்தையான 'தமிகி' என்ற பெயரை பெற்றோர் சூட்டினர்.
"இந்த விரல்கள் தானே கேவலம் என்று, இந்த விரல்களைப் பார்த்துப்பார்த்து ஆத்திரப்படுவேன், கின்னஸ் விஷயம் தெரிந்தபிறகு, இந்த விரல்கள் மீது புது பாசம் வந்திருக்கிறது" என்று கை விரல்களுக்கு முத்தம் கொடுத்தபடியே தெரிவித்தார் தமிகி !.
--தினமலர். 15-11-2008.

Thursday, November 20, 2008

நிலவில் மனிதன் .II ம் முறை.

நிலவில் மனிதன் .II ம் முறை.
நிலவில் மனிதன் இரண்டாவது முறை தரையிறங்கிய சாதனை நாள் :நவம்பர் 19.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆஸ்டிரினும் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்கள் என்ற சரித்திர சாதனையை 1969 ஜூலை 21-ல் படைத்தனர்.அவர்கள் அமெரிகாவின் அப்பல்லோ -11 விண்கலத்தில் சென்றனர்.
இந்த சாதனையை 'ஒன்ஸ்மோர்' செய்ய, சார்லஸ் கன்ராட், ஆலன் பீன், ரிச்சர்ட் கோர்டன் என் 3 வீரர்களுடன் அப்பல்லோ 12 விண்கலத்தை 1969 நவம்பர் 14-ல் அமெரிக்கா ஏவியது.இது நவம்பர் 19 -ல் நிலவை நெருங்க, அதி இருந்து பிரிக்கப்பட்ட ' இன் ட்ரிபெட்' என்ற ஆய்வுக்கலனில் சார்லஸும் ஆலனும் நிலவுக்கு சென்றனர்.இன் ட்ரிபெட்டை ஆலன் இயக்கினார்.மேலே சுற்றிக்கொண்டிருந்த அப்பல்லோ -12 ஐ ரிச்சர்ட் இயக்கினார். நிலவின் 'புயல் கடல்'என்ற பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மிகத்துல்லியமாக இன் ட்ரிபெட் தரையிறக்கப்பட்டது. சார்லசும் ஆலனும் அடுத்தடுத்து நிலவில் இறங்க, அமெரிக்க கொடியை சார்லஸ் நாட்டினார்.
நிலவில் இறங்கியதும், ஆய்வுக்காட்சிகளை பூமிக்கு அனுப்ப கலர் டி.வி., கேமராவை சூரியனை நோக்கி திருப்பியதால்
அதன் லென்ஸ் பாதிக்கப்பட்டு இயங்காமல் போனது.
இன் ட்ரி பெட்டில் இருந்து நிலவில் இறங்கும் ஏணி நீளம் குறைவாக இருந்தது.இதனால், கடைசி படியில் இருந்து சார்லஸ் துள்ளிக்குதித்து நிலவில் கால்பதித்தார். அப்போது, "ஆர்ம்ஸ்ற்றாங் நிலவில் கால்பதித்தபோது, அதை அவர் எடுத்து வைக்கும் சிறிய அடி என்று சொன்னார்...ஆனால், எனக்கு இது பெரிய அடி ( துள்ளிக்குதிப்பு ) " என்று 'ஜோக்' அடித்தார்.
--தினமலர். ( 19-11-2008 ).

தாய் !

"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"
--ஆனந்தவிகடன். ( 19-11-2008 ).

Wednesday, November 19, 2008

முண்டாசு கவிஞனின் கடைசி போச்சு...

இந்திய சுதந்திரத்துக்கு தன் பாடல்களால் வேகம் ஊட்டிய முண்டாசு கவிஞன் பாரதியின் பேச்சுகளும் . உணர்ச்சிமிக்கதாய் இருக்கும் . தனது அழியாத பாடல்களால் தமிழ் மக்கள் மனதில் ,கி
மட்டுமல்லாமல் , இந்திய அளவில் தேசியக் கவிஞர் பெயருடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் பாரதியார் . சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் , பல பொதுக் கூட்டங்களில் பேசிய
பாரதி , அந்த வகையில் கடந்த 1921 , ஆகஸ்டில் ஈரோட்டுக்கு வந்தார் . கருங்கல்பாளையம் நூலகத்தில் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில் பாரதியார் உணர்ச்சிமிகு உரையாற்றினார் . அதன் பிறகு சென்னை சென்ற அவர் , அதற்கு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 11- ல் மரணம் அடைந்தார் .ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற பாரதி , பின்னர் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . ஈரோட்டில் அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையே இறுதியாக அமைந்ததால் , அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்துக்கு ' மகாகவி பாரதியார் நூலகம் ' என்று பெயரிட்டு , பாரதியாரை பெருமைப்படுத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்ட மக்கள் .
--தினமலர் . ( 01-12-2008 ).

Tuesday, November 18, 2008

'எல்லாம் மாயை தானா ?'

'எல்லாம் மாயை தானா ?'
எல்லாமே மாயை என்கிறார்கள் ஞானிகள் . அது சத்தியமான வார்த்தை . உதாரணமாக , ' நில் ' என்கிறோம் . உடனே நிற்கிறீர்கள் அல்லவா ? இதுவே மாயைதான் .காரணம் எதுவுமே நிற்பதில்லை . பூமி ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் நகருகிறது . அல்லது சுழல்கிறது . அதாவது மணிக்கு 1,000 மைல்கள் வேகம் . பூமி சூரியனைச் சுற்றி வருகிறது . ஒரு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் . மொத்தமாக நம் சூரிய மண்டலம் பால்வீதியை ( Milky Way Galaxy ) வினாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது . பால்வீதியும் வினாடிக்கு 1,000 கி.மீ.வேகத்தில் Great Attractor என்கிற
அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள , ஒரு பகுதியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது . மொத்தத்தையும் கூட்டினால் நீங்கள் வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான கி.மீ. வேகத்தில் ( எப்போதும் )நின்றபடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள் . பூமி என்பதே அந்தரத்தில் இருப்பதால் பறந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதே சரியானது . இப்போது சொல்லுங்கள் . ' நில் ' என்பது மாயைதானே ?
--ஹாய் மதன். ஆனந்தவிகடன் . (03-12-2008 ).

Monday, November 17, 2008

தேட வேண்டாம் !

தேட வேண்டாம் !
ராஸ்வான் நெஸ் என்பவர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர் . இவர், ' அமெரிக்கர்கள் வாரத்தில் மூன்று மணி நேரத்தை எதையேனும் தேடுவதிலேயே தொலைக்கிறார்கள் ' என்கிறார் .
திட்டமிட்டுச் செயல்படும் அமெரிக்கர்களுக்கே இந்தக் கதி . தேடுவதில் வீணடிக்கும் நேரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றால் அதற்குச் சில வழிகள் உண்டு .
மனிதர்கள் இந்த விஷயத்தில் மூன்று இரகத்தினர் முதலாமவர்கள் குவிப்பவர்கள் . முடிந்துபோன சங்கதிகளைக்கூட கிழிதுப் போடாமல் போற்றி வைத்துக் குப்பை சேர்க்கும் குணத்தவர்கள் .
இரண்டாமவர்கள் அடைப்பவர்கள் . எதை எங்கே வைக்கிறோம் என்கிற வழிமுறையே இல்லாமல் கைக்கு வருபவற்றையெல்லாம் கிடைக்கிற இடத்தில் திணித்துக்கொண்டே இருப்பார்கள் .
அடுத்தவர்கள் , பரப்புவர்கள் . கடை பரப்புவதே இவர்கள் வேலை .
உரிய இடத்தில் உரிய பொருளை வைக்க ஒரு நிமிடம்தான் ஆகும் .இந்த இடத்தில் இன்னது என்று பிரித்து வைத்தால் தேடுவதைத் தவிர்த்து விடலாம் .
--லேனா தமிழ்வாணன் . குமுதம் (03-12-2008 ).

Sunday, November 16, 2008

புதிய கிரகம்.

சூரியகுடும்பத்துக்கு வெளியே முதல்முறையாக ஒரு கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஹப்பிள் என்ற தொலைநோக்கி ஆய்வு செய்துவருகிறது.
சூரியக் குடும்பத்துக்கு வெளியே பாமல்கட் என்ற மற்றொரு சூரியனை பாமல்கட் பி என்ற புதிய கிரகம் சுற்றுவதை ஹப்பிள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜூபிடர் கிரகத்தை விட புதிய கிரகம் 3 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சதர்ன் பிஷ் என்ற பகுதியில் இருந்து 25 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கிரகம் அமைந்துள்ளது.சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள மற்றொரு சூரியனை வேறொரு கிரகம் சுற்றி வருவது இப்போது நிரூபணமாகியுள்ளது. பாமல்கட் சூரியனில் இருந்து இப்போது தெரிய வந்துள்ள 'பாமல்கட் பி' கிரகம் 2 ஆயிரத்து 150 கோடி மைல் தொலைவில் அமைந்திருகிறது.பாமல்கட் குறித்த செய்திகள் கடந்த 28 ஆண்டுகளாக நிலவி வருகிறது.கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஒளிச்சிதறல் தெரிவதை ஹப்பிள் படம் பிடித்தது.
தினமலர். 15-11-2008.

Friday, November 14, 2008

அந்த கணம் ..!

ஒரு குரு தன் சிஷ்யர்களிடம் , " ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது ?" என்று கேட்டார். ' இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும் போது !', ' ஆல மரத்துக்கும் அரச மரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம் !' என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள் . 'இவை எதுவுமே இல்லை !' என்ற குருவிடம், , சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். " நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும் , நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம் !" என்றார் குரு. எனவேதான் , அவர் குரு. !
அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை.
--ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Thursday, November 13, 2008

'இருபது டாலர் '

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். " யாருக்கு இந்த நோட்டு வேண்டும்? "அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், "இப்போது யாருக்கு வேண்டும்?" என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன."இப்போதும் வேண்டுமா பாருங்கள் !" என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லோரும் ஹேண்ட்ஸ் அப் ! "இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர் ' என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்.இது தான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான் !"
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Wednesday, November 12, 2008

குங்-ஃபூ-ஸு !

சீன அறிஞர் கன்ஃப்பூசியஸின் பெயர் குங்-ஃபூ-ஸு. ஆங்கிலேயர்கள் அதை கன்ஃப்யூசியஸ் என்று கன்ஃப்யூஸ் செய்து விட்டார்கள்.கி.மு. 551-ல் பிறந்ததாகச் சொல்லப்படும் இவர் பற்றி எந்தத் தகவலும் கிடையாது.அவர் கருத்துக்கள் மட்டுமே மிச்சம். அவரது சீடர்கள் எல்லாம் பல ராஜ்யங்களில் பெரும் பதவிகல் வகித்தாலும், குங்-ஃபூ-ஸூக்கு மட்டும் எந்த மன்னரிடமும் வேலை கிடைக்கவில்லை என்று கேள்வி !.
-- ஹாய் மதன். ஆனந்தவிகடன் . ( 06-08-2008 ).

வாழைப் பழம் !

தெய்வங்களுக்கு படையல் அல்லது நெய்வேத்தியம் செய்யும் போது ,நாம் பெரும்பாலும் வாழைப் பழங்களில், பூவன் வாழைப் பழ்த்தையே வைத்து செய்கிறோம்.அதைப் போல நாம் செய்யக் கூடாது. பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்குத த்னித் தனியே பழங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துத் தான் நாம் படையல் அல்லது நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.பிரும்மா_பூவன் வாழைப் பழம். (பூவன்-பூவின் மேல் இருப்பவன். )விஷ்ணு _முகுந்தன் வாழைப் பழ்ம். (விஷ்ணுவிற்கு ,முகுந்தன் என்ற பெயரும் உண்டல்லவா, அதனால் மொந்தம் பழம் என்று பழக்கத்திலுள்ள முகுந்தன் வாழைப் பழ்ம் ).சிவன் _பேயன் வாழைப் பழம் ( பேயன் என்று சிவனுக்கு வேறு பெயர் உண்டு. ஆகவே சிவனுக்கு உகந்தது பேயன் வாழைப் பழம்.). _காலஞ்சென்ற என் தாய் மாமன். வித்வான்.பொன்.முருகையன்.சொல்லக்கேட்டது.அவருக்கு இன்று 16-ஆம் நாள் காரியம்.

Tuesday, November 11, 2008

'ஹேண்ட்பால்'

ஹேண்ட்பாலின் வரலாறு சுவாரஸ்யமானது.ஜெர்மனி உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய விளையாட்டு இது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டைச் சேர்க்கவேண்டும் என்ற போது, "வேண்டாம்" என்று ஒரே வார்த்தையில் மறுத்திருக்கிறார் சர்வாதிகாரி ஹிட்லர். 'ஒரே ஒரு முறை இந்த விளையாட்டை நேரில் பாருங்கள்' என்று கெஞ்சிக்கூத்தாடி, அவரை பார்க்க வைத்திருகிறார்கள் அதிகாரிகள்.ஹேண்பாலின் வேகத்தைப்பார்த்த தும் அசந்து போன ஹிட்லர், 'இந்த விளையாட்டு உடல் திறன் அதிகரிக்கும். உடனே ஒலிம்பிக்கில் சேருங்கள் !' என்று அனுமதி கொடுத்துள்ளார். அதோடு, தனது ராணுவத்தினர் ஓய்வு நேரங்களில் விளையாடுவதற்காக ஹேண்ட்பாலைக் கற்றுக்கொடுக்கவும் உத்தரவு இட்டு இருக்கிறார்.ஹிட்லரையே ஈர்த்ததால்,'அப்படி என்னதான் இருக்கிறது இந்த விளையாட்டில் ?' என்ற ஆர்வம் கிளம்பி , பல ஐரோப்பிய நாடுகளில் பரவியது ஹேண்ட்பால். இந்தியாவில் 1970 வாக்கிலேயே ஹேண்பால் அறிமுகமானாலும் 2003 வரை இப்படி ஒரு விளையாட்டு இருப்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. பின்னர், பல்கலைக் கழக மாணவரிடையே ஹேண்ட்பால் பரவிபோட்டிகள் நடக்க ஆரம்பித்தன.
பெரும்பாலும் பன்னிரண்டாவது வயதில்தான் எலும்புகள் வலுவடையும். அந்த வயதிலேயே ஹேண்ட்பால் கற்றுக்கொள்ளத் துவங்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த பிளேயராக உருவாகலாம்.
--ஆனந்தவிகடன். ( 26-11-2008 ).

Monday, November 10, 2008

ஆட்டிஸம் நோய் !

"மூளை வளர்ச்சி குறைந்து இயல்பான செயல்திறன் பாதிப்புடன் பிறப்பதுதான் ஆட்டிஸம் நோய். நார்மலான குழந்தையின் இயல்பான விஷயங்களைக்கூட ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆட்டிஸம் குழந்தையாகப் பிறந்தவர்தான். பில்கேட்ஸுக்குகூட ஆட்டிஸத்திற்கான அறிகுறிகள் இருக்கின்றன.அவர்கள் அதைக் கடந்து வந்து சாதித்ததைப்போல மற்றவர்களையும் கொண்டுவரவேண்டும்.
--ஆனந்தவிகடன். 26-11-2008.

Sunday, November 9, 2008

தேனீயின் குணம் !

தூய்மையின் இருப்பிடம் தேனீதான். தேன் கூட்டில் ஒரு தேனீக்கு நோய் வந்து விட்டால் அது தானாகவே வெளியேறி இறந்து விடுமாம். அப்படிப் போகாவிட்டால் மற்ற தேனீக்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு அதைக் கொன்று விடுமாம்.

தூங்கும் வரிசை !

ஒரே சமயத்தில் எல்லா உருப்புகளும் தூங்கத் தொடங்குவது இல்லை. முதலில் கண்கள், பிறகு வசனையை அறியும் உருப்புக்கள்,பின்பு சுவை மொட்டுக்கள், காது,கடைசியில் தோல். இந்த வரிசையில் தூங்கத் தொடங்குகின்றன. எழும் போது இது தலைகீழ் பாடமாக முதலில் தோல் தன் வேலையைத் தொடங்குகிறது.கண் கடைசியில் விழிக்கிறது.
-கல்கி . (25-11-1984 ).

Saturday, November 8, 2008

செய்தித் துளிகள் !

தொடக்கத்தில் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் தழைகளால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.
மூங்கில் விரைவாக வளரக் கூடியது.இளம் மூங்கில் நாள் ஒன்றிற்கு ஒன்பது அங்குலம் வரை வளரும்.
உலகில் 26 நாடுகளுக்குக் கடற்கரையே கிடையாது.
உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள விமானதளம் இந்தியாவிலுள்ள லடாக் விமானதளம்.
கிரிக்கெட் கிரவுண்டில் 'ஸ்டம்ப்'ஸ் பூமியிலிருந்து 27 அங்குல தூரம் வெளியில் தெரிய வேண்டும்.
பூமியில் ஏற்படும் சுழற்காற்றுக்கு 'டார்னடோ' என்றும், கடலில் உருவாகும் சுழற்காற்றுக்கு 'வாட்டர் ஸ்பெளட்' என்றும் பெயர்.
மனிதனை நினைக்கவோ ,பேசவோ, பார்க்கவோ ஞாபகம் வைத்துக் கொள்ளவோ செய்யும் மூளையின் பாகத்தின் பெயர் 'செரிப்ரம்' இந்த பாகம் மிருக மூளையில் கிடையாது.
எஃகு 70%, குரோமியம் 20 %, நிக்கல் 10% சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுவது எவர்சில்வர் எனப்படும் 'ஸ்டெயின்லெஸ்' ஸ்டீல்.
மனித மூளையின் எடை மூன்று பவுண்டு.,

Friday, November 7, 2008

அது என்ன பதினான்கு?

அது என்ன பதினான்கு?
கைகேயி இராமனை 14 ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பினாள். அது என்ன கணக்கு பதினான்கு?
அந்தக் காலத்தில் திருமண வயது ஆண்களுக்குப் பதினாறு என்றும், பெண்களுக்கு பன்னிரண்டு என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியின் திருமணத்தின் போது அவள் 'ஈராறு ஆண்டு அவகையினள்' என்றும், கோவலன் 'ஈரெட்டு வயதினன்' என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு வயதுகளின் சராசரி பதினான்கு. அதாவது, 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகிவிடுகிறது. எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து வரும் போது கோசலத்தில் இராமனை அறியாத, பரதனை மட்டுமே அறிந்த ஒரு புதிய தலைமுறை உருவாகி விடும்.இந்தத் தீய எண்ணத்து டன் தான் கைகேயி இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பும் படி தசரதனிடம் வரம் வேண்டினாள்.
-கல்கி ( 25-11-1984 ).

Thursday, November 6, 2008

செய்தி !

"தம்பி,பார்த்தாயா,நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் -தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் ,என் வீட்டிற்குள் , எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். -இதுதான் அரசியல்".
-(1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் எம்.ஜி ஆர் . சொன்னது.

Wednesday, November 5, 2008

இந்திரன் !

இந்திரன் !
'இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் 'தலைவன்' என்பதே.தேவர்களுக்குத் தலைவன் தேவேந்திரன். அசுரர்கலுக்குத் தலைவன் அசுரேந்திரன், மனிதர் தலைவன் நரேந்திரன், மிருகங்களுக்குத் தலைவன் மிருகேந்திரன், அரசர்களுக்குத் தலைவன் ராஜேந்திரன். '

Tuesday, November 4, 2008

கவிதை

'உன் திருப் பேரைக் கெடுக்க
தென் திருப்பேரை சென்றவன் (கோவிலில் திருட்டு )
கோட்டையை மட்டுமா விட்டான் ?-அருப்புக்
கோட்டையுமல்லவா விட்டான் !
-புலமைப்பித்தன்.
'மத்திய அரசை' மைய அரசு என்று அழைப்பதற்கு, உள்ள காரணம் எனக்கு இப்போது தான் புரிகிறது. மையம் என்பதற்கு நெல்லைத் தமிழில் 'பிணம்' என்றொரு அர்த்தமும் உண்டு.
-வலம்புரி ஜான். அக்டோபர் 18. வ. உ.சிதம்பரனார் மாவட்டத் திறப்பு விழாவில் பேசியது.

Monday, November 3, 2008

சலூன் சம்பாஷணை:

சலூன் சம்பாஷணை:
தலையைக் கொடுத்துவிட்டு ,
"முடியை மட்டும் குறை" என்றேன் ,
"அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதில் !" என்றார் அந்த சலூங்காரர்.
பேருந்து:
வீட்டையும் -அலுவலகத்தையும்
சமயத்தில் .....
யமலோகத்தையும்
இணைக்கும் வாகனம்.!
மரணம்:
எந்த வி.ஐ. பி.யையும்
அப்பாயின்மெண்ட் பெறாமல்
சந்திக்கும் சக்தியுடையது.!

Sunday, November 2, 2008

கவிதை

"பனை' ஓலையில் பாட்டு எழுதியவனுக்கு
'நுங்கம்' பாக்கத்தில் கோட்டம் அமைத்தவனே ! "
-மு.க. பற்றி அப்துல் காதர்.
'நம் நாட்டின் பெயரை உச்சரித்துப் பாருங்கள் அதுவே இந்தியை விரும்பாது 'இந்தியா' என்று முகம் சுளிக்கிற மாதிரிதான் கேட்கும்.
-அப்துல் காதர்.
'இப்போதெல்லாம் லஞ்சம் மறைமுகமாக நடப்பதில்லை. அலுவலகக் கதவுகளிலேயே 'தள்ளு' என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதுவும் நடப்பதில்லை.
-அப்துல் காதர்.

Saturday, November 1, 2008

கவிதை !

புலவரே, 'பத்துப் பாட்டு ' பாடு என்றேன்-
தொகை வேண்டுமென்றார்
'எட்டுத் தொகை' போதுமா எனக் கேட்க,
இல்லை. அது எனக்கு ' குறுந்தொகை' என்றார்.
ஓகோ 'ஐங்குறு நூறு' வேண்டுமோ என்றேன்.
நானூறு தருவீரோ என்றார்
அதுவும்
அக(த்தில்) நானூறு (காசோலை )
புற (த்தில் ) நானூறு (கருப்பு )
-மு.க. 1-10-1986.

உப்பில்லாப் பண்டம் !

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" -என்பதற்கு என்ன பொருள்? உப்பு- சுவை என்று தான் பொருள். சுவையில்லாததை மனிதன் உண்ணமாட்டான், தூக்கி எரிந்து விடுவான்.
உணவு அறுசுவையுடையது. இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, கரிப்பு அல்லது உவர்ப்பு ( காரம் உள்ள ) கார்ப்பு எல்லாவற்றிலும் கடைசியில் 'உப்பு' இருப்பதை கவனித்தால், உப்பு என்பதற்குச் சுவை என்ற பொதுப் பொருளே முன்பு இருந்தமை புலப்படும். உவர்ப்பு ஒன்றை மட்டுமே இன்று உப்பு என்பது அதன் சுவை மிகுதி கருதி வந்து விட்டது.
-தமிழண்ணல். ' இனிக்கும் இலக்கியம்'.

Friday, October 31, 2008

குதிரைத் திறன் !

75 கிலோ கிராம் எடையை ஒரு வினாடி நேரத்தில் , ஒரு மீட்டர் இழுக்கவோ , உயர்த்தவோ தேவைப்படும் சக்தியை ஒரு குதிரைத் திறன் { HORSE POWER } என்கிறோம்.

Thursday, October 30, 2008

மொழி !

உலகம் சுற்றிய தனினாயக அடிகள் கூற்று:
பக்தி மொழி-தமிழ்.
தத்துவ மொழி-ஜெர்மன்.
சட்ட மொழி-லத்தீன்.
இசை மொழி- கிரேக்கம்.
வ்ணிக மொழி -ஆங்கிலம்.
தூதுவர் மொழி- பிரெஞ்சு..
-எனது மாமனார் ,காலஞ்சென்ற, கீழ்வேளூர் தி. ரத்தின முதலியார் கூறியது

Wednesday, October 29, 2008

பாரதியார் !

வெளியிடங்களில் காலை நேரங்களில் சிலர் காலைக் கடன்களைக் கழிக்கும் முறையைப் பார்த்து வெளி நாட்டுக்காரர் ஒருவர்,
" இந்தியர்களாகிய நீங்கள் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் சாப்பிட்ட உணவை வெட்ட வெளியிலே......." என்று முகத்தை சுளித்தவாறு என்னிடம் கூறினார்.
இதைத் தான் பாரதி "ஊர்க் காற்றை மக்கள் விஷமாக்கி விடுகிறார்கள்...." என்று பாடினார்.
-குமரி அனந்தன். தயாரிப்பு. குமுதம் {09-05-1991}.

Tuesday, October 28, 2008

விஹார்.!

புத்தரின் சீடர்கள் தங்கிய இடங்கள் 'விஹார்' என்றழைக்கப்பட்டது. இப்படி ஏராளமான விஹார்கள் இருந்த காரணத்தால் விஹார் என்று அழைக்கப்பட்ட மானிலம் தான் இன்றைய ' பீஹாராக' ஆகிவிட்டது.

Monday, October 27, 2008

'மஃப்டி டிரஸ்'

திருக் குரானின் வாசகங்களை விளக்கிச் சொல்லும் மத குருவிற்கு 'மஃப்டி' என்று பெயர். மஃப்டிகள் எளிய உடைகளையே அணிவது வழக்கம். அந்த உடையும்' மஃப்டி டிரஸ்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில், மற்ற உத்தியோகஸ்தர்கள் அணியும் சாதாரண உடைக்கும் இதே பெயர் நிலைத்து விட்டது. '

Sunday, October 26, 2008

'RUBBER BELT'

பூமத்திய ரேகையின் இரு புறமும் 10 டிகிரி வரையுள்ள பகுதிக்கு ரப்பர் பெல்ட் என்று பெயர். இப்பகுதியில் ரப்பர் மரங்கள் நன்றாக வளர்வதால் ஏற்பட்ட பெயர் இது.

Saturday, October 25, 2008

ஐ--I .

தமிழ் எழுத்துக்களில் 9 வது எழுத்து -ஐ.
ஆங்கில எழுத்துக்களிலும் 9 வது எழுத்து -'ஐ' !

Thursday, October 23, 2008

மன்மத பாணங்கள் .!

காதல் தலைவன் மன்மதனின் ஐந்து பாணங்கள்:
தாமரை--------மயக்குதல்.
அசோகம்-----ஸ்தம்பிக்கச் செய்தல்.
மா----------------வற்றச் செய்தல்.
நவமல்லிகா-பைத்தியமாக்குதல்.
நீலோற்பலம்-மாய்த்தல்.

Wednesday, October 22, 2008

வாசக சாலை.

வாசக சாலையில் ஓர் அறிவிப்பு:
'READING ALOUD IS NOT ALLOWED
READING ALLOWED IF NOT ALOUD'

Tuesday, October 21, 2008

எட்டு.

ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈர் எட்டில் கற்காத கல்வியும்
மூ வெட்டில் ஆகாத மணமும்
நா லெட்டில் பிறவாத பிள்ளையும்
ஐ எட்டில் சேர்காத திரவியமும்
ஆறெட்டில் சுற்றாத சுற்றுலாவும்
ஏழெட்டில் அடையாத ஓய்வும்
எட்டெட்டில் இறவாத இறப்பும்..........பாழ்.

Monday, October 20, 2008

ரிடையர் !

இருபது வயதிலே வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனிதன், நாற்பது வயதிலே ' TIRED'ஆகிறான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு முன்னேறுகிறான். ஆனால் அறுபது வயதிலே 'RETIRED' {மறு களைப்பு } ஆகிறான்.அதைத்தான் 'ரிடையர்' என்கிறார்கள்..
-கவியரசு கண்ணதாசன்.

Sunday, October 19, 2008

மாதிரி.!

சோத்தைப் போட்டு தொண்டையை நெறிக்கிற மாதிரி !
அண்ணனைக் கொன்ற பழியை சந்தையில தீர்த்துக்கற மாதிரி !
அடை மழை பெய்ததில ஆட்டுக்குட்டி செத்த மாதிரி !
துளியூண்டு மோர் மொத்த பாலையும் கெடுத்திடுங்கிற மாதிரி !
நெருப்புக்கு காத்து உதவுற மாதிரி !
குடியிருக்கிற வீட்டுக் கூரையைக் பிய்த்து எறிகிறது மாதிரி !
சங்கு ஓட்டையா இருந்தாலும் , சத்தம் வந்தா சரிங்கற மாதிரி !
ஏணிப்படிக்கு கோணல் கழி வெட்டின மாதிரி !
பொதுப் பானையை நடுத் தெருவுல உடைக்கிற மாதிரி !
சுருக்கம் விழுந்த கழுத்துல முத்து மாலை தொங்கற மாதிரி !
முழுகி எழுந்திருக்கற போதெல்லாம் முத்துக்களை அள்ளிட்டு வர மாதிரி !
ராஜா இருந்தாலும் பட்டணம் பாழாப் போறதேங்கற மாதிரி !
அக்னி மலையில கற்பூர அம்பு விழுந்த மாதிரி !

Saturday, October 18, 2008

கல்வி.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.-ஜார்ஜ் ஸனவல்.
சிறந்த ஆசிரியர் மாணவன் நிலைக்கு இறங்கி வந்து, அவன் கண்களால் பார்த்து, அவன் காதுகளால் கேட்டு, அவனது அறிவாற்றலுக்கு ஏற்பப் புரிந்து கொண்டு உணர்த்தவும் செய்வான். -விவேகானந்தர்.
ஆசிரியர் ஆவதற்கு அறிவுத் திறன் மட்டும் போதது, நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்க வேண்டும்.-எமர்சன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது.எந்தப் பிரச்சனையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் பிறக்கிறது.-விவேகானந்தர்.
கல்வியின் நோக்கம் பொருள்களை அறிவது மட்டுமன்று : வேலைக்கு அடிப்படை அமைப்பதும் அல்ல: பெருந்தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதே.-ரஸ்கின்.
கல்வி ஏழைகளுக்கு மூலதனம். செல்வந்தனுக்கு வட்டி! -ஹேரேஸ்மன்.
ஒரு மாணவன் மோசமானவனாக மாறினால் அது அவனை மட்டுமே பாதிக்கிறது. ஒரு ஆசிரியர் தம் கடமையைச் சரியாகச் செய்யாது போனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிக்கப்படுகிறார்கள்.-சத்ய சாயி பாபா.
சிந்திக்காமல் படிப்பது வீண்: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து -கன்பூசியஸ்.
செய்யத் தெரிந்த மனிதன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.-கர்னல் கீல்.
தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்ப்பவரே குரு.
கல்வித் துறையின் மிகமுக்கியமான நோக்கம் தன்னம்பிக்கையை வளர்பதாகவே இருக்க வேண்டும்.-விவேகானந்தர்.
மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றியே அடங்கியுள்ளது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-எமர்சன்.

Friday, October 17, 2008

தேள்.

ஆண் தேள், பெண் தேளின் கால்களைப் பிடித்துக்கொண்டு முன்னும், பின்னுமாக இழுக்கும். அப்படிச் செய்யும் போது ஆண் தேள் தனது விந்துத் துளிகளைத் தரையில் தெளித்து, பெண் தேளை முன்னும் பின்னும் இழுத்து அத்துளிகளின் மேல் ஊர்ந்து போகச் செய்யும் -அப்போது பெண் தேளின் இனவிருத்தி உறுப்பு அந்த துளிகளை உறிஞ்சிக் கொண்டு, பின்னர் கருத்தரிக்கும். இந்த உடலுறவு விசித்திரமானது.

மனித வாழ்க்கை.

"தந்தையால் பிறப்பு;
இறைவனால் இறப்பு:
இரண்டுக்கும் நடுவே
அரிதாரம் பூசாத நடிப்பு
இதுதான் மனித வாழ்க்கை" !

Thursday, October 16, 2008

ம்னித வாழ்வில் 7 நிலைகள்.

பிறந்தார்
கிடந்தார்
இருந்தார்
தவழ்ந்தார்
நடந்தார்
இறந்தார்
பிணமானார்.
-வானொலியில், வாரியார் சுவாமிகள்.13-04-1995.

Tuesday, October 14, 2008

சில நேரங்களில் சில ராகங்கள் !

காலை மணி 5-6 .........பூபாளம்.
6-7..........பிலஹரி.
7-8...........தன்யாசி
8-9
9-10..........ஆரபி, சாவேரி
10-11..........மத்யமாவதி.
11-12..........மணிரங்கு.
பகல் மணி12-100.......ஸ்ரீ ராகம்..
1-2............மாண்டு.
2-3............பைரவி, கரகரப்பிரியா.
3-4..............கல்யாணி, யமுனா கல்யாணி.
மாலை மணி4-5 .........காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
திருவெண்காடு, T.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டது.{10-06-1995}.

ஆப்டிமிஸ்ட் - பெஸ்ஸிமிஸ்ட்.

Optimism:-doctrine that everything is for the best -எல்லாம் நன்மைக்கே என்ற கொள்கை-hope that there will be a happy ending to every happening- வடையில்- வடையைப் பார்த்து மகிழ்பவர்.
Pessimism:- Unfavouble view of affairs - நம்பிக்கையற்ற குணம் pessimist-one who expects that something unpleasant will happen -inclimed to look always on the dark side of things -வடையின் நடுவில் உள்ள துவாரத்தில் மட்டும் ஏன் வடையைக் காணோம் என்று குறைபடுபவர்.
-H.M. திரு. N.இராமகிருஷ்ணன், கூறக்கேட்டது.

Monday, October 13, 2008

SPACE-கடவுள் !

ஒரு புள்ளிக்கு எந்தத் திக்கிலும் அளவு இல்லை. அது நேராக நகர்ந்தால் நேர்க்கோடு. நேர்க்கோடு மேல் நோக்கி நகர்ந்தால் அது பரப்பளவு. பரப்பளவு தனக்கு தனக்கு செங்குத்தாக நகர்ந்தால் அது கன அளவு , கன அளவு நகர்ந்து கொண்டே போனால்,' SPACE' கிடைக்கும். இதில் என்ன தெரிகிறது ? ஒரு புள்ளி தன் அசைவினால் 'SPACE' ஐ நிறுவி விட்டது. " கடவுள் இல்லை என்பவர்கள் புள்ளியுடன் நின்று விடுகிறார்கள்.'உண்டு' என்பவர்களுக்குத்தான் உலகில் ' 'SPACE' கிடைக்கிறது, ஆகவே...."
-கடவுள் உண்டா, இல்லையா? என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவரின் தீர்ப்பு.-கல்கி, 14-04-1996.

Sunday, October 12, 2008

ஒன்பதா? தொன்பதா?

பத்துக்கு முன்னால் வரும் ஒன்பது என்ற இலக்கத்தை'தொன்பது' என்று சொல்ல வேண்டும். காரணம் : தொல் பத்து. அதாவது பத்துக்கு முந்தியது என்ற பொருள். தொண்ணூறு என்பதும் தொள்ளாயிரம் என்பதும் 'தொல் நூறு' என்றும், 'தொல் ஆயிரம்' என்றும் சொல்ல வேண்டும்.
-வள்ளலார் வாக்கு, என்ற நூலிலிருந்து.

Saturday, October 11, 2008

நால்வகை பிறப்பு.

இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும்,
நாணயமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்,
நன்மை, தீமை தெரியும் நெஞ்சில் மெய்யுணர்வு பிறக்கும்,
ஆணவமில்லாத நெஞ்சில் மரியாதை பிறக்கும்.
-கன்பூஷியஸ்.

Friday, October 10, 2008

மேட்டூர் அணை.

1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாளன்று மேட்டூர் அணைத் திட்டத்தைச் சென்னை கவர்னர் கோஷன் பிரபு தொடங்கி வைத்தார். 1928 -ல் வேலைகள் தொடங்கப் பெற்றன். இவ்வணை ஆறு ஆண்டுகளில் 450 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பெற்று 1934, ஆகஸ்டு ,21 -ல் சென்னை கவர்னர் லேர் பிரடெரிக் ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Thursday, October 9, 2008

உயிர்கள்.

1) ஓரறிவு-புல்லும்,மரமும் (நகராது).
2) ஈரறிவு-சிப்பி, சங்கு (நகரும் ).
3) மூவறிவு- கரையான், எறும்பு (பறக்க முடியாது ).
4) நாலறிவு- தும்பி,வண்டு (பறக்கும் ).
5 )ஐந்தறிவு- மிருகம் (கண்டு,கேட்டு, உண்டு, வாழும் ).
6)ஆறறிவு- மனிதன் (எது தீமை, எது நன்மை என்று தெரியக் கூடிய பகுத்தறிவு உடையவன் ).

Wednesday, October 8, 2008

மாத்திரையை விழுங்க !

"ஹம்சத்வனியை ஹரிஹரன் ஹாலாபனை செய்தான் " என்று ஒரிரு தடவை சொல்லுங்கள், மாத்திரை உள்ளே போய்விடும். 'ஹ' என்ற எழுத்தை பல தடவைகள் உச்சரிக்கும் போது தொண்டையில் அதிக இடைவெளி ஏற்படுவதால் மாத்திரை உள்ளே போவது எளிதாகிறது.

மூவகை மனித தன்மைகள் !

1) அநாகதவிதாதா- வருமுன் காப்போன்.
2) ப்ரத்யுத்ப ந்நதி- அப்பொழுதே தப்ப வழி தேடும் புத்தி கூர்மை உடையவன்.
3) யத்பவிஷ்யன்- வருவது வரட்டும் என்று இருப்பவன்.

Tuesday, October 7, 2008

திருக்குறள்- எண்கள் !

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என்ற எண்ணை 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரே ஒரு இடத்திலும், ஏழை 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பதை முறையே ஒவ்வொரு குறளிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (1/2 ) ஒரு இடத்திலும் ,காற்பாம் (கஃசா) ஒரு குறளிலும் எழுதியுள்ளார். ஆனால், 'ஒன்பது 'என்ற சொல்லை மட்டும் எங்கேயும் பயன்படுத்தவில்லை.

Monday, October 6, 2008

ஏழு குதிரைகளின் பெயர்கள் !

சூரியனின் ரதத்தை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த ஏழு குதிரைகளின் பெயர்கள்:காயத்திரி, ப்ருஹதி,
உஷ்ணிக், ஜகதி, திருஷ்ஷம், அனுஷ்டுய், பக்த்தி இதையொட்டியே வாரத்திற்கு ஏழு நாட்கள் அமைந்திருக்கின்றன.

Sunday, October 5, 2008

மூவகை உடம்புகள் !

உலகில் நிலவும் உயிர்கட்கு மூவகை உடம்புகள் கூறப்பெறும்.
1) புறத்தே தோன்றும் உடம்பு தூல உடம்பு அல்லது பருவுடம்பு அல்லது பூதனாசாரம்.
2) உடம்புக்குள்ளே சூட்சுமமாய் இருக்கும் புரியட்ட சரீரம்.
3) நரகத்தில் கிடக்கும் உடம்பு யாதனா சரீரம்.
-மு. சுந்தரேசம் பிள்ளை. குமரகுருபரர் மாத இதழ்.

Saturday, October 4, 2008

பிரியா விடை !

அன்பு வாசக நெஞ்சங்களுக்கு,

கடந்த 15-5-2008 முதல் இன்று வரை எனது தொகுப்பினைப் படித்து வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இதுவரையில் நான் அமெரிக்காவில் (USA) கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜலஸில் இருந்து BLOG எழுதினேன். COMPUTER, LAPTOP என்றாலே என்னவென்று தெரியாத எனக்கு இது ஒரு புதிய அறிமுகம், அனுபவம். 6-5-08ல் இங்கு வந்த எனக்கு சுமார் 25 நாட்கள் 52" TV-யும், கம்யூட்டரில் சீரியல்கள், இசை (என் மகன் ஐயப்பன் போட்டுக் காட்டியது தான்) என்று பொழுது போனது தெரியாமல் போனது. அதன் பிறகு என் மகன் சிறிது சிறிதாக சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொண்டேன். ஆகவே இதில் வேறு அன்பர்கள் எழுதும் கருத்துக்களைப் பார்க்கவோ, படிக்கவோ தெரியாது. எனது மகனின் பணி, வீட்டு வேலைகளுக்கு இடையே எனக்கு, லேப்டாப்பை கொடுக்க இயலாமற் போனது. இடையில் கம்ப்யூட்டரும் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டது. நடுவில் உள்ளுர், வெளியூர் என்று பல இடங்களுக்கும், சுற்றிப் பார்க்க சென்று விட்டோம். ஆகவே என்னால் முடிந்த அளவுக்குத் தொகுப்பினைக் கொடுத்துள்ளேன், இதன் பிறகு நான் ஊர் திரும்பியதும், இறைவன் அருள் இருந்தால், தொடர்ந்து எழுதுகிறேன். இதுவரை எனக்கு தங்களது முழு ஒத்துழைப்பினைத் தந்த என் மகன் ஐயப்பனுக்கும், மருமகள் ரோஷிணிக்கும் எங்கள் குடும்பத்தாரின் நல் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் கூறி, பிரியா விடை கூறுகின்றேன்.

இது வரை நாங்கள் சென்ற இடங்களையும், பார்த்தவற்றையும், இங்கே குறிப்பிடுவது மிக முக்கியமானது என்பதால் அதையும் இங்கே தெரிவிக்கிறேன்.

மே 10 - Malibu Hindu Temple. மாலிபுவில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோவில்.
மே 17 - அண்ணன் தம்பி - மலையாளப் படம்.
மே 24 - யுனிவர்சல் ஸ்டுடியோஸ், (Water World என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ஒரு காட்சியை சுமார் 1/2 மணி நேரம் நடித்துக்காட்டினர் / Shrek 4D திரைப்படம் - 3D படம் போலல்லாது, எதிரே நீர் தெளிக்கும், நார்க்காலிகள் ஆடும் / Backdraft / Studio Tour - Tram ல் ஸ்டுடியோவைச் சுற்றிப் பார்த்தோம் / Animal Planet / Jurassic Park / Special Effects Stages / Terminator 2 - 3D திரைப்படம் முதலியன பார்த்தது

ஜுன் 1 - Getty Center - Museum.
ஜுன் 7 - Queen Mary Ship ஐப் பார்த்தது. Long Beach ல் சுமார் 3/4 மணி நேரம், பசிபிக் கடலில் Boat Trip.
ஜுன் 8 - Hollywood ஹாலிவுட்டைப் பார்த்தது.
ஜுன் 13 - தசாவதாரம் தமிழ் திரைப்படம்.
ஜுன் 21 - Lake Shrine Temple - பரமஹம்ச யோகானந்தா ஆசிரமம்.
ஜுன் 20 - Getty Museum.
ஜுன் 27 - Earth Quake - நில அதிர்வு - சுமார் 5.4 ரிக்டேர் அளவுக்கு ஏற்பட்டது.

ஆகஸ்டு 9 - மான்டிபெலோ - ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா ஸன்ஸ்தான்.
ஆகஸ்டு 16 - வெளியூர் செல்ல வேண்டி புறப்பட்டது. Las Vegas-ப் போக California State தாண்டி Nevada State-க்குப் போய் அங்கிருந்து லாஸ் வெகஸ் போனோம்.
ஆகஸ்டு 16 - LAS VEGAS - தங்கியிருந்த STRATOSPHERE HOTEL ல் SLOT MACHINE (சுதாட்டத்திற்கு பயன் படும் மிஷின்) ஐப் பார்த்து வியந்தது. 108 floor டவரில் elevator ல் 21 Miles Per Hour ஏறிப் பார்த்தது.
BELLAGIO - CASINO.
BELLAGIO - DANCING FOUNTAIN ! ஆச்சர்யம்.
PARIS - EIFFEL TOWER & CASINO (பொதுவாகவே இங்கு லாஸ் வேகஸில் குடி, சுதாட்டம், விபசாரம் இவைகளுக்கு தடை கிடையாது)
ஆகஸ்டு 17 - Stratosphere Tower Thrill Rides
BOULDER CITY- LAKE MEAD - HOOVER DAM வழியாக புறப்பட்டது.
HOOVER DAM ல் இருந்து, நெவேடா மானிலம் முடிந்து, அரிசோனா மானிலம் தொடங்குகிறது.
GRAND CANYON - SUNSET இரவு 7:14 க்குப் பார்த்தது.
ஆகஸ்டு 18 - GRAND CANYON -SUNRISE விடியற்காலை 5:40க்குப் பார்த்தது. சாதாரணமாக ஒரு நபர் நம் தமிழ் நாட்டில் அதிகபட்சமாக, நெடுந் தொலைவுக்குப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், சுமார் கொஞ்ச தூரம் தான் பார்க்க முடியும். சிறிது காலங்களுக்கு முன்னால் 90 மைல் தூரம் வரை கிராண்ட் கான்யலில் பார்க்க முடியுமாம். ஆனால் இப்பொழுது 21 மைல் வரை தான் பார்க்கமுடியுமாம். நாங்கள் இங்கு SOUTH RIM வழியே தான் பார்க்கமுடிந்தது.
YAVAPAI POINT MUSEUM -
GRAND CANYON பற்றிய IMAX படம் பார்த்தோம். IMAX FILM தமிழ் நாட்டில் பார்க்க முடியாது. காரணம் அதற்கான தியேட்டர் கிடையாது. 35 mm போல சுமர் 9 மடங்கும், சினிமா ஸ்கோப் போல 3 மடங்கும் பெரிய திரை. தென்னிந்தியாவில் ஹைதராபத்தில் மட்டுமே இந்த தியேட்டர் உள்ளது. இந்தியாவில் 4 இடங்களில் உள்ளது. நீளம் 72 அடி, உயரம் 53 அடி. உலகிலேயே மிகப் பெரிய தியேட்டர் ஹைதராபாத்தில் தான் உள்ளது.
சென்ற வழியே திரும்பி, HOOVER DAM வந்தோம். இரண்டு மலைகளுக்கு இடையே ஓடும் கொலராடோ நதியின் குறுக்கே கட்டப்பட்டது தான் HOOVER DAM.
மீண்டும், லாஸ் வேகஸ் வந்தது.
THE VENETIAN ஐப் பார்த்தது. உண்மையான வெனிசை பார்ப்பது போலவே இருந்தது. Canals எல்லாம் இருந்தது.
PARIS CASINO - பாரீஸில் கடை வீதியில் போவது போலவே இருந்தது. உண்மையான வானம் போலவே வானம் இருந்தது.
ஆகஸ்டு 19 - CAESARS PALACE பார்த்துவிட்டு ஊர் திரும்பினோம்.
BAKARSFIELD - CA வில் உலகிலேயே பெரிய தர்மா மீட்டர் பார்த்துவிட்டு ஊர் திரும்பி விட்டோம்.
ஆகஸ்டு 30 - SANFRANCISCO - GOLDEN GATE BRIDGE 4200 அடி பாலம். 4 வருட கட்டுமானத்திற்குப் பிறகு 1937 ல் தொடங்கப் பட்டது. இரண்டு 746 - Foot tall tower. orange, red Golden Gate Bridge.
ALCATREZ ISLAND (prison ) இருந்தது. இது பற்றிய ஆங்கிலப் படம் (Escape From Alcatraz) ஒன்றை TV-ல் பார்த்தோம்.
ஆகஸ்டு 31 - SANJOSE.-
ஆகஸ்டு 31 - WINCHESTER MYSTERY HOUSE.
THE TECH MUSEUM OF INNOVATION.
IMAX FILM: BLUE PLANET - 360 டிகிரி (அரை கோள வடிவம் ) யில் படம் பார்த்தோம்.
செப்டம்பர 1 - MYSTERY SPOT - Santa Curz, CA
சான் பிரான்சிஸ்கோ சென்ற பாதையெங்கும், திராட்சை, ஆரஞ்சு, கம்பு, பூண்டு, சோளம், எலுமிச்சை தோட்டங்கள். ஹெலிகாப்டரிலிருந்து மருந்து தெளித்தார்கள்.

அன்றாட பொருட்கள் வாங்க சென்ற கடைகள்
 • WALMART,
 • WALGREENS,
 • IKEA,
 • INDIAN STORES,
 • COSTCO & SHOPPING MALLS

சென்ற உணவு விடுதிகள் :
 • அன்னபூர்ணா - Culver City - CA
 • பஞ்சாபி ஹோட்டல் - Long Beach - CA
 • காந்திஜி ஹோட்டல் - Las Vegas - NV
 • இந்தியா பேல்ஸ் - Las Vegas - NV
 • ஹோட்டல் சரவண பவன் (சென்னையில் உள்ளதுதான்) - Sunnyvale - CA
 • திருப்பதி பீமாஸ் - Artesia - CA
 • ரஸ் ராஜ் - Artesia - CA

குறிப்பாக, தினமும் நாங்கள் Walking போவதற்கு மிக வசதியாக இருந்தது FOX HILLS PARK. அப்போது அறிமுகமான பெங்களூர் திரு சீத்தாராம அய்யர், மற்றும் பொள்ளாச்சி திரு, ஆறுமுகம் செட்டியார் குடும்பத்தார்கள், அதிலும் மிகக்குறிப்பாக எங்கள் அன்பு செல்வி. அர்ச்சனாவை எங்களால் வாழ்வில் மறக்கவே முடியாது.

இம்மாதம் 31 ம் தேதி வரையில் Blog Posts-களை எழுதி SCHEDULED ல் போட்டுள்ளேன் . அன்பர்கள் தொடர்ந்து படிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே சுகமான நினைவுகளோடும், கனமான நெஞ்சோடும் பிரியா விடை பெறுகிறோம். நன்றி, வணக்கம்!

Friday, October 3, 2008

பழமொழிகள் !

பிராணிகளிலேயே நிமிர்ந்து நடக்கும் பிராணி மனிதன் தான். அப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு நல்ல மனைவி வாய்க்காவிட்டால் அவனால் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.!
உணவுப் பொருளை உண்டக்கிக் கொடுத்து, தானும் உணவாவது மழை.!
அறிவு வளரக் கூடியது, ஞானம் நிலைத்து விடக் கூடியது.
மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
கேட்பதை எல்லாம் நம்பாதே, தெரிந்ததை எல்லாம் சொல்லாதே.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.
ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர் !
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லசமாகத் திரிகின்றன. நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.

பழமொழிகள் !

பிராணிகளிலேயே நிமிர்ந்து நடக்கும் பிராணி மனிதன் தான். அப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு நல்ல மனைவி வாய்க்காவிட்டால் அவனால் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.!
உணவுப் பொருளை உண்டக்கிக் கொடுத்து, தானும் உணவாவது மழை.!
அறிவு வளரக் கூடியது, ஞானம் நிலைத்து விடக் கூடியது.
மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
கேட்பதை எல்லாம் நம்பாதே, தெரிந்ததை எல்லாம் சொல்லாதே.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.
ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர் !
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லசமாகத் திரிகின்றன. நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.

Thursday, October 2, 2008

செய்தித் துளிகள்.

ஜனகராஜன் தனது மிதிலாபுரி முழுவதும் பற்றி எரிகிறது என்று சொல்லியும் அசைவற்றிருந்தார்.
பிரம்மா, மன்மதன், அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய நால்வரும் விஷ்ணுவின் குழந்தைகள்.
கீழே உள்ள 7 உலகம்:-அதலம், விதலம், சுதலம், ரஸாதலம், தலாதலம், மஹாதலம், பாதாலம்.
' த்ருதராஷ்ட் ரன்' என்றால் (ராஷ்ற்றம் ) அரசாட்சியை ( த்ருதன்) தாங்கியவன் என்று பொருள். அந்தப் பெயர் அவர் பிறந்தசமயத்திலேயே அவருக்குக் கொடுக்கப்பட்டது.
நாரதர் :- முற்பிறப்பில் வேதியர் ஒருவரின், வீட்டு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தவர்.
தசரத சக்ரவர்த்தியின் தந்தை பெயர் 'அஜன்' - கொள்ளுத்தாத்தா 'ரகு' , எள்ளுத்தாத்தா பெயர் 'திலீபன்'.
இராமன்-சீதை( ஜானகி)., லட்சுமணன்-ஊர்மிளை, குசன்-சம்பிகா, லவன்- சுமதி.
திரிமூர்த்திகள் பிர்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் மஞ்சள், கருப்பு, வெளுப்பு: இந்த மூவருடைய சக்திகளும் முறையே வெளுப்பு, மஞ்சள், கருப்பு நிறங்கள். பராசக்தி சிகப்பு நிறம்.
அகத்தியரின் மனைவி பெயர் உலோபாமித்திரை.

அறிவில் 3 பிரிவு.

1) நல்லறிவு:- நல்ல பேச்சு, செயல், திறன், சிந்தனை,மனிதரிடம் பழகுதல்.
2) புல்லறிவு:-10 காசு அறிவு இருக்கும் போது, 10 ரூபாய் அறிவு இருப்பதாக நினைத்துக் கொள்வர்.
3) கார் அறிவு:-திருடப்பழக்குவது இவ்வறிவு.
-திருக்குறள் முனுசாமி. ( கேசட் ).24-04-1989.

Wednesday, October 1, 2008

தையல்

ஔவையார் தம் ஆத்திச்சூடியில் 'தையல் சொல் கேளேல்.......' என்றார். பாரதியார் ' தையலை உயர்வு செய்.....என்று படினான். பாரதிதாசனோ ' பெண்ணோடு ஆண் நிகர்.....' என்று சமத்துவம் கண்டார்.

பாலைவனம்.

125 மில்லி மீட்டருக்கு குறைவான மழை அளவை, வருட மழையாக ( அளவாக) கொண்டுள்ள பகுதிகள்தாம் பாலைவனம் என அழைக்கப்படுகின்றன.

ஹம்சம்

நீரைப் பாலினின்று பிரித்து, பாலை மட்டுமே பருகும் பறவை ஹம்சம், அன்னம். மாயையான உலகிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பிரித்துத் தன்னுள் கிரகிக்கும் ஞானிக்கு ஹம்சன் என்றும் பரமஹம்சன் என்றும் பெயர்.
-ரா. கணபதி.

Tuesday, September 30, 2008

நவக்கிரக நாயகியர்.

சேலம் அருகே சுமார் 12 கி மீ . தொலைவில் உள்ள ' கந்தாஸ்ரமம்' என்னுமிடத்தில், நவக்கிரகங்களை அவர்களுடைய மனைவியருடன் வைத்திருக்கிறார்கள்.
ராகு ----------------ஸிமஹி.
சனி-----------------நீலா.
கேது---------------சித்ரலேகா.
புதன்--------------ஞானசக்தி தேவி.
குரு----------------தாரா.
சந்திரன்---------ரோகிணி.
சூரியன்---------உஷா,பிரத் உஷா.
சுக்கிரன்--------சுகீர்த்தி.
அங்காரகன்--சக்திதேவி.

Monday, September 29, 2008

ஆண்களின் பருவ நிலைகள் - 5.

1) சைசவம்-----------5 வயது வரையில்.
2) வாலிபம்-----------15 வயது வரையில்.
3) கௌமாரம்--------30 வயது வரையில்.
4) யௌவனம்--------40 வயது வரையில்.
5) வார்த்திகம் --------40 வயதுக்கு மேல்.
-முத்தாரம் ஏப்ரல் 24- 2 மார்ச் , 1989.

மகன், மைந்தன், பிள்ளை.

ஒரு குடும்பத்தை ஆதரிப்பவனுக்கு ' மகன்' என்றும், பல குடும்பங்களை ஆதரிப்பவனுக்கு ' மைந்தன்' என்றும் , பிரயோஜனமே இல்லாதவனுக்குப் ' பிள்ளை' என்றும் பெயர்.
-வாழும் வழி -வாரியார் சுவாமிகள்.

Sunday, September 28, 2008

'நுண்ணிய கால அளவுகள் '

பழந்தமிழர்கள் கண்ட நுண்ணிய கால அளவுகள்:
60 தற்பரை 1 வினாடி.
60 வினாடி 1 நாழிகை.
60 நாழிகை 1 நாள்.
3 3/4 நாழிகை 1 முழுத்தம்.
2 முழுத்தம் 1 யாமம்.
8 யாமம் 1 நாள்.
7 நாள் 1 கிழமை.
15 நாள் 1 பக்கம்.
2 பக்கம் 1 மாதம்.
2 மாதம் 1 பருவம்.
3 பருவம் 1 செலவு.
2 செலவு 1 ஆண்டு.
( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )
-முத்தாரம் ஜனவரி 27 - 2 பிப்ரவரி 1989.

Saturday, September 27, 2008

கல்வி.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.-ஜார்ஜ் ஸனவல்.
சிறந்த ஆசிரியர் மாணவன் நிலைக்கு இறங்கி வந்து, அவன் கண்களால் பார்த்து, அவன் காதுகளால் கேட்டு, அவனது அறிவாற்றலுக்கு ஏற்பப் புரிந்து கொண்டு உணர்த்தவும் செய்வான். -விவேகானந்தர்.
ஆசிரியர் ஆவதற்கு அறிவுத் திறன் மட்டும் போதது, நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்க வேண்டும்.-எமர்சன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது.எந்தப் பிரச்சனையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் பிறக்கிறது.-விவேகானந்தர்.
கல்வியின் நோக்கம் பொருள்களை அறிவது மட்டுமன்று : வேலைக்கு அடிப்படை அமைப்பதும் அல்ல: பெருந்தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதே.-ரஸ்கின்.
கல்வி ஏழைகளுக்கு மூலதனம். செல்வந்தனுக்கு வட்டி! -ஹேரேஸ்மன்.
ஒரு மாணவன் மோசமானவனாக மாறினால் அது அவனை மட்டுமே பாதிக்கிறது. ஒரு ஆசிரியர் தம் கடமையைச் சரியாகச் செய்யாது போனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிக்கப்படுகிறார்கள்.-சத்ய சாயி பாபா.
சிந்திக்காமல் படிப்பது வீண்: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து -கன்பூசியஸ்.
செய்யத் தெரிந்த மனிதன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.-கர்னல் கீல்.
தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்ப்பவரே குரு.
கல்வித் துறையின் மிகமுக்கியமான நோக்கம் தன்னம்பிக்கையை வளர்பதாகவே இருக்க வேண்டும்.-விவேகானந்தர்.
மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றியே அடங்கியுள்ளது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-எமர்சன்.

அட்டமா சித்திகள் !

1 ) அணிமா - உடலை அணுஅணுவாகப் பிரிப்பது. அணுவிலும் குறுகியதாக்கி யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தல்.
2 ) மஹிமா-இயற்கையாக அமைந்த உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக் கொள்வது.
3 ) லகிமா- உடலை லேசாக்கிக் கொள்வது.
4 ) கரிமா- உடலை கனமாக்கிக் கொள்வது.
5 ) ப்ராப்தி-விரும்பியதைப் பெறுவது.
6 ) ப்ராசாம்யம்-விருப்பம் தடைபெறாது நிறைவேறுதல்.
7 )ஈசித்வம்- அறிவுள்ளவைகளும் , இல்லாதவைகளும் ஆணைக்கு அடங்கி நடத்தல்.
8 ) வசித்வம்- பிறருக்கு வசப்படாமல் தன் விருப்பப் படி நடத்தல்.
-அழகிக்கு ஆயிரம் நாமம் ( சாவி . 27 11- 1988 ).

Friday, September 26, 2008

எண்களில் விந்தை

எண்களில் விந்தை ( 9 )
இரு கைகளையும் பக்கவாட்டில் இணைத்து விரல்களை விரியுங்கள் .இப்போது, இடக்கைப் பெருவிரலிலிருந்து வலக்கைப் பெருவிரல் வரை பத்து விரல்கள்...எந்த எண்ணை 9 ஆல் பெருக்கவேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ளுங்கள். மடக்கிய விரலுக்கு இடப்புறம் எத்தனை விரல்கள் ? வலப்புறம் எத்தனை விரல்க்ள் ? இரண்டையும் இணைத்தால் அதுதான் விடை.!

எண் ' 7 ' ( பிரமிக்க வைக்கும் ).
' 7 ' என்ற எண்ணை 10 முறை உபயோகித்து 10000 வரவழைக்க வேண்டும். முடியுமா ? ( கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் செய்யலாம் ).
77777-7777=70000=10000
----------------- ---------
7 7

Thursday, September 25, 2008

செய்திச் சுடர் !

மகாத்மா காந்தி தன் இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் உடையவர்.அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் தில்லையாடி கன்னியப்பச் செட்டியார்,
நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர்.மேலும் , மாவீரன் என்று புகழ்பெற்ற அவ்னுக்கு
பூனையைக் கண்டால் ஒரே பயம்.
டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 67.
சகோதரி நிவேதிதாவின் உண்மைப் பெயர் ' மார்க்கரெட் நோபிள் '.
முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றவர்- மகா கவி சங்கர குரூப்.
நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,ஹானிபால், பதினான் காம் லூயி .. இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்தாம்.
நெப்போலியனை ' விதியின் மைந்தன் ' என்று அழைத்தார்கள்.
மகா அலெக்ஸாண்டர் ஐரோப்பா மாசிடோனியாவில் பிறந்தார், ஆசியாவில் பாபிலோனில் இறந்தார், ஆப்பிரிக்காவில்
எகிப்தில் புதைக்கப்பட்டார்.

Wednesday, September 24, 2008

காரியங்கள்.

காரியங்கள் இரண்டு வகைப்படும்.
1) அகிருத்ய காரணம் , அதாவது செய்யாதன செய்தல்.
2) கிருத்ய காரணம், அதாவது செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல்.
இந்த இரண்டில் பெரியவர்கள், அகிருத்ய காரணம், அதாவது செய்யாதன செய்தலுக்குத்தான் முக்கியத்வம் கொடுக்கிறார்கள்.
ஏனெனில், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல் நம்மைத் தான் பாதிக்கும். பிறரைப் பாதிக்காது.
அதோடு செய்ய வேண்டிய காரியங்களை நாம் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
--ஆன்மிகம். 29-12-1990.

Tuesday, September 23, 2008

மார்கழி மாதம் !

மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதுகளில் வாசலில் -- நீர் தெளித்து -- கோலமிட்டு பூக்களை வைப்பர்.
பரங்கி, பூஷணி பூக்களை வைக்கும் காரணம், இவை காய்த்த பின் பூப்பவை. மற்றவை யெல்லாம் பூத்தபின் காய்ப்பவை.
--மங்கை மாத இதழ்.ஜனவரி, 1991.

பலா மரம் !

பலா மரம் பூக்காது காய்த்து கனி கொடுக்கும் என்பது.......
பலா மரத்தில் ஆண் பூக்கள் கிளைகளின் நுனியில் அமைந்திருக்கும். ஆனால் பெண் பூக்கள் தண்டின் அடிப்பகுதியிலும் மற்றும் தண்டின் மற்றப் பகுதிகளிலும் , தண்டின் மேலேயே காணப்படும். மற்ற தாவரங்களைப் போல்வே மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்னரே மலர் கருவுற்று கனியாகிறது.
--தினமணி சுடர். 18-12-1990.

Monday, September 22, 2008

நமது நாகரிகத்தின் எல்லை எது ?

இராவணனை இராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியாயிற்று. பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று..திருமுடி கட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஆனால் இராமன் நேராக அயோத்திக்கு வந்து விட வில்லை என்கிறார் வால்மீகி. நந்தியம்பதியில் காத்திருக்கிறானாம். ஏன் தெரியுமா ?.பரதனுடைய அனுமதியில்லாமல் தலை நகரத்திற்குள் நுழைவது முறையாகாது என்பதற்காக.
--அரசு பதில். குமுதம். 20-12-1990.

மரம்....வளர்ச்சி.

ஒரு மரத்தை தினமும் 30 வினாடிகள் அசைத்துக்கொண்டே வருவோமானால் அந்த மரம், தன் இயல்பான வளரும் தன்மையை விட்டு வேகமாகவும், உறுதியாகவும், பெரிதாகவும் வளர ஆரம்பித்துவிடும். ஐக்கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவரின் கண்டுபிடிப்பு இது,
--பாக்யா இதழ். 07-12-1990.

Sunday, September 21, 2008

உதடே, உதடே ஒட்டாதே !

நாம்.எதன் மீது பற்று அற்று இருக்கிறோமோ........அதனால் நமக்குத் துன்பம் கிடையாது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர் .....
' யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் '--என்று கூறினார்.
இப் பாடலைச் சொல்லும் போது நம் உத்டுகள் ஒட்டுவதில்லை
--புலவர் கீரன். 08-12-1990.

ஆண்டவன்.

ஓரு பொருளைச் சிருஷ்டிக்க, உபாதான காரணம், நியமித்த காரணம் என்று இரண்டு காரணங்கள் வேண்டும். குயவன் பானையைச் செய்கிறான் என்றால், மண் தான் உபாதான காரணம். குயவன் தான் நியமித்த காரணம்.
ஆண்டவன் வேறுஒரு பொருளைக் கொண்டு இந்த உலகத்தை சிருஷ்டித்தான் என்று சொன்னால் அது துவைதமாகிவிடும். ஆகவே ஆண்டவன் தன்னைக் கொண்டுதான் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் என்று சொல்லவேண்டும்.
--P. R. வைத்திய நா த சாஸ்திரி (ஆன்மிகம் )14-11-1990

Saturday, September 20, 2008

எறும்புகள்.

எறும்புகளில் பலவகை இருப்பினும் அவைகளில்' ஃபார்மிக்கா ஆன்ட் ' என்ற வகை எறும்புகளை ரஷ்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததில், அவைகளுக்கு 1 முதல் 60 வரை சுலபமாக எண்ணமுடியும் என்ற சோதனை முடிவைத் தெரிவித்துள்ளார்கள். இத்தனைக்கும் அவைகளுக்கு வாசனை திரவம் கிடையாது என்றும் அறுதியிட்டுள்ளார்கள்.
--இன்று ஒரு தகவல். வானொலியில் கேட்டது. 24-05-1990.

Friday, September 19, 2008

பழமொழிகள்.

நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம். ---பெர்சீன் பழ்மொழி.
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து
கொள்கிறோம்.

Thursday, September 18, 2008

சிந்தித்தலில் ஆண், பெண்.

ஆண்கள் யோசிக்கிற மாதிரி பெண்கள் சிந்திப்பதில்லை. பெண்களைப் போல சிந்தனை ஆண்களுக்கு இல்லை. பெண்கள் ஆரம்ப- நடு வயதுகளில் மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்திச் சிந்திக்கிறார்கள்.வயதாக வயதாக வலதுபுற மூளையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் அதற்கு நேர் மாறாக, தொடக்க-நடு வயதுகளில் வலது மூளையைப் பயன்படுத்திவிட்டு, வயதாக வயதாகத் தான் மூளையின் இருபுறங்களையும் உபயோகிக்கிறார்கள்.
-எலிகள் மத்தியில் ஆராய்ச்சி செய்த, கலிபோர்னியா பல்கலைக் கழகக் குழு.
--ஆனந்த விகடன். 13-05-1990.

Wednesday, September 17, 2008

P A K I S T A N -பாகிஸ்தான்

P-----------என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள முதல் எழுத்து.
A------------AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்.-
K------------காஷ்மீர் ( ! )
I ----------- INDUS RIVER.
S------------- SIND.
TAN----------BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று எழுத்துக்கள்.

நியாயமும், தருமமும்

நமக்குப் பிறர் என்ன செய்யக்கூடாது என்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது.இதுதான் 'நியாயம் '.
நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யவேண்டும். இது தான் 'தருமம்'.
--தினமணி கதிர். 02-12- 1990.

Tuesday, September 16, 2008

பிளாஸ்டிக்ஸ்.

ஒரு குறிப்புக்காக 'உலோகம்' என்று சொன்னாலும் பிளாஸ்டிக்ஸ் ( ஆங்கிலத்தில் PLASTICS என்று பன்மையில் குறிப்பிடுவதே தொழில் முறை வழக்கு) ஒரு ரசாயணக் கலவையே.நிலக்கரி, சுண்ணாம்புக்கல், பெட்ரோலியம்,உப்பு, தண்ணீர் போன்ற மூலப் பொருள்களில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக்ஸ் நுகர்பொருள் தயாரிப்புக்களில் மாயா ஜால இழுப்புக்களுக்கெல்லாம் ஒத்துவருகிறது.'பிளாஸ்டிக்ஸ்' பொருட்களின் மூலக்கூறு ' பாலிமர் ".காய்கறிகள், மிருகங்களின் கொழுப்பு போன்ற பொருட்களிலிருந்து இயற்கை வகை ' பிளாஸ்டிக்ஸ் ' தயாரிக்கும் முறை அமெரிக்காவில் 1845 - ல் தொடங்கியது.
--சாவித்திரி நடராஜன். தினமணி, வியாழன்- மர்ர்ச்-29, 1990.

Monday, September 15, 2008

ரத்தம் உறைவதை தடுக்க பாம்பு விஷம்.

பாம்பு விஷத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட இரண்டு பொருள்கள், மனிதரது ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டி தட்டிப் போவதை தடுக்கவும், கரைக்கவும் வல்லவை என கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் 'கிங் பிரவுன்' ( KING BROWN ) மற்றும் 'முல்கா' என்ற பாம்புகளின் விஷங்களிலிருந்து இப்பொருட்களை வேதியியல் முறைப்படி பிரித்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.' கிங் பிரவுன்' விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு கடி வாயிலிருந்து இரத்தம் கசிவது நிற்பதில்லை என்பதை இவர்கள் கவனித்தனர். ஆதலால் இரத்தம் உரையாமல் , கட்டி தட்டாமல் தடுக்கும் குணம் அவ்விஷத்துக்கு இருக்கிறது என்று அவர்கள் ஊகித்தனர்.
--தினமணி, பிப்ரவரி, 2 , 1990. வெள்ளிக்கிழமை.

Sunday, September 14, 2008

பத்தாம் பசலி.--அக்பர் !

பத்து வருடங்களுக்குண்டான் கணக்கைப் பார்க்கும் முறைக்கு பஸலி முறை என்று பெயர்.இந்த பஸலி முறையை அமுலுக்கு கொண்டு வந்தவர் அக்பர்.இதுவே பின்னால் பத்தாம் பஸலி என்று மருவியது.அதுவே பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நபர்களை பத்தாம் பஸலி என்று குறிப்பிடும் அளவுக்கு மருவியது.

சேக்கிழார் .

சேக்கிழார் இயற்றியப் பெரிய புராணத்தின் முதற்செய்யுள்:
"உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் ........." இதில் உள்ள மொத்த எழுத்துக்கள் 63. நாயன்மார்கள் மொத்தம் 63 என்பது தெளிவு. வேண்டும் என்று அவர் எழுதவில்லை.ஆராய்ச்சியில் புலப்பட்டது.
--- தொலைக் காட்சியில், கேட்டது.(24-04-1089 ).

Saturday, September 13, 2008

எண்களில் விந்தை

111,222,333,444,555,666,777,888,999 இந்த எண்கள் அனைத்தையும் மீதியின்றி வகுக்கக்கூடிய எண்ணைச் சொல்ல முடியுமா? ஆனால் எண் 1 என்றும் 111 என்றும் சொல்லக்கூடாது.
விடை:- 3 , 37 இந்த இரண்டு எண்களும் மீதியிறி வகுக்கும்.

Friday, September 12, 2008

சூரியன்--V I B G Y O R .

சூரிய வணக்கம் வேத காலத்திலிருந்தே உண்டு.
சூரியனும் - நட்சத்திரங்களும் சுயமாக ஒளிப் பிரகாசம் உடையவை. அசைவு இருக்கும் சந்திரன் இப்படி ஒளியுடன் தோன்றாது. மற்ற கிரகதங்களும் இப்படியே.
சூரியனுக்கு 'ஸப்தா சுவன் ' என்பது ஒரு பெயர். ஏழு குதிரைகள் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் ஓர் அசுவந்( குதிரை) தான். அதற்கு ஏழு பெயர்கள் இருக்கின்றன.!
அசுவம் என்பதற்கு கிரணம் என்பது அர்த்தம். சூரியனுக்கு ஏழு தினுசான கிரண்ங்கள் இருக்கின்றன என்பது தான் தாத்பர்யம். ஒரே கிரண்ம்தான் ஏழு தினுசாகப் பிரிகிறது. 'விப்ஜியார்' என்பது அது தான்.
( V I B G Y O R :- VIOLET-INDIGO- BLUE- GREEN - YELLOW - ORANGE- RED ).
--காஞ்சி ஜகத்குரு பெரியவர். ( மங்கை, ஜனவரி, 1987 ).

Thursday, September 11, 2008

விக்கல்.

விக்கல் என்பது அனிச்சை செயல். டயாஃப்ரம் சுருங்கும்போது மூச்சுக் குழலின் மீதுள்ள மூடியான ' க்ளோடிங்' அடைபடுகிறது. அதனால் விக்கல் ஏற்படுகிறது.
விக்கலுக்கு எந்த விதமான காரண காரியங்களுமே இல்லாமல் கூட இருக்கலாம். ஏதாவது வியாதியின் அறிகுறியாகக்கூட இந்த விக்கல் இருக்கலாம். மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாமை, மனக் குழப்பம், குடல் வாதம் , அஜீரணம் போன்றவை கூட விக்கல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இரத்ததில் யூரியா அதிகரிக்கும் போது அதைக் குறைக்கத் தண்ணீர் தேவைப் படுகிறது.அதன் அடையாளம் தான் இந்த விக்கல். தண்ணீர் குடிப்பது, அதிர்ச்சியான செய்திகளை கேட்பது எல்லாம் மான்சீகமாக ஏற்படும் விக்கல்களைத்தான் நிறுத்த உதவும்.
--டாக்டர். நிர்மலா செந்தில்நாதன். சாவி இதழ், 11-01-1987.

Wednesday, September 10, 2008

தாஜ்மஹால் -- ஷாஜஹான்

.
காதலிக்காகக் காதலன் தாஜ்மஹால் என்ன? எதையும் கட்டுவான். ஏனென்றால் அது ஒரு போதை உலகம். ஆனால் ஒரு கணவன் தன் மனைவியின் -- அதுவும் 14 பிள்ளைகளின் தாயின் நினைவாக இப்படியொரு அற்புதத்தைக் கட்டுவது சாதாரணமான செயலல்ல. இந்தப் பார்வையிலும் தாஜ் ஒரு உலக அதிசயந்தான்.
"சரணடையா விட்டால் தாஜ்மஹாலைத் தகர்த்துவிடுவேன்......" என்று மிரட்டிய மகனுக்கு அஞ்சி, அரசைத் துறந்தவன் ஷாஜஹான். காதலிக்காக மகுடத்தைத் துறந்த ஆங்கில நாட்டு அரசனைவிட, இறந்து விட்ட மனைவியின்
நேசத்திற்காக அரசைத் துறந்த ஷாஜஹான் எவ்வள்வு உயர்ந்து நிற்கிறான்.
-- அப்துல் ரகுமான். ( ஜூனியர் விகடன், 14-05-1986 ).

Tuesday, September 9, 2008

உணவு அடிப்படையில் மனிதர்களின் 12 வகையினர்:

1) விண் காந்த அலைகளை மட்டும் உண்பவர்கள் ----சூப்பர் மேன்.
2 ) காற்றை மட்டுமே உண்பவர்கள்,
3) தண்ணீர் மட்டுமே சாப்பிடுபவர்,
4) தனிக் கொட்டைப் பருப்பு உண்பவர்கள்-----தேங்காய் மட்டுமே உணவு,
5) கொட்டைப் பருப்பினர்-----தேங்காய்,முந்திரி, வாதாம், பிஸ்தா முத்லியன.( சிறப்பாக இருப்பர்,)
6) தனி கனி உண்பவர்---ஒரு வேளை ஒரே கனியை உண்பவர்.--(உடல், உள்ள நலம் சிறக்கும் )
7) பழங்களை மட்டுமே உண்பவர்---மிகத் தூய்மை உள்ளமும், உடலும் உள்ளவர்.( யோகி, முனிவர்),
8) பச்சைத்தாவர உணவினர் --நோயற்ற ஆரோக்கியமும், நல்ல பண்பும் உடையவர்,
9) பால் சேர்க்காத சைவ உண்வினர்.--பொறுமை, பண்பு, அமைதியுடையவர்கள், 1
10) பால் சேர்ந்த சைவ உணவினர்---போறுமை உள்ளவர்கள்--நோய் வரும்,
12) புலால் மட்டுஃமே உண்பவர்கள்--மிகவும் கடைத்தரமான் மக்கள்.
---தினமலர் (13-05-1986.

Monday, September 8, 2008

கடிகார நேரம் --லிங்கன் !

ஆபிரஹாம் லிங்கன் மரணம் அடைந்தது இரவு மணி 10:08. அப்போதைய அமெரிக்க அரசாங்கம், கடிகார கம்பெனிகள் அந்த நேரத்தைத் தங்கள் விளம்பரங்களில் காண்பித்தால் சலுகைகள் அளிப்பதாக அறிவித்தது. அதன்படி அனேக கடிகார விளம்பரங்கள் 10: 08 என்ற நேரத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தன. இந்த வழக்கம் மெதுவாக உலகம் முழுவதும் பரவியதுடன், இப்போதும் பெரும் பாலான விளம்பரங்களில் முட்கள் 10:08 என்றே காட்டிக்கொண்டிருக்கின்றன.

Sunday, September 7, 2008

ஸகாரா--ஸாகரம்--மார்வாடி !

இப்போது ஸகாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்திரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக் காரர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு இராமாயணக் கதை தெரிந்திருக்கலாம்.
ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள்தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்திரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது. ஸகர புத்திரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்திரத்திற்கு ' ஸாகரம்' என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.ஸாகரம் என்ற பெயர் மருவி ' ஸகாரா' என்றாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட பாலைவனமாகத்தான் இருக்கிறது. பாலைவனத்திற்கு ஸம்ஸ்கிருதத்தில் 'மருவாடிகா' என்று பெயர். இதனால் தான் ராஜஸ்தான் காரர்களை 'மார்வாடி' என்று நாம் சொல்கிறோம்.
--அருள் வாக்கு. ஜகத்குரு காஞ்சி காமகோடி.

Saturday, September 6, 2008

" நவாவரண பூஜை "

மேரு அல்லது ஸ்ரீ சக்கரத்தில் ஒன்பது (நவ ) ஆவரணங்கள் இருக்கின்றன. அவை:-
1) சதுரம் 2 ) 16 கமலம். 3) 8 கமலம். 4) 14 முக்கோண்ம் . 5) 10 முக்கோண்ம். 6 ) 10 முக்கோண்ம். 7 ) 8 முக்கோண்ம்.
8 ) 9 )நடு முக்கோண்ம் . இவைகளில் உள்ள தேவதைகளைப் பூஜித்து முடிவில் ராஜராஜேஸ்வரிக்கு பிந்துவில்
பூஜை செய்வார்கள்

" சாம தான பேத தண்டம் "

சாமம்-----------இன்சொல் கூறல்.
தானம்----------விரும்பிக் கொடுத்தல்.
பேதம்-----------மிரட்டுதல்.
தண்டம்--------த்ண்டித்தல்.

பாரதத்தில் காணப்படும் எண் பொருத்தங்கள் !

1) வியாச பாரத்த்தில் பருவங்கள் எண் ------------18
2) பகவத் கீதையில் அத்தியாயங்களின் எண்---18
3) பாரதப் போர் நடைபெற்ற நாட்களின் எண்---18/
4) பாரதப் போரில் போரிட்ட சேனைகளின் எண்-18.

Friday, September 5, 2008

"நியாயக் களஞ்சியம் "

அஜகள ஸ்தந நியாயம் :-ஆட்டின் கழுத்தில் முலை வடிவமாகத் தொங்கும் ஊன் பிண்டம் பயனற்றதாக இருப்பது போல உலோபி கையிலிருக்கும் பொருள் பயனற்றதாக இருக்கிறது.
அஸிதார விரத நியாயம்:- இளைஞன் ஒருவன் , இளமையுள்ள பெண்னொருத்தியுடன் ஒரே படுக்கையில் இருப்பினும் அவள் பால் சிந்தை செல்லாதவனாய் புலனை அடக்கியிருத்தல்.இதுவே 'அஸிதார விரதம்.' பரதன் 14 ஆண்டுகள் கோசல நாட்டுக்கு வெளியில் (அயோத்திக்கு வெளியில் ) இருந்து ஆட்சி செய்து வந்ததையும், பின்பு இராமனிடம் ஒப்புவித்ததையும் இதுசேரும்.
1)அசுணம் இபம் விட்டில் மீன் வண்டு நியாயம் :-( 5 - ம் புலன் நுகர்ச்சியால் அழிகின்றவை ).
அசுணத்தைக் கொல்ல விரும்புவோர், முதலில் இனிய யாழை ஒலிப்பர். அவ்வொலி கேட்டு அது இன்புற்றிருக்கையில் திடீரெனப் பறையை அடிக்கவே , வெறுக்கத்தக்க பறையோசைக் கேட்டு அது மாய்ந்து விடுமாம்.
2 )யானை, ஊறு ஆகிய புலனால் அழிவது.(ஸ்பரிசத்தால் அழிவது ). குளிர்ந்த ஸ்பரிசம் வேண்டிச் சேற்றில் இறங்கிக் கால் பதிந்து மீளமுடியாமல் மாளும்.
3) விட்டில் பூச்சி ஒளியால் அழிவது. விளக்கின் ஒளியில் மயங்கி அதில் விழுந்து எரிந்து அழியும்.
4) மீன் சுவையால் அழிவது.
5) வண்டு கந்தத்தால் (வாசனை) அழிவது. வாசவை மிகுதியால் தனக்குப் பகையாகிய சண்பகம், வேங்கை முதலிய மலர்களில் மொய்த்து உயிரிழக்கும். இவை எல்லாவற்றிற்குமே ஒவ்வொரு புலன் களே அழிவுக்குக் காரணம்.ஆயின் மக்களோ வெனில் ஐம்புல நுகர்ச்சிக்கும் ஒருங்கே இடமாகிய பெண்ணின்பால் ஆசை வைத்து அழிகின்றனர்.
"கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிவும ஐம்புலனும்
ஒந்தொடி கண்ணே உள " -- குறள்.

Thursday, September 4, 2008

துஷ்டன் செய்யும் நல்ல காரியம் !

குணங்களைப் பார்த்துத் தான் நாம் இரக்கம் காட்ட வேண்டும் .ஏகாதசி விரதம் நல்லதுதான். ஆனால் புலி ஏகாதசி விரதம் (பட்டினி ) இருந்தால் மறு நாள் துவாதசி பாரனைக்கு (விடியற்கால போஜனத்துக்கு ) பசு மாட்டை அடித்துத் தின்று விடும். துஷ்டன் நல்ல காரியம் செய்தாலும் அது தீமையாகத்தான் முடியும்.
--சாண்டில்யன். ( விஜயமகாதேவி ) 09-12- 1985.

ராமன் மார்பு காயம் !

தண்ட காரண்யத்தில் கரதூஷணர்களுடன் போரிட்டு , வெற்றி கொண்ட ராமன் மார்பில் பல காயங்களுடன் சீதையிடம் வந்தான். சீதை அவன் காயங்களுக்கு மருத்துவம் செய்தாள். எப்படியென்றால், "பர்த்தாரம் பரிவுஸ்வஜே" அதாவது "கணவனை இறுக அணைத்தாள் . அதுவே மருந்தாயிற்று. மருத்துவம் பார்க்கும் (கணவனுக்கு ) முறை அதுதான்.
--வால்மீகி. ( சாண்டில்யன் விஜயமகாதேவி ) குமுதம் 23-05-1985 )

Wednesday, September 3, 2008

பீமன் !

கண்ணன் தூது போக வேண்டிய நிலையில அவரிடம் பீமன், " ஐந்து அம்சங்களைக் கண்டு பயந்து துரியோதனன் எங்களுக்கு நாடு கொடுத்தாக வேண்டும்! ! " என்று கூறுகிறான்.அந்த ஐந்து அம்சங்கள் எவை என்றும் குறிப்பிடுகிறான்.....
" என்னுடைய சத்ருகாதினி என்ற கதையின் வலிமைக்கு அவன் அஞ்சியாக வேண்டும். இணையில்லாத வில் வீரனான அர்ஜுனனின் காண்டீபத்திற்கு அவன் பயப்பட்டாக வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து போருக்கு வருவோம் என்ற எங்களுடைய இணைந்த பலம் அவனுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். கண்னன் எங்களுக்குத் துணையாக இருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு கலக்கத்தை அளிக்கும். பாஞ்சாலி சபதமிட்டுத் தன் கூந்தலைக் கலைத்து நிற்கும் தோற்றம் அவனுடைய நெஞ்சில் அச்சத்தை எழுப்பும் ! ". என்றான்.
இதில் தன் பலம், துணை பலம், தன் பலமும் - துணை பலமும் சேர்ந்த கூட்டு வலிமை, தெய்வ பலம், கற்பின் பலம் ஆகியவை வரிசையாக இடம் பெருகின்றன.
-- புலவர். கீரன். (ஞான பூமி. மே, 1985 ).

Monday, September 1, 2008

நதி - நதம்!

மேற்கிலிருந்து கிழக்காக ஓடுவதற்கு நதி என்று பெயர். கிழக்கிலிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பெயர்.

உங்கள் வயதை சரிபார்க்க....

உன்கள் முகவரியின் நம்பரை (வீட்டு எண் ) எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டால் பெருக்கவும். ஐந்தைக் கூட்டுங்கள். அதை 50 ஆல் பெருக்கவும் .அதனுடன் உங்கள் வயதைக் கூட்டவும் .ஒரு வருடத்தின் மொத்த நாட்களான் 365 ஐ அந்த எண்ணுடன் கூட்டுங்கள். வரும் தொகையிலிருந்து 615 ஐக் கழிக்கவும்.
தற்போதைய விடையின் இறுதி இரு எண்கள் உங்கள்வ் வயதைக் குறிக்கும். மற்ற எண்கள் உங்கள் வீட்டு எண்ணைச் சொல்லும்.
-நன்றி:- இதயம் பேசுகிறது. ( 03-11-1991 )

Saturday, August 30, 2008

!சீதையின் தந்தை பெயர் !

சீதையின் தந்தை பெயர் 'ஜனகர்' என்றுதான் நாம் எல்லோரும் அறிவோம்.. ஆனால்,' ஜனகர்' என்பது நேரு, படேல் என்பது போல் குடும்ப்ப் பெயர்.ஜனகர் என்றால் அப்பா, ஜனனி என்றால் தாயார்.
ஜனகருடைய முழுப் பெயர் 'சீரத்வஜ ஜனகர்'. 'சீர' என்றால் மரவுரி. 'த்வஜம்' என்றால் கொடி. மரவுரியைக் கொடியாகக் கொண்டவர். சீதையின் தாயார் பெயர் 'சுநயனி'.
வால்மிகியும் , கம்பரும் கூறாத இந்தப் பெயர்கள் பாகவதத்தில் பரிஷீத் மகாராஜனுக்கு சுகர் கூறிய இராமாயணத்தில் வருகிறது.
--வாரியார் சுவாமிகள்.

Friday, August 29, 2008

கண்ணகி !

சிலப்பதிகார கதையை இசுலாமியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், ஜ்னாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:
"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".
விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

Thursday, August 28, 2008

ஆடவன் பருவம் அடைவது எப்போது ?

பெண்களுக்குப் பருவம் வந்து விட்டது ஒரு குறிப்பிட்ட நாளில் உணரப்படுகிறது. ஆண்களுக்கு அப்படி இல்லையே ! ஆடவன் பருவமடைந்ததை எப்படி தீர்மானிப்பது !
மாமரம் பருவமடைந்து விட்டதை அதன் புஷ்பங்கள் காட்டுகின்றன. ஆனால், பலா மரம் பருவமதைந்து விட்டதை எது காட்டுகிறது?
ஆடவன் பருவம் அடைந்து விட்டதை அவனது கண்களே வெளிப்படுத்துகின்றன. பலா மரத்தில் காய்கள் வெளிப்படுத்துவது போல்.
--கண்ணதாசன். தினமலர் தீபாவளி மலர்.1994.

Wednesday, August 27, 2008

இராமர் !

"ஒரே சொல், ஒரே இல், ஒரே வில் !" என்று பெயர் பெற்றவன் இராமன்.
இரமர் வனவாசத்தின் போது தங்கியிருந்த இடம் 'பஞ்சவடி'. கோதாவரியின் கிழக்குக் கரையில் 5 ஆலமரங்கள் அமைந்த இடம். 'நவசிக' என்பதன் திரிபு 'நாசிக்'. 9 மலைகளின் உச்சியில் இருப்பதால் 'நவசிக ' எனப்பட்டது. சூர்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டிய இடமும் இதுதான்.

புலவன் !

பரிசு கேட்டு வந்த ஒரு புலவனிடம் அரசன், இராமாயணத்தையும், மகா பாரதத்தையும் ஒவ்வொரு வரியில் சொல்லும் ! என்றான். புலவன் சொன்னது:
"பெண்ணால் கெட்டது இராமாயணம். ! மண்ணால் கெட்டது மகா பாரதம் !"